Published:Updated:

``செஞ்சுரி நம்பர் 42!” - மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக மாஸ் காட்டிய கோலி

கோலி
கோலி ( AP )

`ஒருநாள் கிரிக்கெட்டில் கோலியின் மற்றுமொரு மாஸ்டர் க்ளாஸ் இன்னிங்ஸ்' என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி பாராட்டியுள்ளார்.

இந்திய அணி தற்போது மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி முழுமையாக வெற்றிகொண்டது. அதைத் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பமானது. முதலாவது ஆட்டம் மழை காரணமாக முடிவு எட்டப்படாமல் முடிவுக்கு வர, நேற்று இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஒர் ஸ்பயினில் உள்ள பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

கோலி - ரோஹித்
கோலி - ரோஹித்
AP

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரரான தவான் 2 ரன்னில் ஆட்டமிழக்க முதல் ஓவரிலேயே களத்துக்கு வந்தார் கோலி. ஒரு புறம் ரோஹித் சர்மா நிதானம்காட்ட, கோலி தன்னுடைய வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோஹித் சர்மா 18 ரன்னில் ஆட்டமிழக்காமல் அரைசதம் கடந்த கோலி. அதன் பின்னர் வந்த பன்ட், சில ஷாட்டுகள் மூலம் நம்பிக்கை தந்தாலும் அவர் தொடர்ச்சியாக நின்று ஆடத் தவறிவிட்டார்.

அதன் பின்னர், கோலியுடன் சேர்ந்தார் இளம் வீரர் ஸ்ரேயஸ் அய்யர். இருவரும் நேர்த்தியாகும் அதிரடியாகவும் விளையாட இந்திய அணியின் ஸ்கோர் வேகம் எடுத்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடி கோலி ஒருநாள் போட்டிகளில் தனது 42-வது சதத்தை அடித்தார். சிறப்பாக விளையாடி வந்த நிலையில் கோலி 120 ரன்னில் ஆட்டமிழந்தார்.

சதம் அடித்த மிகிழ்ச்சியில் கோலி
சதம் அடித்த மிகிழ்ச்சியில் கோலி
AP

அரை சதம் அடித்த ஸ்ரேயஸ் அய்யரும் 71 ரன்னில் ஆட்டமிழக்க, 50 ஓவர்கள் இறுதியில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்தது. பின்னர் 280 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியில் லீவிஸ் (65) மற்றும் பூரன் (42) தவிர்த்து மற்ற வீரர்கள் சொதப்பினர். ஆட்டத்தின் நடுவே மழை பெய்ததால், போட்டி 46 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டது. ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சில் மேற்கு இந்திய தீவுகள் அணி 42 ஓவர்களில் 210 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளும் ஷமி, குல்தீப் தலா 2 விக்கெட்டுகளையும் கலீல், ஜடேஜா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

சர்வதேச அரங்கில் தனது 67-வது சதத்தை (டெஸ்ட் + ஒருநாள்) அடித்த கோலி ஆட்டநாயகனாகத் தேர்தெடுக்கப்பட்டார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக அரைசதம் அடித்தாலும் அவரால் அதைச் சதமாக மாற்ற முடியாமல் சிரமப்பட்டார். தற்போது அவர் சதமடித்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

கோலி
கோலி
AP

ஆட்டநாயகன் விருதைப் பெற்றபின் பேசிய கோலி, `இந்த ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்ய உதவியாக இருந்தது. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய ஒத்துழைக்கவில்லை. மழை பெய்யாமல் இருந்திருந்தால் மேற்கு இந்திய தீவுகள் அணியின் வீரர்கள் இன்னும் சிரமமாக உணர்ந்திருப்பார்கள்.

`தோனி பாணியில் ஃபினிஷிங்; கெத்து காட்டிய பன்ட் !’ - வெஸ்ட் இண்டீஸை ஒய்ட் வாஷ் செய்த இந்தியா

அணிக்குத் தேவையான நேரத்தில் சதமடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய அணியில் முதல் மூன்று வீரர்களில் யாராவது ஒருவர் பெரிய இலக்கை எடுத்துவிடுகிறோம். இன்று ரோஹித் மற்றும் தவான் சீக்கிரமாக வெளியேறிவிட்டனர். இன்று எனக்கான வாய்ப்பு என நினைக்கிறேன். பூரன், ஹெட்மயர் ஆடும்போது எங்கள் பக்கம்தான் பிரஷர் இருந்தது. எனினும், ஒரு விக்கெட் விழுந்துவிட்டால் எல்லாம் மாறிவிடும் என நம்பினோம். நாங்கள் நினைத்தது மாதிரியே விக்கெட் கிடைத்ததும் எல்லாம் மாறிவிட்டது.

இந்திய அணி
இந்திய அணி

ஸ்ரேயஸ் நம்பிக்கையான வீரர். அவர் சிறப்பாக விளையாடியதுதான் என் மீதான பிரஷர் குறைந்தது. நான் ஆட்டமிழந்த பின்னரும் அவர் அணிக்கு ரன் சேர்த்தார்” என்று பாராட்டினார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி, `ஒருநாள் கிரிக்கெட்டில் கோலியின் மற்றுமொரு மாஸ்டர் க்ளாஸ் இன்னிங்ஸ்’ எனப் பாராட்டியுள்ளார்.

3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் புதன்கிழமை இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு