Published:Updated:

ரொனால்டோ Vs ஸ்பெயின்... வெல்லப்போவது யார்?! #PORESP #WorldCup

ரொனால்டோ Vs ஸ்பெயின்... வெல்லப்போவது யார்?! #PORESP #WorldCup

ரொனால்டோ Vs ஸ்பெயின்... வெல்லப்போவது யார்?! #PORESP #WorldCup

ரொனால்டோ Vs ஸ்பெயின்... வெல்லப்போவது யார்?! #PORESP #WorldCup

ரொனால்டோ Vs ஸ்பெயின்... வெல்லப்போவது யார்?! #PORESP #WorldCup

Published:Updated:
ரொனால்டோ Vs ஸ்பெயின்... வெல்லப்போவது யார்?! #PORESP #WorldCup

ரொனால்டோ Vs டீ கே?, ரொனால்டோ Vs ரமோஸ்?,  டியாகோ கோஸ்டா Vs ரூய் பட்ரிசியோ?, ஃபெர்னாண்டோ ஹியரோ Vs ஃபெர்னாண்டோ சான்டோஸ்? இனியஸ்டா Vs செட்ரிக் சோரஸ்? La Roja Vs Selecção? பெஸ்ட் எவர் Iberian derby?முன்னாள் உலகச்  சாம்பியன் Vs நடப்பு யுரோ சாம்பியன்? ஜுலன் லோபெடெகி Vs ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் ஈகோ? இந்த உலகக் கோப்பையின் முதல் இன்ட்ரஸ்டிங் கேம்? அட... ஸ்பெயின் Vs போர்ச்சுகல் மேட்ச்சில் இத்தனை விஷயங்களா? #WorldCup #PORESP

தென்னாப்பிரிக்காவில் நடந்த 2010 உலகக் கோப்பையில் ஸ்பெயின் சாம்பியன். 2014-ல் அவர்கள் குரூப் சுற்றைத் தாண்டவில்லை. ரஷ்யாவில் 2018 உலகக் கோப்பை தொடங்குவதற்கு இரண்டு நாள்களுக்கு முன், பயிற்சியாளர் ஜுலன் லோபெடெகியைப் பதவியிலிருந்து நீக்கியது ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பு. லோபெடெகியை ரியல் மாட்ரிட் கிளப் மேனேஜராக அறிவித்த இரண்டு நாள்களில், உலகக் கோப்பை என்றும் பாராமல் தங்கள் அணியின் பயிற்சியாளரைத் தூக்குவது என்பது தீர்க்கமான முடிவு. 

பயிற்சியாளரை மாற்றியதுதான் இப்போதைக்கு இந்த உலகக் கோப்பையின் ஹாட் டாபிக் என்றாலும், ஸ்பெயின் - போர்ச்சுகல் மோதல் அதற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. இரு அணிகளும் உலகக் கோப்பையில் இதற்கு முன் ஒரேயொரு முறை மட்டுமே மோதியுள்ளன. 2010 உலகக் கோப்பை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஸ்பெயின் வெற்றிபெற்றது. இந்தமுறை குரூப் `பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த இரு அணிகளும் மோதும் போட்டி சோச்சியில் இன்று இரவு 11.30 மணிக்குத் தொடங்குகிறது. பிரபலங்கள் நிறைந்த பரபரப்பான போட்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2016 யுரோ கோப்பையில் இத்தாலியிடம் தோல்வியடைந்தபின், அடுத்த 20 போட்டிகளில் ஸ்பெயின் தோற்றதே இல்லை. அதற்கு மேனேஜர்ஜுலன் லோபெடெகியும் ஒரு காரணம். ஆனால், இன்று அவர் இல்லை. முற்றிலும் புதிய மேனேஜர். ஃபெர்னாண்டோ ஹியரோ இதற்கு முன் வேறு எந்த தேசிய அணிக்கும், பெரிய கிளப்புக்கும் மேனேஜராக இருந்ததில்லை. ஸ்பெயின் இரண்டாம் தர கிளப்புக்குப் பயிற்சியாளராக இருந்தது மட்டுமே அவரது ஒட்டுமொத்த அனுபவம். இதெல்லாம் ஒரு பிரச்னையா? ஸ்பெயின் அனுபவமும், இளமையும் நிறைந்த அணி. இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லக் கூடிய தகுதி இருப்பதாகக் கருதப்படும் அணிகளில் ஒன்று. எந்தப் பயிற்சியாளராக இருந்தாலும், எந்த கேம் பிளானாக இருந்தாலும் அவர்களால் எளிதில் ஆட்டத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். ஏனெனில், பெரும்பாலான வீரர்கள் சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடியவர்கள்.

2014 செப்டம்பரில் போர்ச்சுகல் மேனேஜராக ஃபெர்னாண்டோ சான்டோஸ் பொறுப்பேற்றபின், 24-ல் ஒரு போட்டியில் மட்டுமே போர்ச்சுகல் தோல்வியடைந்துள்ளது. போர்ச்சுகல் அணியின் வெற்றி முழுக்க முழுக்க கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவைச் சுற்றி மட்டுமே கட்டமைக்கப்படுகிறது. போர்ச்சுகல் சார்பாக 150 போட்டிகளில் விளையாடியுள்ள ரொனால்டோ 81 கோல்கள் அடித்துள்ளார். கிளப் அளவில் எல்லா கோப்பைகளையும் வென்றுள்ளார். தேசிய அணிக்காக யூரோ கோப்பையும் வென்றாகிவிட்டது. அவரது CV-யில் வேர்ல்டு கப் மட்டுமே மிஸ்ஸிங். ரொனால்டோவுக்குத் தற்போது 33 வயதாகிறது. அநேகமாக, இதுவே அவரது கடைசி உலகக் கோப்பை. இதுவரையிலான உலகக் கோப்பையில் 3 கோல்கள் மட்டுமே அடித்திருக்கும் ரொனால்டோ, இந்தமுறை என்ன செய்யக் காத்திருக்கிறார் என்பதே போர்ச்சுகல், CR7 ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

பீக்கே, செர்ஜியோ ரமோஸ் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தால், ஸ்பெயின் டிஃபன்ஸை உடைப்பது ரொம்பவே கஷ்டம். இந்த ஒரு மாதத்தில் சின்ன விரிசல் ஏற்பட்டாலும், நெதர்லாந்து - ஸ்பெயின் (2014 உலகக் கோப்பை) போட்டியின்போது கிடைத்த ரிசல்ட்டே கிடைக்க வாய்ப்புள்ளது. மிட்ஃபீல்டைப் பொறுத்தவரை அவர்கள் பயங்கர ஸ்ட்ராங். பொஸ்கிட்ஸ், அல்கன்டாரா இருவரும் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்துவர். இனியஸ்டா - டேவிட் சில்வா காம்போவே வேற லெவல். இவர்களுடன் இஸ்கோவும் கூட்டணி சேரும்போது மேஜிக்குக்குப் பஞ்சம் இருக்காது. வெறுமனே மேஜிக்கை மட்டுமே வைத்து கோப்பை வெல்ல முடியாதல்லவா? ஆம், ஸ்ட்ரைக்கர் டியாகோ கோஸ்டா முன்புபோல கோல் அடிப்பதில்லை. ஸ்பெயினின் பலவீனம் இதுவே.

போர்ச்சுகல் - ரொனால்டோ ஆடினால் பலம். இல்லையேல் கஷ்டம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism