Published:Updated:

WPL : ஆரஞ்சு கேப்பும் மிரள வைக்கும் பௌலிங்கும்; அங்க பொல்லார்ட் எப்படியோ இங்க ஹேலி அப்படி!

Haley ( WPL )

வுமன்ஸ் ப்ரீமியர் லீக் தொடரின் இயக்கத்துக்கு வேகமூட்டும் முக்கிய கரீபியராக ஹேலி மேத்யூஸ் இருக்கப்போகிறார் என்பதற்கான அறிகுறியாகவே முதல் இரண்டு போட்டிகளும் அமைந்திருக்கிறது.

Published:Updated:

WPL : ஆரஞ்சு கேப்பும் மிரள வைக்கும் பௌலிங்கும்; அங்க பொல்லார்ட் எப்படியோ இங்க ஹேலி அப்படி!

வுமன்ஸ் ப்ரீமியர் லீக் தொடரின் இயக்கத்துக்கு வேகமூட்டும் முக்கிய கரீபியராக ஹேலி மேத்யூஸ் இருக்கப்போகிறார் என்பதற்கான அறிகுறியாகவே முதல் இரண்டு போட்டிகளும் அமைந்திருக்கிறது.

Haley ( WPL )
'மும்பை அணிக்கும் கரீபிய வீரர்களுக்கும் இடையே நெருக்கமான பந்தம் இருக்கிறது. ஒரு காலத்தில் ப்ராவோ அதன்பிறகு பொல்லார்ட் என மும்பை அணியின் பயணத்தில் கரீபிய வீரர்கள் தவிர்க்க முடியாதவர்களாக இருந்திருக்கிறார்கள். ஹேலி மேத்யூஸூம் அந்த வரிசையில் மும்பைக்கு முக்கியமான பங்களிப்பை அளிக்க தொடங்கியிருக்கிறார்.' என நேற்றைய ஆட்டத்தின் கமெண்ட்ரியில் ஹர்ஷா போக்லே பேசியிருந்தார்.
Haley
Haley
WPL

ஹேலி மேத்யூஸூக்கு இந்த நம்பிக்கையைச் சம்பாதிக்க இரண்டே இரண்டு ஆட்டங்கள் போதுமானதாக இருந்திருக்கிறது என்பதே ஆச்சர்யம். மேலும், வுமன்ஸ் ப்ரீமியர் லீக் தொடரில் ஆரஞ்சு தொப்பியை அணியும் முதல் வீராங்கனை எனும் பெருமையையும் ஹேலி பெற்றிருக்கிறார்.

வுமன்ஸ் ப்ரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் பெங்களூர் அணியை நேற்று எதிர்கொண்டிருந்தது. 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையே இந்த போட்டியை வென்றிருந்தது. முதல் போட்டியிலும் குஜராத்திற்கு எதிராக மும்பை அணியே 143 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இரண்டுமே மிகப்பெரிய வெற்றி. மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த இரண்டு வெற்றியிலுமே ஹேலி மேத்யூஸின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. முதல் போட்டியில் மும்பை அணி முதலில் பேட் செய்து 207 ரன்களை எடுத்திருந்தது. ஓப்பனிங் இறங்கிய ஹேலி அதிரடியாக 48 ரன்களை எடுத்திருந்தார். இந்த அதிரடியான தொடக்கம்தான் மும்பை அணி அத்தனை பெரிய ஸ்கோரை எடுக்க முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

பெங்களூருவிற்கு எதிரான நேற்றைய போட்டியிலுமே 156 ரன்களை சேஸ் செய்த போது 38 பந்துகளில் 77 ரன்களை அடித்திருந்தார். ஏறக்குறைய 50% ரன்களை ஹேலி மட்டுமே அடித்திருந்தார். கரீபிய வீரர்களுக்கே உரிய ஹார்ட் ஹிட்டிங் திறனோடு நுட்பமாக டைம் செய்து ஆடும் ஷாட்களையும் சேர்த்து ஹேலி நேர்த்தியாக ஆடுகிறார்.

மேலும், அதிரடியாக ஆட வேண்டும் என்பது மட்டுமே ஹேலியின் முதன்மை நோக்கமாக இருக்கிறது. ஸ்பின்னர்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் என எந்த பௌலருக்கு எதிராகவும் அக்ரஸிவாக ஆடுவதையே விருப்பமாக கொண்டிருக்கிறார். பெங்களூர் அணி நிர்ணயித்த 156 ரன்கள் டார்கெட்டை மும்பை அணி 14.2 ஓவர்களிலேயே எட்டிவிட்டது. சந்தேகமே இல்லாமல் ஹேலி மேத்யூஸூக்குதான் ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது. ஆனால், அந்த விருது அவரின் பேட்டிங்கிற்காக மட்டுமல்லாமல் பந்துவீச்சிற்கும் சேர்த்தே வழங்கப்பட்டது.

