Published:Updated:

ஒரே ஆண்டில் இரண்டாவது தங்கப்பதக்கம்!- சீனாவில் ஜொலித்த இளவேனில்

இளவேனில்
News
இளவேனில் ( Twitter/NRAI )

சர்வதேச உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் 2-வது முறையாக தங்கம் வென்றுள்ளார் இளவேனில்!

Published:Updated:

ஒரே ஆண்டில் இரண்டாவது தங்கப்பதக்கம்!- சீனாவில் ஜொலித்த இளவேனில்

சர்வதேச உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் 2-வது முறையாக தங்கம் வென்றுள்ளார் இளவேனில்!

இளவேனில்
News
இளவேனில் ( Twitter/NRAI )

`இளவேனில் வாலறிவன்' -  அழகான இந்த தமிழ்ப் பெயரை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம், பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனேரியோவில் நடந்த உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று வந்தவர் இளம் வீராங்கனை இளவேனில். 

 Elavenil
Elavenil

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் பங்கேற்று விளையாடி வருகிறார். தற்போது சீனாவில் நடைபெற்று வரும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். 

பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் பெற்று சாதனை படைத்தார். இன்று நடைபெற்ற போட்டியில் 250.8 புள்ளிகள் பெற்றவர், மீண்டும் ஒரு முறை தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.

கடலூர் மாவட்டம் காரமணிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவேனில். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கால்நடை ஆய்வாளர் உருத்திராபதி - கிருஷ்ணவேணி தம்பதியின் மகன் வாலறிவன் மகளான இவர் சிறுவயது முதலே துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றவர், தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்று வருகிறார்.

வாழ்த்துகள் இளவேனில்!