Election bannerElection banner
Published:Updated:

''400 ரன்களைத் தாண்டியும் ஏன் இங்கிலாந்து டிக்ளேர் செய்யவில்லை?'' - காரணம் சொன்ன பயிற்சியாளர்!

இங்கிலாந்து வேகப்பந்து பயிற்சியாளர் - ஜான் லூயிஸ்
இங்கிலாந்து வேகப்பந்து பயிற்சியாளர் - ஜான் லூயிஸ்

400 ரன் லீட் தாண்டியும், டிக்ளேர் செய்யாமல் ஆல் அவுட் ஆகும்வரை இங்கிலாந்து விளையாடியது விமர்சனங்களை எழுப்பியது. டிக்ளேர் செய்யாமல் இன்னிங்ஸை இழுத்ததற்கு விளக்கம் அளித்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் பெளலிங் பயிற்சியாளர் ஜான் லூயிஸ்.

இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட்டின் நான்காம் நாள் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. 241 ரன் லீடிங்கோடு இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து டீ பிரேக் வரை பேட்டிங் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 400 ரன் லீட் தாண்டியும், டிக்ளேர் செய்யாமல் ஆல் அவுட் ஆகும்வரை விளையாடியது விமர்சனங்களை எழுப்பியது.

''ஜோ ரூட் ஆட்டத்தை டிராவை நோக்கி கொண்டுப்போவதுபோல தெரிகிறது'' என கமென்ட்டுகள் பறந்தன. டிக்ளேர் செய்யாமல் இன்னிங்ஸை இழுத்தற்கு விளக்கம் அளித்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் பெளலிங் பயிற்சியாளர் ஜான் லூயிஸ்.

''இந்தியா மிகச்சிறந்த வீரர்களைக் கொண்ட அணி. அதனால்தான் நாங்களாக இந்தியாவுக்கு எந்த வெற்றி வாய்ப்பையும் உருவாக்கிவிடாமல் எவ்வளவு ரன்கள் சேர்க்கமுடியுமோ அவ்வளவு சேர்த்தோம்'' என்று பத்திரிகையாளர் கேள்விக்கு பதில் சொன்னார் லூயிஸ்.

ஜோ ரூட்
ஜோ ரூட்

''முக்கிய விக்கெட்கள் விழுந்தப்பிறகும் பட்லர் உள்ளிட்ட கடைசிகட்ட பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்க்கவில்லையே?'' என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் ''அதிரடியாக ஆடி ரன்கள் சேர்ப்பதற்கு ஏற்ப பிட்ச் இல்லை. பிட்ச் இப்போது முழுமையாக மாறிவிட்டது. அத்தோடு இந்தியா அட்டாக்கிங் ஃபீல்டிங்கை செட் செய்திருந்தது. அதனால்தான் பெரிய ஷாட்களுக்கு முயற்சிசெய்யாமல் எவ்வளவு ரன்கள் சேர்க்கமுடியுமோ அவ்வளவு ரன்கள் சேர்த்தோம். நாங்கள் பிளான்செய்தபடியே இந்த நாள் முடிந்திருக்கிறது'' என்று சொல்லியிருக்கிறார் ஜான் லூயிஸ்.ம

இந்தியாவுக்கு 420 ரன் டார்கெட் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் நான்காது நாள் ஆட்டத்தை 39 ரன்களுக்கு ஒரு விக்கெட் என முடித்திருக்கிறது இந்தியா. ரோஹித் ஷர்மா அவுட் ஆக ஷுப்மான் கில்லும், புஜாராவும் களத்தில் நிற்கிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு