Published:Updated:

ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் - இளமைக் காலத்தில் இவருக்கு ஜாகீர் கான் சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா?

ஷர்துல் தாகூர் ( twitter )

ஒருநாள் தொடர், டெஸ்ட் மேட்ச் என 597 சர்வதேச விக்கெட்கள் எடுத்துள்ள ஜாகீர் கான், இளமைக் கால ஷர்துல் தாக்கூரை நினைவு கூர்ந்துள்ளார்.

ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் - இளமைக் காலத்தில் இவருக்கு ஜாகீர் கான் சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா?

ஒருநாள் தொடர், டெஸ்ட் மேட்ச் என 597 சர்வதேச விக்கெட்கள் எடுத்துள்ள ஜாகீர் கான், இளமைக் கால ஷர்துல் தாக்கூரை நினைவு கூர்ந்துள்ளார்.

Published:Updated:
ஷர்துல் தாகூர் ( twitter )

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிற ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் நேற்று இந்தியா 50 ஓவரில் 287 ரன்கள் எடுத்திருந்தது. இதில் இந்தியா தோல்வியடைந்திருந்தாலும் இறுதியில் ஒரு கௌரவமான ஸ்கோரை எட்ட ஷர்துல் தாக்கூரும் அஷ்வினும் உதவியிருந்தனர். ஷர்துல் தாக்கூர் 38 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்தார். அதில் மூன்று பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடக்கம்.

ஜனவரி தொடக்கத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது தன்னுடைய பௌலிங்கால் 'யாரு சாமி நீ!' என ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையே வியப்போடு கேட்க வைத்தவர் ஷர்துல் தாக்கூர். டெஸ்ட் தொடரில் இந்தியா தோற்றாலும் ஷர்துல் தாக்கூரின் ஆட்டம் கவனிக்கத்தக்கது.

Shardul Thakur
Shardul Thakur
ICC

இதனிடையே தொடர்ந்து அசத்திவரும் ஷர்துலின் இளமைக் காலம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் நினைவுகூர்ந்துள்ளார். முன்னர் ரஞ்சி கோப்பையின் போது இருவருமே மும்பை டக் அவுட்டில் இருந்திருக்கின்றனர்.

அது குறித்து பேசிய ஜாகிர் கான், "அப்போது ஷர்துல் பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே அசத்திக் கொண்டிருந்தார். ரஞ்சியில் ஆரம்ப காலத்தில் விளையாடிய போட்டி அது. வேகப் பந்து வீச்சு மூலமாக இந்திய அளவிலான உள்ளூர் கிரிக்கெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார் ஷர்துல். பௌலிங் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் கூட அவர் சாதனை தொடர்ந்தது. அவர் தன்னுடைய முழுத்திறமையை பயன்படுத்தியதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. தன் மீது வைக்கப்படுகிற எதிர்பார்ப்பு எல்லாவற்றையும் சரிசெய்கிற ஆட்டக்காரரைக் காண்பது எப்போதும் நிறைவு அளிக்கக்கூடிய உணர்வு. அவரிடம் இன்னும் சிறப்பான பர்ஃபாமென்ஸை அளிக்க உடல் எடையை மட்டும் குறைக்க சொன்னேன். வேகப்பந்து வீச்சாளருக்கு அது மிகவும் அவசியமான ஒன்று. அதன்படி ஷர்துலும் தன் உடல் எடையைக் குறைத்தார். இப்போது சர்வதேச அரங்கிலும் அவர் சாதித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

ஜாகிர் கான்
ஜாகிர் கான்
BCCI

முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஒரு சாதனையைப் படைத்திருந்தார் ஷர்துல். எட்டவாதாகக் களமிறங்கிய அவர் அரை சதம் அடித்து, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 8வது இடத்தில் அரைசதம் எடுத்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். இதற்கு முன்பு 1997ஆம் ஆண்டு முன்னாள் இந்திய வீரர் சபா கரீம்தான் இந்தச் சாதனையைச் செய்திருந்தார்.