Published:Updated:

Ind vs Pak : “இந்த முறையும் உங்களைத் தோற்கடிப்போம்” இந்தியாவுக்கு சவால்விடும் ஷோயப் அக்தர்.

Ind vs Pak

இந்திய அணியின் ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட முறையில் மேட்ச் வின்னர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒட்டுமொத்த அணியாக ஒன்றிணைந்து நிற்பதில்தான் வைட் பால் ஃபார்மர்ட்களில் இந்திய அணி ரொம்பவும் சொதப்பி வருகிறது.

Ind vs Pak : “இந்த முறையும் உங்களைத் தோற்கடிப்போம்” இந்தியாவுக்கு சவால்விடும் ஷோயப் அக்தர்.

இந்திய அணியின் ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட முறையில் மேட்ச் வின்னர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒட்டுமொத்த அணியாக ஒன்றிணைந்து நிற்பதில்தான் வைட் பால் ஃபார்மர்ட்களில் இந்திய அணி ரொம்பவும் சொதப்பி வருகிறது.

Published:Updated:
Ind vs Pak

2022-ம் ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இத்தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டது சர்வதேச கிரிக்கெட் வாரியம் அக்டோபர் 16-ம் தேதி தொடங்கி நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பர்ன், அடிலெய்ட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் நடைபெற உள்ளது.

Ind vs Pak
Ind vs Pak

விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதையடுத்து இந்த முறை ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்க உள்ளது இந்திய அணி. இந்தியா இடம்பெற்றுள்ள குரூப் பி பிரிவில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய அணிகள் உள்ளன. இந்த முறையும் பாகிஸ்தான் அணிக்கு எதிராகத்தான் முதல் ஆட்டத்தை விளையாடவுள்ளது இந்தியா. இப்போட்டி அக்டோபர் 26-ம் தேதி மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என்ற சாதனையை இத்தனை வருடங்கள் வைத்திருந்தது. ஆனால் துபாயில் சென்ற ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்தியாவை முதல்முறையாக வீழ்த்தியது பாகிஸ்தான். அதுவும் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிற்கு மறக்கவேமுடியாத தோல்வியைப் பரிசாக அளித்து வரலாற்றை மாற்றியமைத்தது. அதனால் வரவிற்கும் அடுத்த உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான எதிர்பார்ப்பு முன்பைவிட பன்மடங்கு அதிகரித்துள்ளது.

Shoaib Akhtar
Shoaib Akhtar

“இந்தியாவை மீண்டுமொரு முறை வீழ்த்துவோம்” என்று சவால்விட்டிருக்கிறார். பாகிஸ்தான் அணியின் முன்னால் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் " டி20 பார்மெர்ட்டை பொறுத்தவரையில் இந்தியாவைவிட பாகிஸ்தானே சிறந்த அணி. இந்த இரண்டு அணிகளும் ஒவ்வொருமுறை சந்திக்கும் போதும் இந்தியாவை சேர்ந்த ஊடகங்கள் தான் இப்போட்டி குறித்து தேவையில்லாத எதிர்பார்ப்புகளை கிளப்புகின்றன. ஆனால் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்பது என்பது சாதாரண ஒன்றுதான்" எனக் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அக்தர் கூறியதுபோல 2021-ம் ஆண்டு டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல் அரையிறுதிக்கு சுற்றுக்கும் முன்னேறாமல் வெளியேறியது இந்தியா. என்னதான் ஐ.பி.எல் தொடரில் திறமையான வீரர்கள் பலரையும் ஆண்டுதோறும் கண்டெடுத்து வந்தாலும் டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானைவிட சற்று பலவீனமாகத்தான் காட்சியளிக்கிறது இந்தியா. இந்திய அணியின் ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட முறையில் மேட்ச் வின்னர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒட்டுமொத்த அணியாக ஒன்றிணைந்து நிற்பதில் தான் வைட் பால் ஃபார்மர்ட்களில் இந்திய அணி ரொம்பவும் சொதப்பி வருகிறது.

Babar Azam
Babar Azam

பாகிஸ்தானுடனான தோல்விக்கு ஐ.பி.எல் தான் காரணம் எனக்கூறி அத்தொடரை தடை செய்யவேண்டும் என ஒரு தரப்பினர் குரல் கொடுத்ததும் நடந்தேறியது. அதேபோல 2021-ம் ஆண்டிற்கான டி20 ஐசிசி அணியிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிற்கு இடம் இல்லை. அதே சமயம் அந்த அணியின் கேப்டனாக பாகிஸ்தானின் பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism