Published:Updated:

யுவராஜ் சிங் விளையாடிய 10 சிறந்த இன்னிங்ஸ்கள் இதுதான் ஏன் தெரியுமா?#HappyBirthdayYuvrajSingh

யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களுள் ஒருவரான யுவராஜ் சிங்கின் பிறந்தநாள் இன்று. பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என எல்லா துறையிலும் கலக்கிய நாயகனின் 10 சிறந்த இன்னிங்ஸ்கள் இங்கே...

Published:Updated:

யுவராஜ் சிங் விளையாடிய 10 சிறந்த இன்னிங்ஸ்கள் இதுதான் ஏன் தெரியுமா?#HappyBirthdayYuvrajSingh

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களுள் ஒருவரான யுவராஜ் சிங்கின் பிறந்தநாள் இன்று. பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என எல்லா துறையிலும் கலக்கிய நாயகனின் 10 சிறந்த இன்னிங்ஸ்கள் இங்கே...

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

* 69 (63) vs இங்கிலாந்து, நாட்வெஸ்ட் சீரிஸ் - ODI | ஜூலை 13 2002

2002 நாட்வெஸ்ட் சீரிஸில் வெற்றிபெற்று பால்கனியில் கங்குலி சட்டை கழற்றி கொண்டாடிய ஆட்டத்தை அறிவோம். அந்த ஆட்டத்தில் வெறும் 21 வயது இளம் யுவராஜ் கொடுத்த பங்களிப்பு அசாத்தியமானது. கைஃபுடன் அவர் அமைத்த அற்புதமான பார்டனர்ஷிப்பே அணியை வரலாற்று வெற்றிக்கு கொண்டு சென்றது.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

112 (129) vs பாகிஸ்தான், டெஸ்ட் | ஏப்ரல் 5, 2004

வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் தொடரில், லாஹூர் போட்டியில் அடிக்கப்பட்ட சதம் இது. அணியில் மூத்த வீரர்கள் முதற்கொண்டு ஒருவரும் அரைசதம் கூட அடிக்காமல் இருக்க, தனி ஆளாய் ஒரு பக்கம் சதம் அடித்து அணியை காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தார்.

Yuvraj singh
Yuvraj singh

107* (93) vs பாகிஸ்தான், ODI | பிப்ரவரி 19, 2006

கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 286 ரன்கள் குவித்தது. அந்த ஆட்டத்தில் யுவராஜ் சதம் அடிக்க மற்றோரு பக்கம் தோனியின் அதிரடியுடன் சேர்ந்து இந்திய அணி எளிதில் வெற்றியை ருசித்தது.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

58 (16) v இங்கிலாந்து T20 உலகக்கோப்பை | செப்டம்பர் 19 2007

டர்பனில் அரங்கேறிய இந்த இன்னிங்ஸ் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்கப்போவதில்லை. பிளின்டாஃபுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அடுத்த ஓவரில், ஸ்டுவர்ட் பிராட் வீசிய ஆறு பந்துகளும் சிக்ஸராக பறக்கும். இப்போதும் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் என்றால் முதலில் மனதுக்கு வருவது இந்த இன்னிங்ஸ் தான்.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

70 (30) vs ஆஸ்திரேலியா, T20 உலகக்கோப்பை | செப்டம்பர் 24, 2007

2007-ம் ஆண்டு டர்பணில் நடந்த T20 உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியது இந்தியா. இதில் 30 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார் யுவராஜ் சிங். மிகவும் முக்கியமான ஆட்டத்தில் சிறிய ரன் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

138 (75) vs இங்கிலாந்து, ODI | நவம்பர் 14, 2008

ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டி20 போல் வெறித்தனமாக ஆடியிருப்பார் யுவி. 16 ஃபோர்கள், 6 சிக்ஸர்கள் என அணியை இமாலய ரன்களுக்கு கொண்டு சேர்த்து வெற்றிக்கு தடம் போட்டு கொடுத்தார்.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

85 (131) vs இங்கிலாந்து, டெஸ்ட் | டிசம்பர் 15, 2008

சென்னையில் இங்கிலாந்திற்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவிற்கு 387 ரன்கள் இலக்காக நிர்ணியிக்கபட்டது. அதில் யுவ்ராஜ் 85 ரன்கள் அடித்து, சச்சினுடன் அபாரமான பார்ட்னர்ஷிப்பில் ஈடுபட, வெறும் நான்கு விக்கெட்டுக்கள் மட்டும் இழந்து பெரிய வெற்றியைப் பெற்றது இந்தியா.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

57* (65) vs ஆஸ்திரேலியா, 50 ஓவர் உலகக்கோப்பை | மார்ச் 24 2011

2011 உலகக்கோப்பையின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. 260 ரன்களை சேஸ் செய்யும் போது நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் செல்வார் யுவராஜ்.

 யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

77 (35)* vs ஆஸ்திரேலியா, T20 | அக்டோபர் 10, 2013

புற்றுநோயிலிருந்து குணமாகிய அடுத்த வருடம் ராஜ்கோட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடிய அதிரடி இன்னிங்ஸ்தான் இது. 201 ரன்களை சேஸ் செய்ய வேண்டிய கடினமான நிலையில், அதை எளிதாக கடக்க உதவி செய்தார் யுவ்ராஜ்.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

150 (127) vs இங்கிலாந்து, ODI | ஜனவரி 19, 2017

கட்டாக்கில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், யுவராஜ் 150 ரன்கள் அடித்து ஒருநாள் போட்டிகளில் தனது சிறந்த ஸ்கோரை பதிவு செய்தார். ஒரு பக்கம் தோனி சதம் விளாச மற்றொரு பக்கம் யுவராஜ் கலக்க, அந்த நாள் நியாபம் என எல்லோரும் நாஸ்டால்ஜியாவில் திளைத்தனர்.