Published:Updated:

India v New Zealand: சதம் மேல் சதம் அடித்து மிரட்டும் கில்லும் தொடரை வென்ற இந்தியாவும்!

Gill |INDvNZ ( BCCI )

வேட்டைக்கு காத்திருந்த சிங்கம் போல கில் நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை திணறடித்தார். தொடர்ந்து அடுத்தடுத்த சிக்ஸர்களை லெக் சைடிலும் ஆஃப் சைடிலும் விளாசி கொண்டிருந்தார்.

Published:Updated:

India v New Zealand: சதம் மேல் சதம் அடித்து மிரட்டும் கில்லும் தொடரை வென்ற இந்தியாவும்!

வேட்டைக்கு காத்திருந்த சிங்கம் போல கில் நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை திணறடித்தார். தொடர்ந்து அடுத்தடுத்த சிக்ஸர்களை லெக் சைடிலும் ஆஃப் சைடிலும் விளாசி கொண்டிருந்தார்.

Gill |INDvNZ ( BCCI )
`When it rains, it pours' என்பார்கள். கில்லின் அதிரடிகளை பார்க்கும்போது இப்படித்தான் தோன்றுகிறது. ஓடிஐ, டி20 என பாரபட்சம் பார்க்காமல் சதங்களாக அடித்து வெளுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் கில்லின் அண்டர் 19 பெர்பார்மன்ஸ்ஸை வியந்து பார்த்த விராட் கோலி இவ்வாறு தெரிவித்தார். "நான் 19 வயதில் இந்திய அணிக்காக விளையாடும் போது சுப்மன் கில்லின் திறமையில் 10% கூட எனக்கில்லை". இந்த பாராட்டுகளெல்லாம் மிகையில்லை என்பதை உணர்த்தும் வகையில் கில் நேற்று இன்னொரு சம்பவத்தையும் செய்து இந்திய அணியை வெல்ல வைத்திருக்கிறார்.
Gill
Gill
BCCI

வாழ்வா சாவா என்ற கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியுள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் படையில் களமிறங்கிய ஒவ்வொரு வீரர்களும் தங்களது அதிரடியான பெர்ஃபார்மன்ஸ்யை கொடுத்ததால் மட்டுமே இத்தொடரை வெல்ல முடிந்திருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தியிருந்தார் கில். ஆனால் டி20 தொடரில் அவரது அதிரடியை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை என்ற பேச்சுகள் உலாவி வந்தன. இதை தனது பேட்டிங்கால் உடைத்தெறிந்தார் கில். கடந்த இரண்டு டி20 போட்டிகளில் 18 ரன்கள் மட்டும் தான் எடுத்திருந்தார் கில். மூன்றாவது போட்டியில் கில்லுக்கு பதிலாக பிரித்திவி ஷாவை ஆட வைக்கலாம் என்று பேசப்பட்டது. ஆனால் அணி நிர்வாகம் கில் மீது நம்பிக்கை வைத்தது. அந்த நம்பிக்கையை தனது முதல் சதம் மூலம் காப்பாற்றி இருக்கிறார் கில். கில்லின் அண்டர் 19 பெர்பார்மன்ஸ்யை வியந்து பார்த்த விராட் கோலி இவ்வாறு தெரிவித்தார். இந்திய வீரர்களில் டி20 போட்டிகளில் விராட் கோலியி அடித்த 122 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்த சாதனையையும் நேற்று கில் முறியடித்திருக்கிறார்.

டாஸ் வென்ற இந்தியா, கில்- இஷான் கூட்டணி களமிறங்கியது . ஒரு ரன்னில் பெலியன் திரும்பினார் இஷான் கிஷன். அடுத்து இணைந்த திரிபாதி -கில் ஜோடி ரன் மழை பொழிந்தது. இருவரும் பவர் பிளேயில் தடுப்பாட்டமாடாமல் களத்திற்கு ஏற்றவாறு நியூசிலாந்து பௌலிங்கிற்கு எதிராக அதிரடி காட்டிக் கொண்டிருந்தனர். ஒரு பக்கம் கில் பவுண்டரிகள் விளாச மறுபக்கம் திரிபாதி தன் பங்கிற்கு சிக்ஸர்களை விரட்டிக் கொண்டிருந்தார். இந்த கூட்டணி காரணமாக பவர் பிளேயில் 59 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா.

