Published:Updated:

``வாவ் இலங்கை ஃபேன்ஸ்!” - மைதானத்தில் நெகிழ்ந்த வில்லியம்சன்

பிரேம் குமார் எஸ்.கே.

வில்லியம்சனுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

வில்லியம்சன்
வில்லியம்சன்

கிரிக்கெட் உலகில் சில வீரர்களுக்கு நாடுகளைக் கடந்து உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பார்கள். அது கிரிக்கெட்டை அவர்கள் விளையாடும் விதம் என்பதைத் தாண்டி களத்தில் குறிப்பிட்ட வீரரின் செயல்பாடும் காரணமாக அமையும். கெயில், பிராவோ, சச்சின், கில்கிறிஸ்ட் என சில வீரர்களை உதாரணமாகச் சொல்லலாம்.

வில்லியம்சன் - கோலி
வில்லியம்சன் - கோலி

ஆனால், இப்போது அந்தப் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கும் பெயர் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன். வில்லியம்சனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இறுதி வரை போராடி தோல்வி அடைந்தபோது உலக கிரிக்கெட் ரசிகர்கள் நியூசிலாந்து பக்கம் நின்றனர். இவர்களில் பலரும் வில்லியம்சனின் ரசிகர்கள்தாம்.

தற்போது நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இலங்கை பிரசிடென்ட் லெவன் அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் அந்த அணி விளையாடுகிறது. இந்த ஆட்டம் நேற்று தொடங்கியது. நேற்று வில்லியம்சனுக்கு 29-வது பிறந்தநாள்.

வில்லியம்சன்
வில்லியம்சன்

பயிற்சி ஆட்டத்துக்கு வந்த ரசிகர்கள் வில்லியம்சனுக்கு பிறந்தநாள் கேக் எடுத்து வந்தனர். வில்லியம்சனும் அவர்களை ஏமாற்றாமல் களத்தில் இருந்து போட்டிக்கு நடுவே ரசிகர்களை நோக்கிச் சென்று, அவர்களிடம் இருந்து கேக்கை பெற்றுக் கொண்டார். இந்த நெகிழ்ச்சி சம்பவம்தான் தற்போதைய கிரிக்கெட் உலகின் வைரல் ஹிட்.

வில்லியம்சனுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்திய வீரர் தவான், `எந்த வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடக்கூடியவர் கேன்... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.