Published:Updated:

6ixty: மேற்கிந்தியத் தீவுகளில் புதிதாகத் தொடங்கும் 10 ஓவர் கிரிக்கெட் - இப்படியெல்லாம் விதிமுறைகளா?

6ixty

இத்தொடரில் வெற்றி பெறும் அணிக்கு ‘UNIVERSE BOSS TROPHY’ என்று கிறிஸ் கெயில் பெயரிலான கோப்பை வழங்கப்படவுள்ளது.

6ixty: மேற்கிந்தியத் தீவுகளில் புதிதாகத் தொடங்கும் 10 ஓவர் கிரிக்கெட் - இப்படியெல்லாம் விதிமுறைகளா?

இத்தொடரில் வெற்றி பெறும் அணிக்கு ‘UNIVERSE BOSS TROPHY’ என்று கிறிஸ் கெயில் பெயரிலான கோப்பை வழங்கப்படவுள்ளது.

Published:Updated:
6ixty

உலக கிரிக்கெட் அரங்கில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஒன்று டி20 போட்டிகளின் வரவு. அதைத் தொடர்ந்து T-10, THE HUNDRED போன்ற புதிய வடிவங்களை பல்வேறு கிரிக்கெட் சங்கங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு அறிமுகப்படுத்தி வருகின்றன. டி20 ஃபார்மேட்டின் வெற்றிக்கான முக்கிய காரணமாக மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் நிச்சயமாகக் கைகாட்டலாம். முதல் இரண்டு ஒருநாள் உலகக்கோப்பைகளை வென்ற காலத்தில் தொடங்கி தற்போது இரண்டு டி20 உலகக்கோப்பை வென்ற அணி வரை அதிரடி ஆட்டக்காரர்கள் நிரம்பி வழியும் அணி அது. சர் விவியன் ரிச்சர்ட்ஸ், கிறிஸ் கெயில், கைரன் பொல்லார்டு, ரஸல், நிக்கோலஸ் பூரண் என அதிரடிக்குப் பெயர் பெற்ற எண்ணற்ற வீரர்களைக் கொண்டுள்ளது.

6ixty
6ixty

அப்படிப்பட்ட வீரர்கள் தொடர்ந்து அணிக்குள் வரவும் உள்ளூர் வீரர்கள் தொடர்ந்து தங்கள் திறமையை வெளிக்காட்டவும் கடந்த 2013-ம் ஆண்டு முதல் CPL என்ற டி20 தொடரை மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் (WICB) நடத்தி வருகிறது. இப்போது CPL மற்றும் WICB நிர்வாகம் இணைந்து 6IXTY என்ற புதிய T-10 கிரிக்கெட் தொடரை அறிமுகம் செய்துள்ளனர். அதில் பல புதிய விதிமுறைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்தொடர் ஆகஸ்ட் 24 முதல் 28 வரை நடைபெறவுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விதிமுறைகள்:

1. ஒரு அணிக்கு 6 விக்கெட்டுகளுக்கு மட்டுமே அனுமதி.

2. ஒரு அணி 60 பந்துகள் என பத்து ஓவர்கள் ஆட வேண்டும்.

3. முதல் 2 ஓவர்கள் பவர்பிளே.

4. அந்த 12 பந்துகளில் 2 சிக்ஸர் அடிக்கப்பட்டால் மூன்றாவது பவர்பிளே 3-9 ஓவர்களில் எப்போது வேண்டுமானாலும் அதைப் பயன்படுத்தலாம்.

5. குறிப்பிட்ட நேரத்திற்குள் 54 பந்துகளை, அதாவது 9 ஓவர்களை வீசியிருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு வீரர் பௌலிங் செய்யும் அணியிலிருந்து வெளியேற்றப்படுவார்.

6. ஒரே இன்னிங்ஸில் 5 ஓவர்கள் ஒருமுனையிலும், அடுத்த 5 ஓவர்கள் இன்னொரு முனையிலும் இருந்து வீச வேண்டும்.

7. ரசிகர்கள் ஆட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 'Mystery free hit' என்னும் பந்தினை வாக்களித்துத் தேர்ந்தெடுப்பர்.

Chris Gayle
Chris Gayle

இந்தத் தொடரில் ஆண்கள், பெண்கள் என இரு பாலினத்தவரும் பங்கேற்கின்றனர். ஆண்கள் தரப்பில் டிரினிடாட், பார்படாஸ், கயானா, செயின்ட் கிட்ஸ் & நெவிஸ், செயின்ட் லூசியா, ஜமைக்கா என 6 அணிகள் கலந்து கொள்கின்றன. பெண்கள் தரப்பில் டிரினிடாட், பார்படோஸ், கயானா என மூன்று அணிகள் கலந்து கொல்கின்றன. இதைத் தொடர்ந்து CPL தொடரும் தொடங்கவுள்ளது.

6IXTY தொடரின் அனைத்து போட்டிகளும் வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடரில் வெற்றி பெறும் அணிக்கு ‘UNIVERSE BOSS TROPHY’ என்று கிறிஸ் கெயில் பெயரிலான கோப்பை வழங்கப்படவுள்ளது. இத்தொடரின் தூதராக கிறிஸ் கெயில் நியமிக்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் என்று சொன்னவுடன் பெரும்பாலானவர்களுக்கு கெயிலின் அதிரடி ஆட்டம்தான் நினைவிற்கு வரும். அவரை பெருமைப்படுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.