சிக்ஸர்கள் பவுண்டரிகள் விளாசிய திரிபாதி அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. நல்ல ஃபார்மில் ஆடிக் கொண்டிருந்த திரிபாதி, சோதி பந்தில் அடித்த ஷார்ட் சிக்ஸராக மாற வேண்டிய பந்து ஃபெர்குசல் கையில் விழுந்தது. ஆனால் 22 பந்துகளின் 44 ரன்களை குவித்து இந்திய அணிக்கு நல்ல பங்களிப்பை கொடுத்து சென்றிருந்தார் திரிபாதி.

நிதானமாக ரன்களை குவித்து 50 ரன்களை கடந்தார் கில். சூர்ய குமாரின் அதிரடியான ஃபார்ம் இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது. ஆனால், ப்ரேஸ்வெலின் அசத்தலான டைவிங் கேட்ச்சாக் சூர்ய குமார் 24 ரன்களில் அவுட் ஆகினார்.

Gill |INDvNZ
Gill |INDvNZ
BCCI
வேட்டைக்கு காத்திருந்த சிங்கம் போல கில் நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை திணறடித்தார். தொடர்ந்து அடுத்தடுத்த சிக்ஸர்களை லெக் சைடிலும் ஆஃப் சைடிலும் விளாசி கொண்டிருந்தார். கில் அடித்த ஒவ்வொரு சிக்ஸர்களும் அவரது மிடில் பேட்டிலிருந்து பறந்தன. பண்டரியுடன் முதல் சதத்தை அடித்தார் கில். "இன்னும் ஆட்டம் முடியலப்பா" என கடைசிவரை நாலா பக்கங்களும் வானவேடிக்கைகள் காட்டினார் கில்

இறுதிவரை ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் 12 பவுண்டரிகள் 7 சிக்ஸர்களுடன் 126 ரன்கன் குவித்தார் கில். கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் தன் பங்கிற்கு 30 ரன்கள் விளாச 20 ஓவர் முடிவில் 234 ரங்கன் நியூசிலாந்துக்கு இலக்காக நிர்ணயித்தனர்.

இந்திய அணியின் அதிரடியான பேட்டிங் பெர்ஃபார்மன்ஸால் முதல் இன்னிங்ஸ் நிறைய இரண்டாவது இன்னிங்ஸ் இந்திய அணியின் பௌவுலர்கள் அதிரடி காட்டினர் மிகப்பெரிய ரன்கள் சேஸ் செய்யும் முனைப்பில் களம் இறங்கிய ஃபின் -கான்வே கூட்டணியை தனது முதல் ஓவரிலேயே பிரித்தார் ஹர்திக் பாண்டியா.

முதல் பந்தில் அர்ஷதிப் சிங் கான்வே விக்கெட்டை எடுக்க 4-2 என்று தடுமாறிக் கொண்டிருந்தது நியூசிலாந்து. பவர் பிளே முடிவில் நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட்டுகள் இழந்து 30 ரன்கள் எடுத்திருந்தது. சூர்யகுமார் ஸ்லிப்பில் பிடித்த இரண்டு கேட்ச்சுள் பிரமிக்க வைத்தன. அடுத்து இந்திய அணியின் பௌலர்களின் அசத்தலான பந்துவீச்சால் அடுத்தடுத்து நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. மிட்செல் மட்டும் அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்திருந்தார்.

Hardik Pandya
Hardik Pandya
BCCI

பௌலிங் பொருத்தமட்டில் அர்ஷதிப், சிவம் மாவி, உம்ரான் கான் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹர்திக் பாண்டியா 16 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் எடுத்திருந்தார். ஒட்டுமொத்தமாக இந்திய பௌலர்களின் சிறந்த ஆட்டத்தினால் நியூசிலாந்து அணியை 66 ரன்களில் சுருட்ட முடிந்தது. இறுதியில் 168 ரன்கன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றிருக்கிறது பாண்டியா தலைமையிலான இந்திய அணி. அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்ற ஆட்டம் இதுதான்.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் தோல்வி, அடுத்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுத்து தொடரை வென்றிருக்கிறது இந்திய அணி.