Published:Updated:

"என் பெற்றோர்கள் எனக்கு அதைச் சொல்லித் தரவில்லை" - பிசிசிஐ அழைப்பும் ரித்திமான் சாஹாவின் பதிலும்!

ரித்திமான் சாஹா | Wriddhiman Saha

"எனக்கு இன்னும் பிசிசிஐ-யிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. என்னிடம் அந்தப் பத்திரிகையாளரின் பெயரை வெளியிட சொல்லிக் கேட்டால்..." ரித்திமான் சாஹா சொல்லும் பதில்.

"என் பெற்றோர்கள் எனக்கு அதைச் சொல்லித் தரவில்லை" - பிசிசிஐ அழைப்பும் ரித்திமான் சாஹாவின் பதிலும்!

"எனக்கு இன்னும் பிசிசிஐ-யிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. என்னிடம் அந்தப் பத்திரிகையாளரின் பெயரை வெளியிட சொல்லிக் கேட்டால்..." ரித்திமான் சாஹா சொல்லும் பதில்.

Published:Updated:
ரித்திமான் சாஹா | Wriddhiman Saha

இலங்கை டெஸ்ட் சீரிஸில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பட்டியலில் விக்கெட் கீப்பிங் பேட்டர் ரித்திமான் சாஹா உள்ளிட்ட பல சீனியர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. 37 வயதான சாஹா, இது பற்றி தன்னிடம் பயிற்சியாளர் டிராவிட், பிசிசிஐ தலைவர் கங்குலி பேசியதைக் குறித்து சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்திருந்தார். இனி வரும் அனைத்து தொடர்களிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவிருப்பதாகவும் சாஹாவை ரஞ்சி தொடரில் கலந்து கொள்ள சொல்லி சேத்தன் சர்மா கேட்டு கொண்டதாகவும் ரித்திமான் சாஹாவே தெரிவித்திருந்தார்.

இந்தச் சர்ச்சை குறித்து, விரிவாகப் படிக்க...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த விவகாரம் பெரிதாகப் பேசப்பட்ட நிலையில் பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி தரச் சொல்லி வற்புறுத்தியதாக சாஹா குற்றம் சாட்டியிருக்கிறார். ‘இந்திய கிரிக்கெட்டிற்கு இத்தனை வருடங்கள் பங்காற்றிய வீரரை ஒரு மதிப்புமிக்க பத்திரிகையாளர் நடத்தும் விதம் இதுதான்’ என்று தன் ஆதங்கத்தை ட்விட் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கு பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், "நாங்கள் சாஹாவிடம் என்ன நடந்தது என்பதைக் குறித்து கேட்போம். அவர் மிரட்டப்பட்டாரா அந்த ட்விட்டின் பின்னணியில் உள்ளது என்ன என்பதைப் பற்றி நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதைத் தாண்டி நானும் எதுவும் சொல்ல இயலாது. செயலாளர் சாஹாவிடம் நிச்சயமாக பேசுவார்" எனத் தெரிவித்திருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கு பதிலளிக்கும் விதமாக சாஹா, "எனக்கு இன்னும் பிசிசிஐ-யிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. என்னிடம் அந்தப் பத்திரிகையாளரின் பெயரை வெளியிட சொல்லிக் கேட்டால், எனக்கு யாருடைய தொழிலையும் கெடுக்கும் உள்நோக்கம் இல்லை என நான் அவர்களிடம் சொல்வேன். அதனால்தான் ட்விட்டரில் கூட பெயரை வெளியிடவில்லை. என் பெற்றோர்கள் எனக்கு அதைச் சொல்லித் தரவில்லை. மீடியாவில் இருக்கும் ஒருவர் ஒரு விளையாட்டு வீரரின் விருப்பத்தை அவமதிக்கும் செயலை வெளிக்காட்டுவதே என்னுடைய ட்விட்டின் முதன்மையான நோக்கம்" என்று தெரிவித்துள்ளார்.

ரித்திமான் சாஹா | Wriddhiman Saha
ரித்திமான் சாஹா | Wriddhiman Saha

மேலும், "இது சரியானதல்ல. இதை யார் செய்தாரோ அவர் நன்கு அறிவார். விளையாட்டு வீரர்கள் இனி இது போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள கூடாது என்பதற்காகவே நான் அந்த ட்விட்டை பகிர்ந்தேன். என்ன நடந்ததோ அது தவறானது, யாரும் அதனை திருப்பி செய்யக் கூடாது என்பதையே சொல்ல விரும்பினேன்" என்று தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism