Published:Updated:

``ரோஹித்தை கேப்டனாக்கியதன் காரணம் இதுதான்" - மனம் திறந்த பிசிசிஐ தலைவர் கங்குலி

கங்குலி

ஆனால் டி20 மற்றும் ஒருநாள் ஃபார்மர்ட்டுகளுக்கு இருவேறு கேப்டன்களை வைத்திருப்பது தேர்வாளர்களுக்கு சரியான முடிவாகத் தெரியவில்லை.

``ரோஹித்தை கேப்டனாக்கியதன் காரணம் இதுதான்" - மனம் திறந்த பிசிசிஐ தலைவர் கங்குலி

ஆனால் டி20 மற்றும் ஒருநாள் ஃபார்மர்ட்டுகளுக்கு இருவேறு கேப்டன்களை வைத்திருப்பது தேர்வாளர்களுக்கு சரியான முடிவாகத் தெரியவில்லை.

Published:Updated:
கங்குலி

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியை நேற்று முன்தினம் தேர்வு குழு அறிவித்தது. இதில் இந்திய அணியின் லிமிட்டெட் ஓவர் பார்மர்டின் புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மாவும் துணை கேப்டனாக கே.எல்.ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இனிவரும் காலங்களில் இந்திய டெஸ்ட் அணியை மட்டும் விராட் கோலி வழிநடத்துவார் எனத் தெரிகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேப்டன் பதவியில் விராட் கோலி நீக்கப்பட்டதையடுத்து அதுகுறித்து பல்வேறு சர்ச்சைகளும் விவாதங்களும் எழுந்தன. இந்த நிலையில் இதுகுறித்து முதல் முறையாக விளக்கமளித்துள்ளார் பிசிசிஐ-யின் தலைவர் சவுரவ் கங்குலி. அவர் அளித்த பேட்டியில் "பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு இணைந்து எடுத்த முடிவு இது. உண்மையைக் கூறவேண்டும் என்றால் டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் விலக முடிவு செய்தபோதே அவரை தடுத்தி நிறுத்தி கேப்டன்சியில் தொடர வைக்க முயற்சி செய்தோம். ஆனால் அவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் டி20 மற்றும் ஒருநாள் பார்மர்ட்டுகளுக்கு இருவேறு கேப்டன்களை வைத்திருப்பது தேர்வாளர்களுக்கு சரியான முடிவாகத் தெரியவில்லை. எனவே ரோஹித்தை ஒருநாள் அணிக்கும் கேப்டனாக முடிவு செய்தோம். பிசிசிஐ தலைவர் என்ற முறையில் விராட் கோலியிடம் இம்முடிவு நான் தனிப்பட்ட முறையில் பேசினேன். அவரும் தேர்வுக்குழு தலைவருடன் பேசினார்.

ரோஹித் ஷர்மாவின் தலைமை பண்பின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்திய கிரிக்கெட் நல்ல கைகளில் பாதுகாப்பாக உள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இத்தனை காலம் கேப்டனாக அணியை வழிநடத்திய விராட் கோலியின் பங்களிப்புக்கு நன்றிகள் ," என்றும் கூறினார் கங்குலி.