Published:Updated:

WTC இறுதிச்சுற்று 3: 90% விக்கெட்டுகளை ஸ்பின்னர்கள் மட்டுமே வீழ்த்திய ஆச்சர்யத் தொடர்! | INDvSA 2015

IND v SA 2015
IND v SA 2015

இத்தொடரில் தென்னாப்பிரிக்க அணி தான் இழந்த 70 விக்கெட்டுகளில் 63ஐ இந்திய ஸ்பின்னர்களிடமே இழந்திருந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நான்காம் நாள் ரெண்டாவது செஷன், 481 என்னும் இமாலய இலக்குடன் தொடரின் கடைசி போட்டியின் கடைசி இன்னிங்சை ஆட தொடங்குகிறது தென்னாப்பிரிக்க அணி. முந்தைய மூன்று டெஸ்ட் போட்டிகளில் தொடரை மட்டும் இழக்காமல் தங்களது மொத்த தன்னம்பிக்கையும் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களிடம் இழந்திருந்தது தென்னாப்பிரிக்க பேட்டிங் லைன் அப். அந்தளவுக்கு அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் சுழல் வினாக்களுக்கு பதிலேதும் தெரியாமல் அடிபணிந்து போயிருந்ததாலோ என்னவோ வெற்றி பற்றிய சிறுதுளி எண்ணம் இல்லாத இன்னிங்க்ஸ் ஒன்றை ஆட தொடங்கியது தென்னாப்பிரிக்க அணி.

முதல் விக்கெட் மூன்றாவது ஓவரிலேயே போக ஆம்லாவுடன் கூட்டணி சேர்ந்தார் பவுமா. சுமார் 39 ஓவர்கள் ஆடி வெறும் 45 ரன்கள் மட்டுமே அடித்தது அந்த கூட்டணி. பவுமாவை அஷ்வின் போல்ட்செய்ய உள்ள வந்தார் ஏபி டிவில்லியர்ஸ். தன் வாழ்நாளின் மிக பொறுமையான இன்னிங்சை கட்டமைக்கத் தொடங்கிய அவரிடம் இந்திய பௌலர்களின் திட்டம் எதுவுமே எடுபடவில்லை. நான்காம் நாள் முடிவில் 72 ஓவர்களுக்கு சரியாக 72 ரன்கள் குவித்திருந்தது தென்னாப்பிரிக்கா.

IND v SA 2015
IND v SA 2015
cricket.com.au

கடைசி நாளில் போட்டியை டிரா செய்ய தென்னாப்பிரிக்கா முயல, அதை முறியடித்து வெல்ல இந்தியா போராட, தொடக்கத்திலேயே ஆம்லாவை பெவிலியனுக்கு அனுப்பியது பௌலர்களுக்கு சிறிது ஆறுதல் அளித்தது. 244 பந்துகளில் 25 ரன்களை குவித்துவிட்டு சென்றார் அவர். அடுத்து வந்தவர் ஃபாப் டூ ப்ளெஸ்ஸி. ஏற்கெனவே ஓவருக்கு ஒரு ரன்னுக்கும் கீழ் இருந்த அந்த அணியின் ஸ்கோரிங் ரேட் ஃபாபின் வரவால் இன்னும் அதல பாதாளத்திற்குச் சென்றது. மறுப்பக்கம் தனது 20ஆவது ஓவரை வீச வந்த ஜடேஜா தனது 37வது ஓவரை முடிக்கும் ஒரு ரன் கூட அளிக்கவில்லை. சுமார் 17 ஓவர்களை டிவில்லர்ஸ் மற்றும் ஃபாபின் துணைக்கொண்டு மெய்டன் செய்து சாதனை படைத்தார் ஜடேஜா.

