Published:Updated:

ஐபிஎல் நடந்திருந்தால்... ஆரஞ்ச் கேப் யாருக்கு? ஆர்.சி.பி நிலை என்ன? #Poll

IPL
IPL

பர்ப்பிள் கேப்பை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக சன்ரைசர்ஸ், சூப்பர் கிங்ஸ் வசம்தான் சுற்றிக்கொண்டிருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளில் ஒருமுறை கிங்ஸ் லெவன் பக்கம் சென்றிருக்கிறது. மற்றபடி தென்னகத்தில்தான் வலம் வந்துகொண்டிருக்கிறது அந்தத் தொப்பி.

இந்நேரம் தோனி, கோலி, ரோஹித் என்று இந்தியாவே அதிர்ந்துகொண்டிருக்கும். சமூக வலைதளங்கள் ரத்தக் களறியாகியிருக்கும். ஆனால், இப்போது எதுவுமே இல்லை. சரி, இந்தப் பிரச்னை எதுவும் ஏற்படாமல் இருந்திருந்தால், ஐபிஎல் வழக்கம்போல் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? உங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள். #VikatanPOll

மார்ச் இறுதியில் தொடங்குவதாய் இருந்த ஐபிஎல், இந்நேரம் பாதிக் கிணறைத் தாண்டியிருக்கும். சிக்ஸர் மழை பொழிந்திருக்கும். சூப்பர் கிங்ஸ் வழக்கம்போல் கடைசி ஓவர் வரை போட்டிகளை எடுத்துச்சென்றிருக்கும். மும்பை தொடக்கத்தில் தோல்விகளைச் சந்தித்து, இந்நேரம் தொடர் வெற்றிகளைத் தொடங்கியிருக்கும். நைட்ரைடர்ஸ் ரஸலையும், ராஜஸ்தான் பட்லரையும் நம்பி காலத்தை உருட்டிக்கொண்டிருக்கும். சன்ரைசர்ஸ், கேப்பிட்டல்ஸ் அணிகள் வெற்றியையும் தோல்வியையும் மாற்றி மாற்றி ருசித்துக்கொண்டிருக்கும். ஆர்.சி.பி… எங்கிருப்பார்கள் என்று அவர்களுக்கே தெரியாதே!

ஆரம்பத்தில் பல வீரர்கள் ஆரஞ்ச் கேப்புக்கு போட்டியிட்டாலும் இறுதிக்கட்டங்களில் ஓரிரு வீரர்கள் மட்டும்தான் டாப் இடத்துக்கு மல்லுக்கட்டுவார்கள். அதிலும், கடந்த சில சீசன்களாக ஏதோ ஒரு வீரர் ஒட்டுமொத்தமாக எல்லோரையும் ஓவர்டேக் செய்துவிடுகிறார். வார்னர், வில்லியம்சன், கோலி என கடந்த இரண்டு மூன்று சீசன்களாக அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. இந்த முறை எந்த வீரர் ஆரஞ்ச் கேப்பை நெருங்கியிருப்பார்? கடந்த சில ஆண்டுகளின் செயல்பாடுகளை வைத்து ஒரு 5 வீரர்களை மட்டும் இங்கே நாமினேட் செய்கிறோம். அதில் உங்கள் சாய்ஸ் யார்?

பர்ப்பிள் கேப்பைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக சன்ரைசர்ஸ், சூப்பர் கிங்ஸ் வசம்தான் சுற்றிக்கொண்டிருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளில் ஒருமுறை கிங்ஸ் லெவன் பக்கம் சென்றிருக்கிறது. மற்றபடி தென்னகத்தில்தான் வலம் வந்துகொண்டிருக்கிறது அந்தத் தொப்பி. கடந்த ஆண்டு தாஹிர் வென்றிருந்தாலும், சாவ்லாவின் வருகை இந்த முறை அவருக்கான வாய்ப்பைக் குறைத்திருக்கும். சரி, இந்த 5 பேரில் யார் லீடிங் விக்கெட் டேக்கராக இருந்திருப்பார்?

சிக்ஸர்களைப் பொறுத்தவரை வழக்கம்போல் இந்த ஆண்டும் எந்தப் பஞ்சமும் இல்லாமல் வானவேடிக்கைகள் நிகழ்ந்திருக்கும். ரஸல், ஹர்திக், ராகுல், கெய்ல் போன்ற வெறித்தன ஹிட்டர்களோடு மேக்ஸ்வெல், மோர்கன், ஃபின்ச் போன்றவர்களும் இந்த ஆண்டு இணைந்திருக்கிறார்கள். எப்படியும் களைகட்டியிருக்கும். அத்தனை பேர் இருந்தாலும், ஐந்து பேரை மட்டும் நாமினேட் செய்வோம் என்பதால், பலகட்டப் பரிசீலனைக்குப் பிறகு இவர்கள் பெயரை முன்மொழிகிறோம்.

ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய ஸ்பெஷாலிட்டி மிரட்டல் கேட்ச்சுகள்தான். யாரும் எதிர்பாராத வகையில் சர்க்கஸ் வித்தைகளெல்லாம் செய்து கேட்ச் செய்யும் வீரர்கள் இங்கு நிறைந்திருக்கிறார்கள். கிறிஸ் லின், பொல்லார்ட், போல்ட் ஆகியோர் பிடித்த அசத்தல் கேட்ச்கள் இன்றுவரை பேசப்பட்டுவருகின்றன. அப்படி இந்த ஆண்டு மிரட்டல் கேட்சை யார் பிடித்திருப்பார்? தொடர்ந்து அட்டகாசமான கேட்ச்சுகள் பிடித்துவரும் ஐந்து பேரை இங்கு நாமினேட் செய்கிறோம்.

சீனியர் சிட்டிசன்களின் அணி என்று கலாய்க்கப்பட்டாலும், இரண்டு சீசன்களில் ஒரு சாம்பியன் பட்டம், ஒரு ஃபைனல் என்று வழக்கம்போல் அசத்திக்கொண்டிருக்கிறது சூப்பர் சிங்ஸ். எப்படியும் யாராவது ஒருவர் மிரட்டலாக ஆடி ரன் குவித்துவிடுவார்கள்.

இந்த சீசன், யாரும் எதிர்பாராத வகையில் ஒருசில வீரர்களுக்கு கோடிகளைக் கொட்டித் தள்ளிய ஐபிஎல் அணிகள். இது ஒவ்வொரு சீசனிலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், எல்லா வீரர்களும் தங்களின் தொகையை நியாயப்படுத்தியதில்லை. யுவ்ராஜ் சிங், தைமல் மில்ஸ் என கோடிகள் கொட்டி எடுக்கப்பட்டவர்கள் காலை வாரித்தான் விட்டிருக்கிறார்கள். சரி, இந்த ஆண்டு கோடீஸ்வரர் ஆனவர்கள் நிலை என்னவாகும்?

அடுத்த கட்டுரைக்கு