Published:Updated:

INDvSA: சரவெடி சூர்யகுமார்; துணை நின்ற கோலி; வெற்றிதான் ஆனாலும் அந்த டெத் ஓவர்!

Suryakumar Yadav ( AP )

அவர் ஆடிய சில ஷாட்டுகளுக்கெல்லாம் இனி அவரேதான் ஒரு பெயரை புதிதாக வைத்துக் கொள்ள வேண்டும். அந்தளவுக்கு பௌலர்கள் எப்படி வீசினாலும் அதற்கான பதிலாக சூர்யகுமாரின் பேங்கில் ஒரு அதிரடி ஷாட் கட்டாயம் இருக்கிறது.

INDvSA: சரவெடி சூர்யகுமார்; துணை நின்ற கோலி; வெற்றிதான் ஆனாலும் அந்த டெத் ஓவர்!

அவர் ஆடிய சில ஷாட்டுகளுக்கெல்லாம் இனி அவரேதான் ஒரு பெயரை புதிதாக வைத்துக் கொள்ள வேண்டும். அந்தளவுக்கு பௌலர்கள் எப்படி வீசினாலும் அதற்கான பதிலாக சூர்யகுமாரின் பேங்கில் ஒரு அதிரடி ஷாட் கட்டாயம் இருக்கிறது.

Published:Updated:
Suryakumar Yadav ( AP )
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி நடந்து முடிந்திருக்கிறது. முதல் பந்திலிருந்தே பரபரப்பையும் சுவாரஸ்யத்தையும் எட்டிய இந்தப் போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி இந்தத் தொடரையும் கைப்பற்றியிருக்கிறது. இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்கவிற்கு எதிராக இந்தியா வெல்லும் முதல் டி20 தொடர் இதுவே.

'What a Shot that is..... fine shot... glorious shot...' நேற்றைய போட்டி முழுக்க ஒரு 250 தடவையாவது ரவி சாஸ்திரி தொண்டை வற்ற இப்படியான வர்ணனைகளைக் கொடுத்திருந்தார். போட்டியைப் பார்த்துவிட்டு இரவு தூங்குகையில் எங்கோ தூரத்தில் ரவி சாஸ்திரியின் 'What a shot...' எனும் குரல் கேட்டுக் கொண்டே இருப்பது போன்றிருந்தது. அந்தளவுக்கு நேற்று இரண்டு அணி வீரர்களும் பேட்டிங்கில் பிரித்தெடுத்துவிட்டார்கள். நேற்று காந்திஜியின் பிறந்தநாளும் கூட. எளிமை பற்றி பேசிய மகாத்மாவின் பிறந்தநாளன்று நடந்த போட்டியில் இரண்டு அணி வீரர்களும் அடித்ததெல்லாம் பிரமாண்டம் மட்டும்தான்!

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனான பவுமாதான் டாஸை வென்றிருந்தார். முதல் பந்துவீசப்போவதாக அறிவித்தார். இந்திய அணியில் வழக்கம்போல ரோஹித் சர்மாவும் ராகுலும் ஓப்பனர்களாக இறங்கினார்கள். முதல் டி20 போட்டியில் ராகுல் அரைசதம் அடித்திருந்தார். ஆனால், அவரின் ஸ்ட்ரைக் ரேட் 91 தான். எதிர்கொண்ட முதல் ஓவரிலேயே முழுமையாக டாட் ஆடி மெய்டனாக்கி விட்டிருந்தார். இங்கே இந்தப் போட்டியில் அதற்கு அப்படியே தலைகீழான இன்னிங்ஸை ஆடினார். முதல் பந்தையே பவுண்டரியோடு ஆரம்பித்தார். ரோஹித் கொஞ்சம் நின்று ஆடிய போதும் ராகுல் மட்டும் தொடர்ந்து அதிரடி காட்டினார். ரபாடா, பர்னல், நோர்கியா என தென்னாப்பிரிக்க வேகங்கள் அத்தனை பேரின் ஓவர்களிலுமே பவுண்டரிக்களையும் சிக்சர்களையும் வெளுத்தெடுத்தார். ரோஹித்-ராகுல் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்களை சேர்த்தது. அதிரடி காட்ட முயன்ற ரோஹித் ஸ்பின்னரான மகாராஜாவின் பந்தில் பவுண்டரி லைனில் கேட்ச் ஆகி வெளியேறினார். மகாராஜா வீசிய அடுத்த ஓவரிலேயே ராகுலும் ஸ்வீப் ஆட முயன்று lbw ஆகி வெளியேறினார்.

ராகுல் 28 பந்துகளில் 57 ரன்களை எடுத்திருந்தார். இந்த முறை ஸ்ட்ரைக் ரேட் 203.
Rohit-Rahul |INDvSA
Rohit-Rahul |INDvSA
ICC

ஓப்பனர்கள் இருவரும் அவுட் ஆன பிறகு, விராட் கோலியும் சூர்யகுமார் யாதவும் கூட்டணி சேர்ந்தனர். இந்த கூட்டணிதான் போட்டியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது. குறிப்பாக, சூர்யகுமார் வீடியோ கேமில் கிரிக்கெட் ஆடுவதை போல ரொம்ப சுலபமாக அத்தனை பௌலர்களையும் விளாசி தள்ளினார்.