97 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து டூ ப்ளெஸ்ஸி வெளியேற, தென்னாப்பிரிக்க அணியின் சரிவு ஆரம்பமானது. ஆனால் மறுப்பக்கம் டிவில்லியர்ஸ் நங்கூரமாய் நின்று வந்தார். அவரை வீழ்த்த தவான், முரளி விஜய் ஏன் புஜாராவையே பௌலிங் போட அழைத்த கோலி தானும் ஒரு ஓவரை வீசினார். கடைசியாக சுமார் 297 பந்துகளைச் சந்தித்த அவர் 43 ரன்கள் அடித்து அஷ்வின் பந்தில் அவுட்டாகி தன் நீண்ட பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஐந்தாம் நாளின் தேநீர் இடைவேளை வரை 138 ஓவர்கள் தாக்குப்பிடித்து ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த அந்த அணி அடுத்த 27 பந்துகளிலேயே மீதமுள்ள ஐந்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. சுமார் 143 ஓவர்கள் பேட் செய்து வெறும் 143 ரன்கள் மட்டுமே அடித்து ஆசிய கண்ட ஆடுகளத்தில் கடைசி இன்னிங்ஸில் அதிக ஓவர்கள் தாக்குப்பிடித்த பெருமையை பெற்றது மட்டுமல்லாமல் மிக குறைவான ரன்ரேட்டுடன் (100 ஓவர்களுக்கு மேல்) ஆடிய அணி என்று பெயரையும் பெற்றது. 337 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி இவ்வெற்றியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது தலைசிறந்த வெற்றியை பதிவுசெய்து சாதனை படைத்தது.

IND v SA 2015
IND v SA 2015
Tsering Topgyal | AP

பொதுவாகவே அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அமையும் போட்டி என்றால் வெல்லும் அணி மற்றொரு அணியை தன் பௌலிங் கொண்டு விரைவாக சுருட்டிவிடுவதே வழக்கம். ஆனால், இப்போட்டியில் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் முடிந்தவரை இந்தியாவின் வெற்றியை தள்ளிப்போட போராடினர். இப்போட்டியில் இந்திய பேட்ஸ்மேன் ரஹானே இரு இன்னிங்க்ஸ்களிலும் சதம் அடித்து அணியை முன்னிலை பெற செய்திருந்தாலும் மேலே கூறியது போல தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு இந்திய ஸ்பின்னர்களை ஆட இருந்தே தயக்கமே வெற்றிக்கான காரணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

WTC இறுதிச்சுற்று - 2 : இலங்கையில் கேப்டன் கோலியின் முதல் வெற்றி… எப்படியிருந்தது அந்த முதல் டெஸ்ட்?

ஆம், இத்தொடரில் தென்னாப்பிரிக்க அணி தான் இழந்த 70 விக்கெட்டுகளில் 63ஐ இந்திய ஸ்பின்னர்களிடமே இழந்திருந்தது. மொஹாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் இரு அணிகளுமே பேட்டிங்கில் பயங்கரமாக சொதப்ப இறுதியில் தென்னாபிரிக்காவிற்கு வெறும் 218 ரன்களே இலக்காக அமைந்தது. ஆனால் அந்த அணியின் ஒன்பது விக்கெட்டுகளை இந்திய ஸ்பின்னர்கள் சரசரவென்று சாய்க்க தென்னாபிரிக்கா வெறும் 109 ரன்களுக்கு அவுட்டாகி போட்டி மூன்றாவது நாளிலேயே நிறைவுபெற்றது.

இரண்டாவது போட்டி பெங்களுருவில் முதல் நாளோடு மழையால் கைவிடப்பட்டாலும் முதல் நாளில் ஆல் அவுட்டான தென்னாபிரிக்காவின் எட்டு விக்கெட்டுகளை அஷ்வின் - ஜடேஜா கூட்டணி மட்டுமே வீழ்த்தியிருந்தது. இந்த இரண்டிற்கும் மேலாக நாக்பூரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களே எடுத்திருந்தனர்.

IND v SA 2015
IND v SA 2015
BCCI

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா வெறும் 79 ரன்களில் சுருண்டது. நாக்பூர் மைதானத்தின் இந்த ஆடுகளத்தை ஆய்வு செய்த ஐசிசி அதன் தரத்தை பற்றி எச்சரித்து கேள்வி எழுப்பியது அப்போது சர்ச்சையானது. இந்த வெற்றியின் மூலம் விராட் கோலி சொந்த மண்ணில் தனது முதல் தொடரை கைப்பற்றுகிறார்.

வேகப்பந்துவீச்சில் மிரட்டும் தென்னாப்பிரிக்காவை தனது சுழலால் அடிபணிய வைத்த இந்தியாவிற்குக் காத்திருந்தது அடுத்த மிகப்பெரிய சவால். நான்கு வருடங்களுக்கு முன்பு உலகக்கோப்பையுடன் ஒய்யாரமாய் இருந்த சீனியர்கள் நிரம்பிய அணியை வைட்வாஷ் செய்து மண்ணை கவ்வ வைத்த இங்கிலாந்தை தன் சுழலால் சொந்த மண்ணில் வீழ்த்த ஆயத்தமானது கோலியின் இளம் படை.

- களம் காண்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு