Published:Updated:

`5 ஆண்டுகளில் முதல் தொடர் வெற்றி; பூச்சி, காற்று மாசு பிரச்னை!' - ஆப்கனை வென்ற வெஸ்ட் இண்டீஸ்

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் ( Twitter )

ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஒருநாள் தொடர் உ.பி மாநிலம் லக்னோவில் நடந்தது. இவ்விரு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. இந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. இதில், முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, நிகோலஸ் பூரன், எல்வின் லூவிஸ் ஆகியோரின் அரை சதத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் சேர்த்தது. பூரன் 67 ரன்களும் லூவிஸ் 54 ரன்களும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் உல்ஹக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கேப்டன் ரஷீத் கான் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ்

இதையடுத்துக் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி, 45.4 ஓவர்களில் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நஜிபுல்லா சர்தான் மட்டும் அரை சதம் அடித்தார். அவர், 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடரையும் வென்றது. கடந்த ஐந்து ஆண்டுகளில், வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்ற முதல் ஒருநாள் தொடர் வெற்றி இதுவாகும். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கார்ட்டெல், சேஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தோனி சாதனையை முறியடித்த கோலி! - வெஸ்ட் இண்டீஸ் தொடரை முழுமையாக வென்ற இந்தியா #WIvIND

போட்டி நடைபெறும் லக்னோவில், காற்று மாசு காரணமாகப் புகை மண்டலம்போல் மைதானம் காட்சியளித்தது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சிலர் மாஸ்க் அணிந்தபடி ஃபீல்டிங் செய்தனர். அதேபோல், ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, மைதானத்தில் பூச்சிகள் படையெடுத்தன.

மைதானத்தில் குவிந்த பூச்சிகள்
மைதானத்தில் குவிந்த பூச்சிகள்

இது, வீரர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. காற்று மாசு காரணமாகப் போட்டியை பாதியில் நிறுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை நடுவர் ஏற்கவில்லை.