லுங்கி இங்கிடியும் ரபாடாவும் வீசிய 15-16 இந்த இரண்டு ஓவர்களில் மட்டும் 38 ரன்களை இந்திய அணி எடுத்திருந்தது. இதில், சூர்யகுமார் மட்டும் 34 ரன்களை எடுத்திருந்தார். நிறைய பந்துகள் ஃபுல் டாஸாக விழ அத்தனையையும் க்ளியர் கட்டாக பவுண்டரிக்கு வெளியே பறக்கவிட்டார்.
SKY
SKY
SKY

அவர் ஆடிய சில ஷாட்டுகளுக்கெல்லாம் இனி அவரேதான் ஒரு பெயரை புதிதாக வைத்துக் கொள்ள வேண்டும். அந்தளவுக்கு பௌலர்கள் எப்படி வீசினாலும் அதற்கான பதிலாக சூர்யகுமாரின் பேங்கில் ஒரு அதிரடி ஷாட் கட்டாயம் இருக்கிறது. பதினெட்டே பந்துகளில் அரைசதத்தை கடந்துவிட்டார். 22 பந்துகளில் 61 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ஆடிய வேகத்திற்கு நின்றிருந்தால் சதம் கூட அடித்திருப்பார். இன்னொரு முனையில் கோலியுமே வழக்கத்தை விட அதிக வேகமாகவே ஷாட்களை ஆடினார். கடைசியில் அரைசதம் கூட வேண்டாம் என தினேஷ் கார்த்திக்கை ஆடச் சொல்லி தன்னை ஒரு டீம் ப்ளேயராக மீண்டும் நிரூபித்துக் கொண்டார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 237 ரன்களை எடுத்தது.

தென்னாப்பிரிக்கவிற்கு இது ஒரு அசாத்தியமான ஸ்கோராக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. தீபக் சஹார் வீசிய முதல் ஓவர் முழுவதும் பவுமாவினால் டாட் ஆடப்பட்டு மெய்டன் ஆனது. அர்ஷ்தீப் வீசிய இரண்டாவது ஓவரில் பவுமா, ரூசோவ் என இரண்டு விக்கெட்டுகளும் விழுந்தன. பவர்ப்ளேயில் தென்னாப்பிரிக்கவின் ஸ்கோர் 45 மட்டுமே. தேவைப்பட்ட ரன்ரேட் ஏறக்குறைய 14 க்கு சென்றுவிட்டது. தென்னாப்பிரிக்க அத்தோடு முடிந்தது என்றே தோன்றியது. ஆனால், இதன்பிறகு உள்ளே வந்த மில்லர் ஆட்டத்தை மாற்றத் தொடங்கினார்.

அடிக்க ஆரம்பித்தால் எதைப் பற்றியும் யோசிக்காமல் தயவு தாட்சண்யமின்றி வெளுத்தெடுப்பாரே...அப்படி ஒரு இன்னிங்ஸைத்தான் நேற்று மில்லர் ஆடினார்.
Miller |INDvSA
Miller |INDvSA
ICC

முதல் 10 ஓவர்களில் இரண்டே இரண்டு ஓவர்களில்தான் தென்னாப்பிரிக்க அணி 10 ரன்களுக்கும் அதிகமாக ஸ்கோர் செய்திருந்தது. அதேநேரத்தில், இரண்டாவது 10 ஓவரில் 8 ஓவர்களில் 10 ரன்களுக்கும் மேலாக எடுத்திருந்தனர். கிட்டத்தட்ட இந்திய அணியின் அத்தனை பௌலர்களையும் மில்லர் ஒற்றை ஆளாக நின்று சமாளித்து போட்டியை பரபரப்பாக்கிவிட்டார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் 78 ரன்கள். கடைசி 2 ஓவர்களில் மட்டும் 46 ரன்கள். பெரும்பாலும் மில்லர்தான் அடித்தார். டீகாக் அவருக்கு துணையாக மட்டுமே நின்றார். மில்லர் 47 பந்துகளில் 106 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். எளிதாக வெல்ல வேண்டிய போட்டியை இந்திய அணி நொந்து நூலாக்கி 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்திய அணிக்கு வெற்றிதான். ஆனால், வெற்றி என்பது பேட்டர்களுக்கு மட்டுமே சொந்தமானது. இந்திய பௌலர்கள் தோல்வியடையவே செய்திருக்கின்றனர். அதுவும் டெத் ஓவர்களில் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கின்றனர். பௌலிங்கும் சிறப்பானால் மட்டுமே டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

Team India |INDvSA
Team India |INDvSA
ICC
பௌலிங் இப்படியே இருக்கும்பட்சத்தில், ஒவ்வொரு போட்டியிலுமே பேட்டர்களால் 237 ரன்களை எடுத்துக்கொடுக்க முடியுமா?