Published:Updated:

கிங் கோலியை நிச்சயம் கொண்டாடலாம்... ஆனால் ஒன்று மட்டும் மிஸ்ஸிங்! #KingKohli

ரன் மிஷன்தான், மாஸ்டர் பிளாஸ்டர்தான்... கிரிக்கெட் கடவுள்தான்... ஆனால் எங்கே மிஸ் ஆகிறார் கோலி?!

Virat Kohli
Virat Kohli

அடுத்த சச்சின் யார் எனக்கேட்டுக்கொண்டிருந்தோம்... அடுத்தக் கோலி யார் எனக் கேட்கவைத்துவிட்டார் கிங் கோலி. மாஸ்டர் பிளாஸ்டர், ரன் மெஷின், God Of Cricket என சச்சினின் எந்த ஒரு அடைமொழிக்கும் தன்னைத் தகுதியானவராகப் பொருத்திக்கொண்டுவிட்டார் கோலி... ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் மிஸ் ஆகிறது. அது என்ன என்று பார்ப்பதற்கு முன் கிங் கோலியை கொண்டாடியே ஆகவேண்டும்!

Virat Kohli
Virat Kohli

இனிமேலும் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரன் யார் என்கிற விவாதங்கள் அர்த்தமற்றவை என்பதை நிரூபித்துவிட்டார் கோலி. டெஸ்ட், ஒரு நாள், டி20 என கிரிக்கெட்டின் மூன்று ஃபார்மேட்டிலுமே 50-க்கு மேல் ஆவரேஜ்வைத்துக்கொண்டு யாருமே கிட்ட நெருங்கமுடியாத பேட்ஸ்மேனாக உச்சத்தில் நிற்கிறார் விராட் கோலி.

டெஸ்ட்டில் 53.14, ஒருநாள் போட்டிகளில் 60.31, டி20 போட்டிகளில் 50.85 ஆவரேஜ் என்பது, எந்த கிரிக்கெட் வீரனாலும் கனவுகூட காணமுடியாத சாதனை. இந்த ஆவரேஜ்களை இன்னும் கொஞ்சம் பிரேக் டவுன் செய்துபார்த்தால் இன்னும் ஆச்சரியமளிக்கிறார் கோலி. சேஸிங்கில் விராட் கோலியின் ஆவரேஜ் என்பது ஒருநாள் போட்டிகளில் 68.50... டி20 போட்டிகளில் இன்னும் பயங்கரம்.. 81.23. அதாவது டி20 போட்டிகளில் இந்தியா சேஸ் செய்யும் ஒவ்வொருபோட்டியிலும் சராசரியாக 81 ரன்கள் அடிக்கிறார் கோலி.

இன்னும் கொஞ்சம் உள்ளே இறங்குவோம். இந்தியாவின் வெற்றிகரமான சேஸிங்கில் எல்லாம் கோலியின் ஆவரேஜ் என்பது இன்னும் ஆச்சர்யமளிக்கிறது. ஒருநாள் போட்டிகளில் 96.55. டி20 போட்டிகளில் 111.50 என அசாத்திய ஆவரேஜ் வைத்திருக்கிறார். டி20 போட்டிகளில் அதிகபட்ச 50 ப்ளஸ் ரன்கள் அடித்திருப்பவரும் கோலியே. புள்ளிவிவரங்கள் பொய் சொல்வதில்லை. ஆமாம்... இந்த மில்லினியல் தலைமுறையின் கிரிக்கெட் கடவுள் கோலிதான்.

Virat Kohli
Virat Kohli

டெஸ்ட்டில் ஸ்டீவன் ஸ்மித், ஒருநாள் போட்டிகளில் ரோஹித் ஷர்மா, டி20 போட்டிகளில் பாபர் ஆஸம் என அடுத்தடுத்து இருக்கும் வீரர்களுக்கும் கோலிக்குமான கன்சிஸ்டன்ஸியில் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. டெஸ்ட்டில் மட்டுமே ஸ்டீவன் ஸ்மித் கோலியைக் கொஞ்சம் நெருங்கிநிற்கிறார். மற்ற ஃபார்மேட்டில் எல்லாம் கோலிதான் அல்ட்டிமேட்.

ரன் மிஷன்தான், மாஸ்டர் பிளாஸ்டர்தான்... கிரிக்கெட் கடவுள்தான்... ஆனால் சச்சினைபோல, டிராவிடைப்போல ஒரு கிளாசிக்கல் பேட்ஸ்மேனாக கோலி இன்னும் உச்சம்தொடவில்லை என்பதே உண்மை.

எங்கே மிஸ் ஆகிறார் கோலி?!

கோலி மிஸ் செய்யும் இடம் அவரது பேட்டிங் ஸ்டைல். ஃப்ளிக், கவர் டிரைவ்களை சிறப்பாக ஆடுகிறார் கோலி. நேற்றுகூட ரபடாவின் 140கி.மீட்டர் வேகப்பந்தை ஜஸ்ட் ஒரு ஃப்ளிக்கால் கேலரிக்கு அனுப்பிவைத்தார். ஆனால், சச்சினின் பேட்டிங் ஸ்டைலில் இருந்த அந்த கொண்டாட்டம், அந்த உற்சாகம், ஒரு துள்ளல், ஒரு மகிழ்ச்சி, ஒரு சந்தோஷம், ஒரு திருப்தி கோலியின் பேட்டிங் ஸ்டைலில் இல்லை.

Virat Kohli
Virat Kohli

சச்சினின் பேட்டிங் ஸ்டைல் என்பது தனித்துவமானது. பார்ப்பவர்களுக்கு உற்சாகம் தரக்கூடியது. ஒழுங்குபட்ட, ஒரு இழையும் பிசகாத, விதிமுறைகள் விலகாத அற்புதமான பேட்டிங் ஸ்டைல் அது.

கவர் டிரைவ், ஸ்ட்ரெயிட் டிரைவ், ஃபிளிக் ஆஃப் தி லெக்ஸ் என சச்சினின் பேட்டிங்கில் இருந்த அந்தத் துள்ளல் கோலியின் பேட்டிங்கில் இல்லை. ஃப்ரண்ட் ஃபூட் டிரைவ், லாஃப்டட் ஷாட், பேக்ஃபூட் கட், சின்ன மூவ்மெண்ட்டோடு ஆடும் அந்த புல் ஷாட் என சச்சினின் பேட்டிங்கைப் பார்ப்பதே பரவசம். பேட்டிங் ஸ்டைலால் வசியம் செய்வார் சச்சின். அந்த மெஸ்மெரிசம் கோலியின் பேட்டிங்கில் மிஸ்ஸிங்.

Sachin Tendulkar
Sachin Tendulkar

சச்சினைப் போல கோலி ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப், லேட் கட் என வித்தியாச ஷாட்களை முயற்சி செய்துபார்க்கவேண்டும். ஆனால் தன்னுடைய வழக்கமான ஆட்டமுறையில் இருந்து விலகி கொஞ்சமாவது மாற்றங்களை, அந்த ஸ்டைலை, அந்தத் துள்ளலைக் கொண்டுவர முயற்சிக்கலாம்.

sachin tendulkar
sachin tendulkar

கோலி நம்பர் 1 வீரர்தான். ஆனால், சச்சினைப்போல, டிராவிடைப்போல கிளாசிக்கல் பேட்ஸ்மேனாக கோலி முழுமைபெற வேண்டும்!

Vikatan