Published:Updated:

"கோலி, ரோஹித்தால் மட்டுமே உலகக்கோப்பையை வென்று தர முடியாது! அதனால்..."- கபில் தேவ் கருத்து

விராட் கோலி, ரோஹித் சர்மா, கபில் தேவ்

இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் 1983 உலகக் கோப்பை ஹீரோவுமான கபில் தேவ் கருத்து தெரிவித்திருக்கிறார்.

"கோலி, ரோஹித்தால் மட்டுமே உலகக்கோப்பையை வென்று தர முடியாது! அதனால்..."- கபில் தேவ் கருத்து

இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் 1983 உலகக் கோப்பை ஹீரோவுமான கபில் தேவ் கருத்து தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
விராட் கோலி, ரோஹித் சர்மா, கபில் தேவ்

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று T20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதலாவது T20 போட்டி இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் போன்றோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஆல் - ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, இளம் வீரர்களைக் கொண்டு அணியை வழிநடத்த உள்ளார்.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

இதனிடையே 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக்கோப்பை தொடருக்கான அணியை உருவாக்கும் பணிகள் தற்போதே தொடங்கிவிட்டன. அதன்படி சீனியர் வீரர்கள் பெரும்பாலும் டி20 ஆட்டங்களில் இருக்க மாட்டார்கள். அதற்குப் பதில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்படும் என்று பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் இதற்கு முன்னாள் வீரர் கபில் தேவ்வும் தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய கபில் தேவ், "தனிப்பட்ட வீரரைப் பற்றி யோசிக்காமல் அணியைப் பற்றி யோசிக்க வேண்டும். கோலி, ரோஹித் போன்ற 2 - 3 வீரர்கள் மட்டுமே உலகக்கோப்பையை வென்றுக்கொடுப்பார்கள் என நினைத்தால் அது ஒரு போதும் நடக்கவே நடக்காது. கோப்பையை வெல்லும் அளவிற்கான இளம் வீரர்களும், வெற்றியாளர்களும் நம்மிடம் உள்ளனர். 

கபில் தேவ்
கபில் தேவ்

2 - 3 வீரர்கள் அணியின் தூண்களாக இருப்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான். ஆனால் அதனையெல்லாம் உடைத்துவிட்டு, 5 - 6 மேட்ச் வின்னர்களை உருவாக்க வேண்டும். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து முன்னுக்குக் கொண்டு வருவதுதான் சரியான முடிவு. அதனை அணியின் நலனுக்காக ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் சில கடினமான முடிவுகளை எடுத்துத்தான் தீர வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கமென்ட்டில் சொல்லுங்கள்.