Published:Updated:

தோனி 40: இந்த மாஸ்தான் பாஸ் தோனி! கூல் ஃபினிஷரின் கதை!

தோனி
தோனி

என்ன செய்துவிட்டார் தோனி, இந்தளவுக்கு ரசிகர்களும், சக வீரர்களும், இவ்வளவு ஏன் தற்போதைய கேப்டன் கோலியே, "நீங்கள்தான் என்னுடைய நிரந்தரக் கேப்டன்" எனப் போற்றும் அளவுக்கு?!

மகேந்திர சிங் தோனி... 1000 வார்த்தைகளுக்குள் படம்பிடிக்க முடியாத, சரித்திரம் அவருடையது, சாதனைகள் அவருடையது‌. M.S. Dhoni: The Untold Story-யால்கூட முழுவதும் வடிக்க முடியாத போராட்டம் அவருடையது.

அங்குலம் அங்குலமாய், மைதானத்தின் மொத்தத்தையும், தன்னுடையதாக்கி, ஸ்டம்பின் பின்னால் சிம்மாசனமிட்டு, தனி ராஜ்ஜியம் நடத்தியவர்தான் தோனி. இந்திய பேட்டிங் படையில், இறுதியாய் இறங்கி அழிக்கும் பிரம்மாஸ்திரம் அவர். முற்றுப்புள்ளி என்று ஒன்று வரும்வரை, வார்த்தை முடிந்து போவதில்லை. அப்படித்தான், தோனியின் விக்கெட் வீழும்வரை, பேட்டிங்கில் இந்தியாவின் கதைக்கு முடிவுரை எழுதப்பட்டதில்லை. பாதிப் போட்டியில், ரன்ரேட்டைக் கணக்கிட்டு, சேனல் மாற்றிக் கொண்டிருந்த ரசிகர்களை, இதயம் நிறைந்த நம்பிக்கையோடு, கடைசிப் பந்துவரை, பார்க்க வைத்தவர் அவர்‌. அதனால்தான், இன்னமும் 2019 உலகக்கோப்பை ரன்அவுட், காலத்தால் அழிக்க முடியாத வலியாக இருக்கிறது.

தோனி என்னும் தலைவனின் சிறப்புகள்... வீடியோ வடிவில் இதோ...

அடுத்த கட்டுரைக்கு