Published:Updated:

`எல்லாத்துக்கும் தோனி தான் சார் காரணம்!' - சர்ச்சை கிளப்பும் யுவராஜ் சிங் தந்தை

தோனி

``யுவராஜ் சிங் ஓரங்கட்டப்படுவதற்கு தோனிதான் காரணம்'' என கடந்த சில வருடங்களாக பேசிவந்தார் யோகராஜ்.

Published:Updated:

`எல்லாத்துக்கும் தோனி தான் சார் காரணம்!' - சர்ச்சை கிளப்பும் யுவராஜ் சிங் தந்தை

``யுவராஜ் சிங் ஓரங்கட்டப்படுவதற்கு தோனிதான் காரணம்'' என கடந்த சில வருடங்களாக பேசிவந்தார் யோகராஜ்.

தோனி

உலகக்கோப்பை தொடர் நடந்துகொண்டிருக்கும் வேளையில் அம்பத்தி ராயுடு அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். உலகக்கோப்பை தொடருக்கு அழைக்கப்படாததால் அதிருப்தியில் இருந்தார். இருந்தும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கொண்டிருந்தார். உலகக்கோப்பை போட்டியின்போது ஷிகர் தவான், விஜய் சங்கர் ஆகியோர் காயமடைந்தனர். இவர்களுக்குப் பதிலாக ரிஷப் பன்ட், மயங்க் அகர்வால் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இதில் மயங்க் அகர்வால் இதுவரை சர்வதேச அளவிலான ஒருநாள் போட்டிகளில் விளையாடியதில்லை. இந்த அறிவிப்புக்குப் பின்னர்தான் ராயுடு, சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ராயுடுவின் இந்த முடிவுக்கு பிசிசிஐதான் காரணம் என கவுதம் கம்பீர் குற்றம் சாட்டினார். எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவினரின் தோல்வியை இதுகாட்டுகிறது என அவர் பேசியிருந்தார்.

ராயுடு
ராயுடு

அம்பதி ராயுடுவின் இந்த முடிவுக்கு தோனிதான் காரணம் என யுவராஜ் சிங் தந்தை யோகராஜ் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். மகேந்திர சிங் தோனியை தாக்கிப் பேசுவதே தனது வழக்கமான பணியாகக் கொண்டிருக்கிறார் யுவராஜின் தந்தை. யுவராஜ் சிங் ஓரங்கட்டப்படுவதற்கு தோனிதான் காரணம் என கடந்த சில வருடங்களாக பேசிவந்தார். தற்போது ராயுடுவின் ஓய்வுக்கும் தோனியை சாடியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள யோகராஜ், ``ராயுடு, அவசரப்பட்டு தவறான முடிவை எடுத்துவிட்டீர்கள். ஓய்வு முடிவை நீங்கள் திரும்பப் பெற வேண்டும். இந்தக் கூட்டத்துக்கு நீங்கள் யார் என தெரிவிக்க வேண்டும். தோனி போன்றவர்கள் என்றென்றும் நிலைத்திருக்க மாட்டார்கள். இதுபோன்ற அசுத்தங்கள் என்றென்றும் நிலைக்காது. 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ராயுடு அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால், தோனி அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு வழங்கவில்லை.

யுவராஜ் சிங் தந்தை
யுவராஜ் சிங் தந்தை

ராயுடு தொடர்ந்து விளையாட வேண்டும். ராஞ்சி கோப்பை, இரானி கோப்பை, துலீப் கோப்பை தொடர்களில் விளையாடி ரன் வேட்டை நடத்த வேண்டும். தேர்வுக்குழுவினருக்கு தான் யார் என்பதைக் காட்ட வேண்டும்'' என பேசி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.