விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டைப்போலவே இந்த முறையும் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து குஜராத் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி பட்டியலில் இரண்டாவது இடத்திலும், லக்னோ அணி மூன்றாவது இடத்திலும், மும்பை அணி நான்காவது இடத்திலும் இடம்பெற்று பிளே ஆப் சுற்றுக்குள் முன்னேறி இருக்கின்றன. இதனிடையே இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டிக்குச் செல்வதற்கான குவாலிபையர் சுற்றில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளன.
இந்நிலையில் தோனி குறித்து ஹர்திக் பாண்டியா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. தோனி குறித்து பேசிய ஹர்திக், “ நான் எப்போதும் மகேந்திர சிங் தோனியின் ரசிகனாகவே இருப்பேன். தோனியிடம் இருந்து நிறைய கிரிக்கெட் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். நிறையப் பேர் தோனியை சீரியஸ் கேரக்டர் என்று நினைக்கிறார்கள் ஆனால் தோனி அப்படியில்லை. நான் தோனியிடம் ஜோக்ஸ் எல்லாம் கூட அடிப்பேன். எனக்கு அவர் அன்பான நண்பர் மற்றும் சகோதரர். மகேந்திர சிங் தோனியை போன்ற ஒருவரை நீங்கள் வெறுக்க வேண்டும் என்றால் நிச்சயம் நீங்கள் டெவில் ஆகத்தான் இருக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார் இந்த வீடியோவை குஜராத் டைட்டன்ஸ் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் MS Dhoni is an Emotion என்ற கேப்ஷனுடன் பகிர்ந்திருக்கிறார்கள்.
இன்றைய போட்டியில் எந்த அணி வெல்லும் என கமென்ட்டில் பதிவிடுங்கள்!