Published:Updated:

‘ஓர்க் ஹார்ஸ்’ முத்திரை.. தோனி - கோலி கேப்டன்சி.. மனம் திறந்த இஷாந்த் சர்மா!

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பிரச்னையை உங்களுடைய குறைகளை சொல்ல நிறைய பேர் இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் அதற்கான தீர்வு இருக்காது.

இஷாந்த் சர்மா
இஷாந்த் சர்மா

எல்லோரும் உங்களுடைய பிரச்னைகளை சுட்டிக்காட்டுவார்கள் இங்கு யாரும் அதற்கான தீர்வுகளை கூற மாட்டார்கள். என்னுடைய பிரச்னையை எல்லோரும் கூறினர் ஆனால் அவர்களிடம் அதற்கான தீர்வு இல்லை என இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா கூறியுள்ளார். ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தன்னுடைய பந்துவீச்சு மாற்றம். தோனி,கோலியின் கேப்டன்சி உள்ளிட்ட பல விஷயங்களை பேசியுள்ளார். தோனி, கோலி வேகப்பந்துவீச்சாளர்களை கையாளும் விதம். டிரஸ்ஸிங் ரூம் சூழல்கள் என நிறைய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இஷாந்த் சர்மா
இஷாந்த் சர்மா

“என்னுடைய கிரிக்கெட் வாழ்வில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துள்ளேன். எதுவும் நிலையானதாக இருந்தது இல்லை. இதன்காரணமாக நான் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளானேன். 2010-ம் ஆண்டு முதலே ஒருவித அழுத்ததுடனே இருந்தேன். இதன்காரணமாக பல இரவுகள் என்னுடைய தூக்கத்தை தொலைத்தேன். அந்த அழுத்தங்கள் உங்களுக்கு எதிர்மறையான எண்ணங்களை கொடுக்கும். அதனால் இப்போது நான் சிந்திப்பதையே நிறுத்திவிட்டேன். நான் வீசும் ஒவ்வொரு பந்துகளிலும் 100 சதவிகித அர்ப்பணிப்போடு தான் வீசுவேன்.

என்ன செய்யவேண்டும் என சொல்ல இங்க யாரும் இல்லை. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பிரச்னையை உங்களுடைய குறைகளை சொல்ல நிறைய பேர் இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் அதற்கான தீர்வு இருக்காது. பிரச்னையை அறிவதுபோல் அதற்கான தீர்வை அறிவதும் முக்கியமானதாகும். மக்களால் உங்களின் பிரச்னைகளை கூற முடியும் ஒரு பயிற்சியாளர் தான் அதற்கான தீர்வுகளை தருவார். என்னுடைய பந்துவீச்சின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என எல்லோரும் சொன்னார்கள். எப்படி என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை.

தோனி, இஷாந்த் சர்மா
தோனி, இஷாந்த் சர்மா

கவுண்டி கிரிக்கெட் விளையாடும்போது தான் அதற்கான விடை கிடைத்தது. ஜேசன் கில்லெஸ்பி தான் அதற்கான தீர்வுகளை வழங்கினார். எனது பந்துவீச்சு வேகத்தை எவ்வாறு அதிகரிக்க வேண்டும் என்பதை இப்போது உணர்ந்துள்ளேன். தோனி தலைமையில் நாங்கள் விளையாடும் போது எங்களில் சிலருக்கு போதிய அனுபவம் இல்லாமல் இருந்தது. இதன்காரணமாக சுழற்சி முறையில் பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு பந்துவீச்சு குழுவாக சீரான தன்மை இல்லாமல் இருந்தது.

விராட் கோலி கேப்டன்ஷியின் போது நாங்கள் கொஞ்சம் அனுபவம் பெற்றிருந்தோம். இப்போது பும்ரா உட்பட 3-4 பண்டுவீச்சாளர்கள் இருப்பதால் ஆலோசனை செய்ய கலந்துரையாட முடிகிறது. இதற்கு முன்பு 6-7 பந்துவீச்சாளர்கள் இருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை. சுழற்சி முறையில் தேர்வானதால் அதிக நேரம் வீட்டில் செலவழிக்கும்படி இருந்தது. இப்போது அதிகம் விளையாடுகிறோம். ஓய்வறையில் கூடி பேசுகிறோம். இப்போது அணியினருடன் அதிக நேரம் செலவழிக்கிறோம்.

இஷாந்த் சர்மா
இஷாந்த் சர்மா

‘ஓர்க் ஹார்ஸ்’ என்றொரு முத்திரை குத்தியதால் சீனியர் வீரர்கள் நான் 20 ஓவர்கள் வீச வேண்டும் என எதிர்ப்பார்த்தனர். அப்படி பந்துவீசும் போது 60 ரன்களை விட்டுக்கொடுத்தாலும் நீ இன்னும் 3 விக்கெட்டுகள் வீழ்த்துவாய் என்பார்கள். அந்த வார்த்தைகள் எனக்குள் புகுந்துக்கொண்டது. 20 ஓவர் வீச வேண்டும் என்பது தான் என் மனதில் இருக்கும்.

பேட்ஸ்மேன்கள் செட்டாகும் வரை எனது பந்துகளை ஆட மாட்டார்கள். செட்டானது அடிக்கத் தொடங்குவார்கள். அது இறுதியில் 80 ரன்களை விட்டுக்கொடுப்பதில் முடிந்தது. முன்பு எனக்கு எந்த பொறுப்பு இல்லை. இப்போது எனக்கு பொறுப்பு இருக்கிறது. பேட்ஸ்மேன்களை அவுட்டாக்க வேண்டும். எப்போது பந்துவீச அழைத்தாலும் விக்கெட் எடுக்க வேண்டும். முன்பு எனக்கு போதிய அனுபவம் இல்லை ஆனால் இப்போது என் பணி என்னவென்று எனக்கு தெரியும்.

இஷாந்த் சர்மா
இஷாந்த் சர்மா

அதற்காக ஜாகீர்கான், கபில் தேவ் ஆகியோருடன் என்னை ஒப்பீடு செய்யவில்லை. அவர்கள் நாட்டுக்காக நிறைய செய்துள்ளனர். என்னை பொறுத்தவரையில் நான் பெற்ற அனுபவங்களை உங்களுக்கு கூற முடியும். என்னுடை ஜூனியர்களுக்கு என்னுடைய அனுபவத்தை கடத்துவேன் அதுதான் முக்கியமானது. ” என்றார்.