Published:Updated:

`மோடிக்கு முதலிடம்... இரண்டாவது இடத்தில் தோனி..!' #India'sMostAdmiringPerson

உலகம் முழுவதும் உள்ள 42 ஆயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட சர்வேயின்படி, அதிம் அட்மைரிங் நபர்கள் என்ற பட்டியலில் முதல் இடத்தில் இவர் இருக்கிறார்.

Dhoni
Dhoni

அதிக ஃபேன் ஃபாலோயிங் கொண்ட இந்திய வீரர்கள் பட்டியலில் தோனிக்கு தவிர்க்க முடியாத இடம் இருக்கிறது. தோனி, அதிகாரபூர்வமாக ரிட்டையர்மென்ட் குறித்து அறிவிக்காத நிலையில், `ரிட்டையர்மென்ட் வேண்டாம்’ என சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஹேஷ்டேக்குகள் மூலம் தங்களது, விருப்பதை வெளிபடுத்திக்கொண்டிருக்கின்றனர். அதேபோல பல்வேறு விமர்சனங்களும் அவர்மீது வைக்கப்படுகின்றன. தோனியின் உடல் தகுதி குறித்து, விமர்சகர்கள் கேள்வி எழுப்பிவரும்நிலையில், விராட்கோலியின் பதிவு, அவர்களை வாயடைக்க வைத்தது.

Dhoni - Kohli
Dhoni - Kohli

தோனியுடன் களத்தில் இருந்த தருணங்கள் குறித்துப் பகிர்ந்த கோலி,`ஃபிட்னஸ் டெஸ்டில் ஓடுவதைப் போல உணர்ந்தேன்’ என்று நெகிழ்ந்திருந்தார். இது, தோனியின் உடல் தகுதி குறித்து சகவீரர்களின் பார்வையை உலகுக்குச் சொன்னது. அதேபோல நடந்துமுடிந்த `உலகக் கோப்பை’ தொடரின் அரையிறுதி தோல்வியின்போதும் தோனி மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், இங்கிலாந்தின் `யூகோவ்’ (YouGov) என்ற நிறுவனம் உலக அளவில் மக்களின் மனம் கவர்ந்தவர்கள் குறித்து சர்வே ஒன்றை நடத்தியிருக்கிறது.

``தோனிக்குத் தெரியும்... நாங்கள் அவரை நம்புகிறோம்!'' - விராட் கோலி நச் பதில்

உலக அளவில் 42,000-த்துக்கும் மேற்பட்டோரிடம் இந்த சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது. உலக அளவில் மக்களின் மனம் கவர்ந்த ஆண்கள் பட்டியலில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தில் இருக்கிறார். பெண்கள் வரிசையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிட்செல் ஒபாமா இருக்கிறார். உலக அளவிலான பட்டியலில் இந்தியாவிலிருந்து பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் ஆகியோர், முதல் 20 இடங்களில் உள்ளனர்.

you gov
you gov

இந்திய அளவிலான பட்டியலில், 15.66 சதவிகித ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடம் பிடித்திருக்கிறார். இதில், தோனி இரண்டாவது இடத்திலும் தொழிலதிபர் ரத்தன் டாட்டா மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர். தோனிக்கு 8.58 சதவிகிதம் பேர் வாக்களித்திருக்கிறார்கள். பராக் ஒபாமா, 4-வது இடம் பிடித்திருக்கும் இந்தப் பட்டியலில், அவருக்கு அடுத்த இடத்தை பில்கேட்ஸ் பிடித்திருக்கிறார். ஆறாவது இடத்தில் அமிதாப் பச்சனும் 7-வது இடத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் இருக்கின்றனர். எட்டாவது இடத்தை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பிடித்திருக்கிறார். 9-வது மற்றும் 10-வது இடங்களில் முறையே ஷாருக் கான் மற்றும் நடிகர் ஜாக்கி சான் ஆகியோர் இருக்கிறார்கள்.

"உங்கள் கனவை விமர்சிப்பவருக்கு நீங்கள் தர வேண்டிய பரிசு..." தோனி ஹிட் லைனர்ஸ் #MondayMotivation

இந்திய அளவில் பெண்களுக்கான பட்டியலில், குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் முதலிடம் பிடித்திருக்கிறார். இதில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இரண்டாவது இடம் பிடித்திருக்கிறார். 3-வது, 4-வது மற்றும் 5-வது இடங்களை முறையே பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஆகியோர் இடம்பிடித்திருக்கிறார்கள்.

Mary kom
Mary kom

இந்தப் பட்டியலில், பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் மலாலா 6-வது இடத்தையும், மிட்செல் ஒபாமா, 7-வது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். அதற்கு அடுத்த இடங்களில் முறையே, பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் மற்றும் சுஷ்மிதா சென் ஆகியோர் இருக்கிறார்கள்.