Election bannerElection banner
Published:Updated:

அதிவேக சதம் அடித்தும் கொண்டாட்டம் இல்லை... வொண்டர் உமன் சோஃபி டிவைன் ஏன் அப்படி செய்தார்?!

சோஃபி டிவைன்
சோஃபி டிவைன்

இந்தப் போட்டியில் அதிகபட்சமாக 36 பந்துகளில் 100 ரன்களை எடுத்ததன் மூலம் பெண்களுக்கான டி-20 போட்டியில் அதிவேக சதத்தை அடித்தவர் என்ற சாதனையை சோஃபி டிவைன் படைத்திருக்கிறார்.

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் சூப்பர் ஸ்மாஷ் மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதத்தை பதிவு செய்துள்ளார் ஆல்ரவுண்டர் சோஃபி டிவைன்.

கடந்த வியாழக்கிழமை வெலிங்டன் பிளேஸ் மற்றும் ஒடாகோ ஸ்பார்க்ஸ் அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஒடாகோ ஸ்பார்க்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

பின், 129 ரன்களை இலக்காக கொண்டு களமிளறங்கிய வெலிங்டன் பிளேஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சோஃபி டிவைன் மற்றும் மேடி கிரீன் ஆகியோர் அதிரடியாக விளையாட, 8.4 ஓவரில் 131 ரன்களை அடித்து மாபெரும் வெற்றி பெற்றது வெலிங்டன் பிளேஸ் அணி.

இந்தப் போட்டியில் அதிகபட்சமாக 36 பந்துகளில் 100 ரன்களை எடுத்ததன் மூலம் பெண்களுக்கான டி-20 போட்டியில் அதிவேக சதத்தை அடித்தவர் என்ற சாதனையை சோஃபி டிவைன் படைத்திருக்கிறார். ஆண்களுக்கான டி-20 கிரிக்கெட் போட்டியில் 2013-ம் ஆண்டு கிறிஸ் கெயில்.30 பந்துகளில் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியில், சோஃபி டிவைன். 35 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தபோது, 36-வது பந்தை சிக்ஸராக்கும் முயற்சியில் தூக்கி அடித்தார். அந்தப்பந்து நேராக பார்வையாளர் பகுதியில் உட்கார்ந்திருந்த சிறுமியின் மீது பட்டது. உடனடியாக அந்தச் சிறுமிக்கு அருகிலிருந்தவர்கள் முதலுதவி செய்தனர்.

சோஃபி டிவைன்
சோஃபி டிவைன்

சதம் அடித்த சந்தோஷத்தை பெரிதும் கொண்டாடாத சோஃபி டிவைன், அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு தள்ளி அணியை வெற்றி பெற வைத்த கையோடு, பார்வையாளர் பகுதிக்கு ஓடினார். தாயுடன் அமர்ந்திருந்த அந்தச் சிறுமியிடம் சென்று நலம் விசாரித்தார் சோஃபி.

டென்னிஸ் போட்டிகளில் பலமுறை இது போன்ற நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், கிரிக்கெட் வரலாற்றில், பார்வையாளர்கள் மீது அடிக்கப்பட்ட பந்துக்கு, மைதானத்திலேயே சென்று நலம் விசாரித்தது இதுவே முதல்முறையாகும்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவத்திற்குப் பின், சோஃபி டிவைனுக்கு பலரும் பாரட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். பெண்கள் கிரிக்கெட்டின் வொண்டர் வுமன் சோஃபி டிவைன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு