Published:Updated:

WPL: மெக் லேனிங்கின் ஆளுமை; பேட்டியின் அனுபவம்; ஆதிக்கம் செலுத்தும் டெல்லி கேபிட்டல்ஸ்!

Meg Lanning

பயிற்சியாளர் பேட்டி இங்கிலாந்துக்காரர். இங்கிலாந்தின் 'The Hundred' தொடரில் 'Oval Invisible' அணிக்குப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று முதல் 2 சீசன்களிலுமே அந்த அணியை சாம்பியனாக்கியவர்.

Published:Updated:

WPL: மெக் லேனிங்கின் ஆளுமை; பேட்டியின் அனுபவம்; ஆதிக்கம் செலுத்தும் டெல்லி கேபிட்டல்ஸ்!

பயிற்சியாளர் பேட்டி இங்கிலாந்துக்காரர். இங்கிலாந்தின் 'The Hundred' தொடரில் 'Oval Invisible' அணிக்குப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று முதல் 2 சீசன்களிலுமே அந்த அணியை சாம்பியனாக்கியவர்.

Meg Lanning
வுமன்ஸ் ப்ரீமியர் லீக்கில் நேற்று டெல்லி கேபிட்டல்ஸுக்கும் உபி வாரியர்ஸுக்கும் இடையேயான போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் டெல்லி அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இந்த ஆட்டம் குறித்து விரிவாகப் பார்ப்பதற்கு முன் வேறு சில விஷயங்களைப் பற்றியும் பேசியாக வேண்டும்.

உ.பி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் இடையேயான போட்டி அது. உ.பி வாரியர்ஸ் அந்தப் போட்டியில் சேஸிங் செய்திருந்தது. அந்த அணியின் ஓப்பனர்களாக அலிஸா ஹீலியும் ஸ்வேதா ஷெராவத்தும் களமிறங்கியிருந்தனர். அலிஸா ஹீலி ஆஸ்திரேலிய வீராங்கனை. நீண்ட அனுபவமிக்கவர். அதேநேரத்தில் ஸ்வேதா ஷெராவத் இளம் இந்திய வீராங்கனை. சமீபத்தில் நடந்து முடிந்த U19 உலகக்கோப்பையில் கூட ஸ்வேதா ஆடியிருந்தார். அலிஸா ஹீலி - ஸ்வேதா இருவரும் கரியர் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் இரு எதிரெதிர் துருவங்களில் இருப்பவர்கள். இந்தக் கூட்டணி சரியாக ஒருவரையொருவர் புரிந்து கொள்வதிலேயே பிரச்னைகள் இருந்தன.

DC v UPW
DC v UPW

குறிப்பாக, ரன் ஓடுவதில் இருவருக்கிடையேயும் ஒருங்கிணைவே இல்லை. ஹீலி ரன்னுக்காக அழைத்த சமயங்களில் ஸ்வேதாவால் அதைச் சரியாகப் புரிந்துக்கொண்டு ரன் ஓடவே முடியவில்லை. ஒரே ஓவரில் இரண்டு, மூன்று முறை இப்படியே நடந்திருந்தது. மும்பை இந்தியன்ஸூக்கு எதிரான போட்டியில் எலிஸ் பெர்ரியும் கனிகாவும் ஆடிய போதும் இதே விஷயம் நிகழ்ந்திருந்தது.

புதிதாகத் தொடங்கப்பட்ட ஒரு தொடரில் முழுக்க முழுக்கப் புதிய வீராங்கனைகளால் அணிகள் கட்டமைக்கப்படும் போது இது மாதிரியான ஒருங்கிணைவு சிக்கல்கள் வருவது சகஜம்தான். ஓர் அணியாக ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு செட் ஆவதற்கு சிறிது நேரம் பிடிக்கக்கூடும். ஆனால், இந்த சீசனில் டெல்லி அணி இந்த விஷயத்தில் கொஞ்சம் வித்தியாசமான அணியாக இருக்கிறது. முதல் போட்டியிலிருந்தே மற்ற அணியினரை விட ஒரு தெளிவான ஒருங்கிணைவுத் தன்மை அவர்களிடம் வெளிப்படுவதைப் பார்க்க முடிகிறது.

முதல் போட்டியில் பெங்களூருவிற்கு எதிராக ஓப்பனர்களாக இறங்கிய மெக் லேனிங்கும் ஷெபாலி வர்மாவும் 162 ரன்களை சேர்த்து ஒரு சாதனைமிக்க பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். கிட்டத்தட்ட அலிஸா ஹீலி - ஸ்வேதா ஷெராவத் கூட்டணிக்கு இணையானதுதான் மெக் லேனிங் - ஷெபாலி கூட்டணியும். ஆனால், முன்னவர்கள் சந்தித்தத் தடுமாற்றத்தையும் புரிதல் குளறுபடிகளையும் பின்னவர்கள் பெரிதாகச் சந்திக்கவே இல்லை. நீண்ட காலமாக ஒன்றாக பேட்டிங் ஆடும் இணையைப் போல மிகச்சிறப்பாக ஆடி அணி எதிர்பார்க்கும் ரிசல்ட்டைக் கொடுத்தனர்.