Haley
Haley
WPL
இந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசி 28 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பவர்ப்ளேயில் ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் ஸ்மிருதி மந்தனாவையும் ஹேதர் நைட்டையும் வீழ்த்தியிருந்தார். குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியில் பௌலிங்கில் ஹேலிக்கு அத்தனை முக்கியத்துவத்தை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கொடுக்கவில்லை.

வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் கடைசிக்கட்டத்தில் ஒரே ஒரு ஓவரை மட்டுமே ஹேலிக்கு ஹர்மன் வழங்கியிருந்தார். ஆனால், இந்தப் போட்டியில் அப்படியே தலைகீழாக பந்துவீச்சில் ஹேலிக்கு மிக முக்கிய பொறுப்பு ஒன்றை ஹர்மன்ப்ரீத் கொடுத்திருந்தார். ஸ்மிருதி மந்தனாவின் விக்கெட்டை வீழ்த்துவதே ஹேலிக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். ஸ்மிருதி அதிரடியான வீராங்கனை. கேப்டனாகவும் இருக்கிறார் என்பதால் ஓப்பனராக கூடுதல் பொறுப்போடு ஆட வேண்டிய தேவையோடு களமிறங்கினார். மேலும், டாஸின் போது ஸ்மிருதி ஒரு விஷயத்தை அழுத்தி சொன்னார். அதாவது, டாப் 4 பேட்டர்களில் ஒருவராவது 16-17 வது ஓவர் வரை நின்று பேட்டிங் ஆட வேண்டும் என்று பேசியிருந்தார். ஆக, நிலைத்து நின்று பெரிய இன்னிங்ஸை ஆட வேண்டும் என்பதே ஸ்மிருதியிம் எண்ணமாக இருந்தது. ஸ்மிருதியின் எண்ணத்தை நிறைவேறவிடாமல் தடுத்தவர் ஹேலிதான். 6 வது ஓவரிலேயே அதாவது பவர்ப்ளேக்குள்ளாகவே ஸ்மிருதியின் விக்கெட்டை ஹேலி காலி செய்தார்.

ஸ்மிருதி நல்ல வேகத்தை எப்போதுமே சிறப்பாக ஆடுவார். ஆக அவருக்கு எதிராக ஸ்பின்னர்களை கொண்டு அட்டாக் செய்ய வேண்டும் என எண்ணியே இசாக்கையும் ஹேலியையும் பவர்ப்ளேக்குள்ளேயே ஹர்மன் வீச வைத்திருந்தார். ஹேலிதான் இன்னிங்ஸின் முதல் ஓவரையே வீசியிருந்தார். ஸ்மிருதி இடது கை பேட்டர் என்பதால் அடிப்படையான மேட்ச் அப்பின் படி ஒரு ஆஃப் ஸ்பின்னரை அவருக்கு எதிராக வீச வைப்பதுதான் சரியாக இருக்கும். ஹர்மனிடமிருந்த 7 பௌலிங் ஆப்சன்களில் மூவர் ஸ்பின்னர்கள். இசாக் இடதுகை ஸ்பின்னர். அமலியா கெர் லெக் ஸ்பின்னர். மேட்ச் அப்பின் படி இந்த இரண்டு ஆப்சன்களை ஆஃப் ஸ்பின்னரான ஹேலிதான் ஸ்மிருதியை டேக்கிள் செய்ய சரியான ஆளாக இருப்பார். அதனால்தான் அவருக்கு இன்னிங்ஸின் முதல் ஓவரையே ஹேலியை வைத்து தொடங்கினார் ஹர்மன். அணி நம்பிக்கொடுத்த ஒரு வேலையை ஹேலி வெற்றிகரமாக செய்து முடித்திருந்தார். இதற்காகவும்தான் அவருக்கு ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது

Haley
Haley
WPL

மும்பை அணியில் மட்டுமல்ல, ஐ.பி.எல் என்று எடுத்துக் கொண்டால் எல்லா அணியிலுமே வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முக்கியமான மைய வீரர்களாக பெரிய பங்களிப்புகளை அளித்திருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல் எனும் அந்த மாபெரும் தொடர் உயிர்ப்போடு இயங்குவதை உறுதி செய்யும் எண்டெர்டெயினர்களாக கரீபியர்கள் இயங்கி வருகின்றனர். அந்தவகையில் வுமன்ஸ் ப்ரீமியர் லீக் தொடரின் இயக்கத்துக்கு வேகமூட்டும் முக்கிய கரீபியராக ஹேலி மேத்யூஸ் இருக்கப்போகிறார் என்பதற்கான அறிகுறியாகவே முதல் இரண்டு போட்டிகளும் அமைந்திருக்கிறது.