Published:Updated:

`பந்தை எப்படி சைனிங் செய்வது; எவ்வாறு வெற்றிபெறுவது?’ - யோசிக்கும் புவனேஷ்வர் குமார்

 புவனேஷ்வர் குமார்
புவனேஷ்வர் குமார்

இந்திய பந்துவீச்சாளர்கள் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுவதாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் நாளை தொடங்குகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக வீரர்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கின்றனர். மருத்துவர்களின் அறிவுரையின்படி வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் போட்டி தொடங்குவதற்கு முன்பு வீரர்கள் கைகுலுக்கிக் கொள்ள மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியின்போது பந்தை பளபளப்பாக உமிழ்நீரை பயன்படுத்துவார்கள். இப்படிச் செய்வது சுகாதாரமானதல்ல என டாக்டர் அறிவுறுத்துகிறார். இப்படிச் செய்யவில்லை என்றால் நாங்கள் பந்துவீசும்போது பேட்ஸ்மேன்கள் பந்தை வெளுத்துவிடுவார்கள். பிறகு, இவர்கள் எல்லாம் என்ன பௌலிங் போடுகிறார்கள் எனக் கேள்வியெழுப்புவீர்கள் என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

தர்மசாலா
தர்மசாலா
BCCI

போட்டி தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய புவி, ``காயத்தில் இருந்து மீண்டு களத்துக்குத் திரும்புவது மிகவும் சவாலானதாக இருந்தது. இந்திய அணியைத் தேர்வு செய்வதில் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர்களுக்குக் கடும் சவால் இருக்கிறது. ஏனெனில், திறமையான நிறைய இளம்வீரர்கள் இங்கு குவிந்துள்ளனர். அணிக்கு சரியான கலவையைத் தேர்வு செய்வதில் சிக்கல் இருக்கிறது. பந்துவீச்சாளர்கள் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது" என்றார்.

``இந்திய அணியின் மருத்துவர்களின் அறிவுரைகளின்படி நாங்கள் செயல்பட்டு வருகிறோம். வீரர்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பதை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்தியா இருக்கும் இந்தச் சூழலில் எது சரி, தவறு எனக் கூறமுடியாது. நாங்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கிறோம்.

இந்திய வீரர்கள்
இந்திய வீரர்கள்
BCCI

தனி சுகாதாரம் மிகவும் அவசியமானது என வலியுறுத்தியுள்ளனர். கைகளை அடிக்கடி கழுவும்படி அறிவுறுத்தியுள்ளனர். போட்டியின்போது ரசிகர்களிடமிருந்து கொஞ்சம் விலகியிருக்கும்படி கூறியுள்ளனர். ஆனால், எங்களால் ரசிகர்களிடமிருந்து விலகியிருக்க முடியாது. அவர்கள் எங்களை நேசிக்கிறார்கள், உறுதுணையாக இருக்கிறார்கள். பந்துகளின் மீது உமிழ்நீரைப் பயன்படுத்துவது குறித்து யோசித்து வருகிறோம்.

நாங்கள் பயன்படுத்த மாட்டோம் என இப்போது கூற முடியாது. உமிழ்நீரைப் பயன்படுத்தாமல் பந்தை எப்படிப் பளபளப்பாக்குவது. பின்னர், எப்படி வெற்றி பெறுவது. இப்படிச் செய்யவில்லை என்றால் நாங்கள் பந்துவீசும்போது பேட்ஸ்மேன்கள் பந்தை வெளுத்துவிடுவார்கள். பிறகு, இவர்கள் எல்லாம் என்ன பௌலிங் போடுகிறார்கள் எனக் கூறுவீர்கள். மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு, இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு