Published:Updated:

Ind vs SL : புதிய அத்தியாயத்திற்கான தொடக்கம்; மிடில் ஆர்டருக்கான ரேஸில் முந்தப்போவது யார்?

Ind vs SL

இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் பேட்டர்களின் பங்கு அளப்பரியது. அணியின் நம்பிக்கை பாத்திரமாக அவர்கள் என்றைக்கும் விளங்கி இருக்கிறார்கள்

Ind vs SL : புதிய அத்தியாயத்திற்கான தொடக்கம்; மிடில் ஆர்டருக்கான ரேஸில் முந்தப்போவது யார்?

இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் பேட்டர்களின் பங்கு அளப்பரியது. அணியின் நம்பிக்கை பாத்திரமாக அவர்கள் என்றைக்கும் விளங்கி இருக்கிறார்கள்

Published:Updated:
Ind vs SL

இந்திய இலங்கை அணிகள் மோதிக்கொள்ளும் முதல் டெஸ்ட் போட்டி நாளை மொஹாலியில் தொடங்குகிறது. இந்திய டெஸ்ட் அணியை முதல் முறையாக தலைமையேற்று நடத்தவிருக்கிறார் ரோஹித் ஷர்மா. கேப்டனாக ரோஹித்தின் முதல் போட்டியில் தன் நூறாவது டெஸ்ட் போட்டியை ஆடவிருக்கிறார் விராட் கோலி.

Rohit Sharma- Virat Kohli
Rohit Sharma- Virat Kohli

இந்த தனி நபர் மைல்கற்களை தாண்டி ஒரு புதிய தொடக்கத்திற்கான புள்ளியாக இந்திய அணிக்கு இத்தொடர் அமையப்போகிறது. சொந்த மண்ணில் நடைபெறும் தொடர், சற்றே பலவீனமான எதிராளி ஆகியவற்றையெல்லாம் தாண்டி இந்த புள்ளியே இத்தொடருக்கான முக்கியத்துவத்தை சற்று கூடுதலாக்குகிறது.

ஆம், சுமார் பத்து ஆண்டு காலத்தில் புஜாரா -ரஹானே ஆகிய இரண்டு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் இல்லாமல் முதன்முறையாக களமிறங்குகிறது இந்தியா. இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் பேட்டர்களின் பங்கு அளப்பரியது. அணியின் நம்பிக்கை பாத்திரமாக அவர்கள் என்றைக்கும் விளங்கி இருக்கிறார்கள். அதனால் தான் தொடர் சொதப்பல்களை தாண்டி புஜாரா மற்றும் ரஹானேவிற்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் இந்திய அணியில் முதல் முறையாக இடம் பெற்றபோது அணியின் மிடில் ஆர்டர் பேட்டர்கள்- ராகுல் டிராவிட் மற்றும் லக்ஷ்மன். அவர்களின் ஓய்விற்கு பிறகு இந்த புதிய இளைஞர்களின் எழுச்சியை அப்படியே வாரி அணைத்துக்கொண்டது இந்திய அணி.

Shubman Gill
Shubman Gill

தற்போது இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் ரஹானே, புஜாரா இருவரும் தேர்வு செய்யப்படவில்லை. இந்தியாவின் எதிர்கால அணியைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்ட இந்திய வாரியத்தின் இந்த முடிவு தெளிவாக புலப்படுகிறது. சரி, இந்த இருவரின் வெளியை நிரப்பப்போகும் வீரர்கள் யார். இலங்கைத் தொடரில் மிடில் ஆர்டர் பேட்டர்களுக்கான பட்டியலில் இருப்பவர்கள் ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், ப்ரியங்க் பஞ்சல் மற்றும் கே.எஸ்.பரத்.

மயங்க் அகர்வாலின் சமீபத்திய ஃபர்மார்மன்ஸ் ரோஹித் உடனான ஓப்பனிங் ஸ்லாட்டிற்கு அவரின் இடத்தை மேலும் பலப்படுத்தியுள்ளது. இதனால் ஓப்பனிங்கில் ஆடி வந்த கில் மூன்றாவது இடத்தில் இறக்கிவிடப்படலாம். மிடில் ஆர்டரில் இறங்குவது ஒன்றும் கில்லுக்கு புதியதல்ல. இந்தியா-A அணிக்காக மிடில் ஆர்டர் பேட்டராக சிறந்த ரெக்கார்டுகளை வைத்துள்ளார் அவர். மேலும் நியூ-பாலை கில் எதிர்கொள்ளும் விதமும் அவருக்கான இடத்தை மேலும் பலப்படுத்துகிறது.

Hanuma Vihari
Hanuma Vihari

மூன்றாவது இடத்திற்கு போட்டியிடும் மற்றொரு வீரர் ஹனுமா விஹாரி. அணியின் காம்பினேஷன் காரணமாக பல வாய்ப்புகளை தவறவிட்டிருந்த விஹாரிக்கு இத்தொடர் ஒரு மிக சிறந்த வாய்ப்பு. மூன்றாவது பொஷிஷனில் புஜாரா விட்டுச்சென்ற இடத்தை நிரப்புவதற்கு விஹார் ஒரு சிறந்த மாற்று வீரர். 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட முதல் தர ரன்கள், 55.9 சராசரி என உள்ளூர் ஆட்டங்களில் மிக சிறந்த ரெக்கார்ட்டுகளை வைத்திருக்கிறார் விஹாரி. புஜாரா போன்ற தடுப்பட்டதை முதன்மையாக கொண்டு ஆடும் இவரும் ( 42.66 ஸ்ட்ரைக் ரேட் ) மூன்றாவது இடத்திற்கு சிறந்த ஆப்ஷன்.

சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தன் முதல் ரெட்-பால் போட்டியை ஆடி இருந்தாலும் அதில் ஷ்ரேயாஸ் விளையாடிருந்த விதமே அவரின் திறனுக்கான சாட்சி. முதல் இன்னிங்ஸில் சதம், இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் என மிடில் ஆர்டருக்கான சீட்டில் அப்போதே துண்டு விரித்திருந்த அவர் ரஹானே ஆடும் ஐந்தாவது பொசிஷனுக்கு சிறந்த சாய்ஸ்.

Shreyas Iyer
Shreyas Iyer

மிடில் ஆர்டருக்கான ரேஸில் இப்போதைக்கு இந்த மூவரே முன்னிலையில் இருக்கிறார்கள். மேலும் கில்லை பேக்-அப் ஒப்பனரான இந்திய அணி கருதினால் மூன்றாவது இடத்தில் விஹாரியும் விராட் கோலிக்கு அடுத்ததாக ஷ்ரேயஸும் இறக்கப்படலாம். ஒருவேளை மூவருமே இடம்பெற்றால் பன்டின் பொசிஷன் , பந்துவீச்சாளர்களின் காம்பினேஷன், கே.எல்.ராகுலின் வருகை இவை என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது என்பதெல்லாம் கேப்டன் ரோஹித் கையிலேயே உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.