Published:Updated:

WI v IND: டி20யிலும் இந்தியா ஆதிக்கம்; ஸ்பின்னர்களிடம் தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ் செய்யவேண்டியது என்ன?

WI v IND ( Ricardo Mazalan )

டி20ஐ போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் யார் என்பது மூன்று பேட்ஸ்மேன்களிடம் மாறிமாறி `Musical chair' போல்தான் இருந்து வருகிறது. சென்ற வாரம் மார்ட்டின் கப்தில் இருந்த முதலிடத்திற்கு நேற்று ரோஹித் சர்மா வந்து சேர்ந்தார்.

WI v IND: டி20யிலும் இந்தியா ஆதிக்கம்; ஸ்பின்னர்களிடம் தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ் செய்யவேண்டியது என்ன?

டி20ஐ போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் யார் என்பது மூன்று பேட்ஸ்மேன்களிடம் மாறிமாறி `Musical chair' போல்தான் இருந்து வருகிறது. சென்ற வாரம் மார்ட்டின் கப்தில் இருந்த முதலிடத்திற்கு நேற்று ரோஹித் சர்மா வந்து சேர்ந்தார்.

Published:Updated:
WI v IND ( Ricardo Mazalan )
ஒருநாள் தொடரை இழந்த நிலையில் தனக்கு ஏற்ற டி20 பார்மேட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி கட்டாயம் சண்டை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஹெட்மயர் அணிக்குத் திரும்பியதால் அந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகமிருந்தது. அல்சாரி ஜோசப் தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானதும் நேற்றைய போட்டியின் ஹைலைட்ஸில் ஒன்று.

இதுவரை சர்வதேச டி20 போட்டிகள் எதுவும் நடந்திடாத பிரையன் லாரா மைதானத்தில் போட்டித் தொடங்கியது. இதற்கு முன்னர் இங்கே CPL தொடரில் சில போட்டிகள் நடந்திருந்தன. அதில் சராசரியாக 141 ரன்கள் அடிக்கப்பட்டன. இதனால் இந்தப் போட்டியும் அவ்வாறே குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

WI v IND
WI v IND
Ricardo Mazalan

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி இந்திய அணி பேட் செய்ய வந்தது. அணியில் இஷான் கிஷன் மற்றும் சாம்சன் இடம் பெறாததால் ரோஹித் உடன் பண்ட்தான் ஓப்பனிங் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வித்தியாசமாக சூர்யகுமார் களமிறங்கினார். 4 ஓவர்களில் 40 ரன்களைக் கடந்தது இந்திய அணி. பவர்பிளேயில் 70 ரன்களைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5வது மற்றும் 6வது ஓவர்களில் முறையே சூர்யகுமார் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தனர். அக்கீல் ஹோசைன் மற்றும் ஓபெட் மெக்கே சிறப்பாக பந்து வீசினர்.

அடுத்து வந்த பண்ட் கீமோ பால் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்த நிலையில் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். ஹர்திக், ஜடேஜா இருவரையும் ஜோசப் வீழ்த்தினார். ரோஹித் சர்மா 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 16 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்த இந்திய அணி 170 ரன்கள் மட்டுமே எடுக்கும் என நினைத்திருந்த நிலையில் தினேஷ் கார்த்திக் அதிரடியால் 190 ரன்களை எடுத்தது. அக்கீல் ஹோசைன் அபாரமாகப் பந்து வீசினார். ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அவரது பந்துவீச்சில் அடிக்கப்பட்டது. வெறும் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் இந்திய அணியின் அனுபவ ஸ்பின்னர்கள் எப்படிப் பந்து வீசுவார்கள் என்ற ஆர்வம் இருந்தது.

WI v IND
WI v IND
Ricardo Mazalan
டி20ஐ போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் யார் என்பது மூன்று பேட்ஸ்மேன்களிடம் மாறிமாறி `Musical chair' போல்தான் இருந்து வருகிறது. சென்ற வாரம் மார்ட்டின் கப்தில் இருந்த முதலிடத்திற்கு நேற்று அனுபவம் வாய்ந்த ஆட்டத்தை ஆடிய ரோஹித் சர்மா வந்து சேர்ந்தார். ஃபார்ம் அவுட்டில் இருக்கும் விராட் கோலி மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

அடுத்துக் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் மேயர்ஸ் பவுண்டரியுடன் ரன் கணக்கைத் தொடங்கி வைத்தார். அடுத்த ஓவரில் முதலிரண்டு பந்துகளில் பவுண்டரிகள் அடித்த பின் அர்ஷ்தீப் சிங்கின் ஷார்ட் பிட்ச் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய ஹோல்டர் டக் அவுட் ஆனார். புவனேஷ்வர் குமார் 6வது ஓவரை மெய்டனாக வீசினார். அதன்பின் இந்திய ஸ்பின்னர்களிடம் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒருவர் கூட 30 ரன்களைத் தாண்டவில்லை. அதிகபட்சமாக புரூக்ஸ் 20 ரன்களை எடுத்தார். இந்திய அணி தரப்பில் அஷ்வின், அர்ஷ்தீப் சிங், பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து ஸ்பின்னர்களிடம் தடுமாறி வருகிறது. இடக்கை பேட்ஸ்மேன்கள் அதிகமிருக்கும் டாப் ஆர்டரில் அஷ்வினின் பங்கு முக்கியமானது என்பது ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே தெரிந்தது. அவரும் பூரன் மற்றும் ஹெட்மயர் இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். பாவெல் சஹாலிடம் ஒருநாள் போட்டிகளில் தடுமாறியது போல் நேற்று கூக்ளி அதிகம் வீசும் பிஷ்னோயிடம் போல்டானார். ஓடிஐ போட்டிகளில் கொடுத்த போட்டியைக் கூட அவர் நேற்று காட்டவில்லை.

WI v IND
WI v IND
Ricardo Mazalan

வெஸ்ட் இண்டீஸ் அணியின் டி20 டிரேட்மார்க் என்பது 'அட்டாக்கிங்'தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அனைத்து போட்டிகளிலும் அது கைகூட மார்லன் சாமுவேல்ஸ் போல் இருவகையான ஆட்டமும் ஆடக் கூடிய வீரர்கள் இருவராவது இருக்க வேண்டும். லீவிஸ், காட்ரெல், ஃபேபியன் ஆலன் போன்ற வீரர்கள் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அணியில் இல்லாததும் அவர்களுக்குப் பெரிய பிரச்னையாக உள்ளது.

இந்தச் சவால்களை எல்லாம் சமாளித்து அடுத்த போட்டியில் வெஸ்ட் இன்டீஸ் உத்வேகத்துடன் போராடுமா?