Published:Updated:

ஹெல்மெட் இல்லை, ஹேண்டில் இல்லை; ஆனால் கனவு இருக்கிறது - உதவிகோரும் தமிழக சைக்கிள் வீரர் பிரஜித்!

பிரஜித்
News
பிரஜித்

"எனக்கு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே கனவாக இருக்கிறது. வயதின் காரணமாக இன்னும் சில மாதங்களில் சீனியர் பிரிவுக்கு மாறிவிடுவேன். என்னால் முடிந்த எல்லா உழைப்பையும் போட்டு இப்போது விளையாடிவருகிறேன்." - பிரஜித்

Published:Updated:

ஹெல்மெட் இல்லை, ஹேண்டில் இல்லை; ஆனால் கனவு இருக்கிறது - உதவிகோரும் தமிழக சைக்கிள் வீரர் பிரஜித்!

"எனக்கு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே கனவாக இருக்கிறது. வயதின் காரணமாக இன்னும் சில மாதங்களில் சீனியர் பிரிவுக்கு மாறிவிடுவேன். என்னால் முடிந்த எல்லா உழைப்பையும் போட்டு இப்போது விளையாடிவருகிறேன்." - பிரஜித்

பிரஜித்
News
பிரஜித்
"சைக்கிளிங்தான் என் வாழ்க்கையே! ஆசிய சாம்பியன்ஷிப்புக்குத் தகுதிபெறுவதற்கான வாய்ப்பை 0.03 நொடி வித்தியாசத்தில் இழந்தேன். இதற்கு முக்கியக் காரணம் என்னிடம் சரியான ஹெல்மெட் இல்லாததும் சரியான சைக்கிள் ஹேண்டில் (Handle) இல்லாததும்தான்!"
என்று வருத்தத்துடன் பேசத் தொடங்கினார் பிரஜித்.

தேனியில் பிறந்து வளர்ந்த பிரஜித்துக்குச் சிறுவயதிலிருந்தே சைக்கிளிங் மீது ஆர்வம் அதிகம். பெற்றோர் இருவரும் சேர்ந்து மெஸ் ஒன்றை நடத்திவருகின்றனர். அம்மா போலியோவால் பாதிக்கப்பட்டதால் மாற்றுத்திறனாளியாகிவிட்டார். நடுவில் சில சூழ்நிலைகளினால் குடும்பமாக கோயம்புத்தூருக்கு இடம் பெயர்ந்துள்ளார்கள். ஏழாவது படிக்கும் போது சைக்கிளிங்கைத் தீவிரமாக எடுத்து அது தொடர்பான போட்டிகளில் பங்குபெற ஆரம்பித்தார் பிரஜித்.

Prajith
Prajith

"ஏழாவதில் தொடங்கியது என் சைக்கிளிங் பயணம். தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைப் பெற்றேன். அப்போது தேசிய அளவிலான போட்டியில் 14 வயது உட்பட்டோருக்கான பிரிவில் சிறப்பாகச் செயல்பட்டேன். அதிலிருந்து பத்துப் பேரைத் தேர்வுசெய்து டெல்லியில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் விளையாட வைத்தார்கள்" என்றார் பிரஜித்.

டெல்லியிலும் கலக்கிய பிரஜித்துக்குப் பல கதவுகள் திறந்தன. பட்டியாலாவில் உள்ள National Centre of Excellence (NCOE)-ல் பயிற்சிபெறத் தேர்வு செய்யப்பட்டார் பிரஜித். அரசால் பல இடங்களில் நடத்தி வரப்படும் இந்தத் திட்டம், பல விளையாட்டுகளில் வீரர்களை மேம்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டது. வாய்ப்பு கிடைத்தும் கொரோனா ஊரடங்கு காரணமாக பதினோராவது வகுப்பின் போதுதான் பிரஜித்தால் பட்டியாலா செல்ல முடிந்தது.

பிரஜித்தின் அடையாள அட்டைகள்
பிரஜித்தின் அடையாள அட்டைகள்
Prajith
NCOE-ல் தினம் சைக்கிளிங் மட்டுமே என் வாழ்க்கை. பள்ளிக்குச் செல்ல நேரம் இருக்காது. பகுதிநேரப் படிப்பில்தான் பயின்று வருகிறேன். காலையில் ஐந்து மணி நேரம், மாலையில் ஐந்து மணி நேரம் சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்வோம். சைக்கிளும் அவர்களே கொடுத்துவிட்டார்கள். எனக்கு வழங்கப்பட்ட சைக்கிளின் விலை ஐந்து லட்சம். ஆனால் என்னுடன் இருக்கும் சக வீரர்களெல்லாம் 14 லட்சம் மதிப்புள்ள சைக்கிளை எல்லாம் தனிப்பட்ட முறையில் வாங்கி வைத்திருப்பார்கள்.
பிரஜித்

பட்டியாலா NCOE-ல் சைக்கிளிங்குக்காக இருக்கும் ஒரே தமிழக வீரரான பிரஜித்தால் அதற்கு மேல் போட்டிகளில் பெரிதாக வெல்ல முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவரிடம் இருக்கும் வசதிகளுக்கும் மற்ற வீரர்களிடம் இருக்கும் வசதிகளுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம்தான் என்று வருந்துகிறார் பிரஜித்.

"என்னிடம் ஹெல்மெட், ஹேண்டில் எல்லாம் இருக்கு. ஆனால் அதனுடைய தரம் மிகவும் மோசம். நான் சாலையில் சைக்கிள் ஓட்டப் பயன்படுத்தும் சாதாரண ஹெல்மெட்தான் வைத்திருக்கிறேன். ஆனால் வெல்டரோம் சைக்கிளிங் (Veldrome Cycling) போட்டியில் அதை வைத்து பெரிதாய் ஒன்றும் செய்யமுடியாது. காற்றைச் சமாளிக்கணும். சரியான பொசிஷனில் அமர முடியவேண்டும். அதற்குத் தேவையான விஷயங்கள் இல்லாத போது போட்டியின் முடிவுகளில் நிச்சயம் அதனுடைய தாக்கம் இருக்கும்" என்று விளக்கினார்.

பிரஜித்
பிரஜித்
எனக்கு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே கனவாக இருக்கிறது. வயதின் காரணமாக இன்னும் சில மாதங்களில் சீனியர் பிரிவுக்கு மாறிவிடுவேன். என்னால் முடிந்த எல்லா உழைப்பையும் போட்டு இப்போது விளையாடிவருகிறேன். இன்னும் சிறப்பாக விளையாட ஹெல்மெட், ஹேண்டில் போன்ற விஷயங்கள் கிடைக்குமானால் நிச்சயம் போட்டிகளில் வெற்றிபெறுவேன். ஆனால், அதற்கு எப்படியும் குறைந்தபட்சம் ரூ.50,000 வரை செலவாகும்.
பிரஜித்
பிரஜித்தின் கண்களில் நம்பிக்கை மிளிர்கிறது. ஆனால், பொருளாதார வாய்ப்புகள் இல்லாத ஏக்கமும் அதனுடனே தெரிந்தன.