Lanning
Lanning
WPL

சொல்லப்போனால் பெங்களூருவிற்கு எதிராக ஒரே ஓவரில் ஒரே மாதிரியாக இருவரும் அவுட் ஆனார்கள். அந்தளவுக்கு இருவருக்கும் இடையில் ஒருங்கிணைவு இருந்ததென நகைப்புக்காகக் கூட கூறலாம். முதல் போட்டியில் மட்டுமல்ல. உ.பி வாரியர்ஸூக்கு எதிராக நேற்று நடந்த இரண்டாவது போட்டியிலுமே கூட இந்தக் கூட்டணி நன்றாகத்தான் ஆடியிருந்தது. பவர்ப்ளேயில் விக்கெட்டை விடவில்லை. ரன்ரேட்டையும் 10 க்கு மேல் தக்க வைத்திருந்தனர். ஷெபாலி அவுட் ஆன பிறகும் கூட மெக் லேனிங் நின்று ஆடினார். முதல் போட்டியில் 72 ரன்களை எடுத்திருந்தவர் நேற்றைய போட்டியில் 70 ரன்களை எடுத்திருந்தார்.

இவர்களைக் கடந்து அடுத்தடுத்து வரும் பேட்டர்களுமே கூட சிறப்பாகவே ஆடுகின்றனர். ஜெமிமா, மரியானே கேப், ஜோனசென் என எல்லாருமே சரவெடியாக வெடிக்கிறார்கள். பேட்டிங் யூனிட்டாகவே முழுமையாக க்ளிக் ஆகி அசத்துகிறார்கள். 200+ ஸ்கோரை அசால்ட்டாக எட்டிவிடுவதால் பௌலர்களுக்கும் சுமை குறைந்து பெரும் சுதந்திரத்தோடு வீகின்றனர். முதல் போட்டியிலேயே அமெரிக்காவிலிருந்து கிளம்பி வந்த தாரா நோரிஸ், 5 விக்கெட் ஹாலை எடுத்திருந்தார். நேற்றைய போட்டியில் இதே மாதிரியான பெர்ஃபார்மென்ஸ் வெளிப்படவில்லையெனினும் வெற்றிக்கு என்ன தேவையோ அதைச் செய்திருந்தார். டி20-ன் ட்ரெண்டுக்கேற்ப 7 - 8 பௌலர்கள் எனக் கச்சிதமாக, முழுமையாக ஓர் அணியாக செட்டில் ஆகியிருக்கிறார்கள்.

Batty
Batty
WPL

டெல்லி அணியின் இந்த ஒருங்கிணைவிற்கும் ஆதிக்கத்திற்கும் இரண்டு நபர்களுக்கு கிரெடிட்ஸ் கொடுத்தாக வேண்டும். ஒருவர் அந்த அணியின் கேப்டன் மெக் லேனிங், இன்னொருவர் அந்த அணியின் பயிற்சியாளர் ஜோனாதன் பேட்டி. மெக் லேனிங் ஒரு கேப்டனாக பெரும் அனுபவமிக்கவர். 4 டி20 உலகக்கோப்பை மற்றும் ஒரு ஓடிஐ கோப்பை என இவருடைய தலைமையில்தான் ஆஸ்திரேலிய அணி கோப்பைகளை வென்று குவித்திருக்கிறது. கிரிக்கெட் உலகிலேயே அதிக ஐ.சி.சி தொடர்களை வென்ற கேப்டன் எனும் பெருமையையும் இவர் பெற்றிருக்கிறார். மெக் லேனிங்கின் ஆளுமைத்திறனும் டெல்லி அணியின் ஆதிக்கத்திற்கு மிக முக்கிய காரணம். பயிற்சியாளர் பேட்டி இங்கிலாந்துக்காரர்.

இங்கிலாந்தின் `The Hundred' தொடரில் `Oval Invisible' அணிக்கு பயிற்சியாளராகப் பொறுப்பேற்று முதல் 2 சீசன்களிலுமே அந்த அணியை சாம்பியனாக்கியவர். கிட்டத்தட்ட அந்த `Oval Invisible' இடத்தில்தான் இப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இருக்கிறது. தன்னுடைய அனுபவத்தின் வழி புதிதாகக் கட்டமைக்கப்படும் ஓர் அணியைச் சிறப்பாகப் பயிற்றுவித்து வருகிறார்.