Published:Updated:

``தோனிக்குத் தெரியும்... நாங்கள் அவரை நம்புகிறோம்!'' - விராட் கோலி நச் பதில்

கோலி ( twitter - bcci )

தோனியின் ஸ்லோ இன்னிங்ஸ் பற்றியும் ஷமியின் கம்பேக் என நிறைய விஷயங்களை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார்.

Published:Updated:

``தோனிக்குத் தெரியும்... நாங்கள் அவரை நம்புகிறோம்!'' - விராட் கோலி நச் பதில்

தோனியின் ஸ்லோ இன்னிங்ஸ் பற்றியும் ஷமியின் கம்பேக் என நிறைய விஷயங்களை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார்.

கோலி ( twitter - bcci )

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் பேட்டிங் குறித்து கடந்த சில நாள்களாக சர்ச்சை எழுந்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது தோனி ஸ்லோ இன்னிங்ஸ் குறித்து டெண்டுல்கர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஆடிய விதம் தனக்கு திருப்திகரமானதாக இல்லை என அவர் கூறினார். ஒரு அனுபவ வீரராக தோனியின் செயல்பாடுகள் பேட்டிங்கில் சிறப்பாக இல்லை எனப் பேசினார். இதனையடுத்துதான் இந்த விவாகாரம் சூடுபிடித்தது.

தோனி
தோனி
twitter - bcci

இதற்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது நிதானமாக விளையாடிய தோனி கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என அதிரடிகாட்டினார். இந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றியைக் குவித்தது. இருப்பினும் தோனி பேட்டிங் குறித்து வெளியில் இருந்து விமர்சனங்கள் எழுந்தது. அணி தோனிக்கு தான் ஆதரவு. களத்தில் என்ன செய்ய வேண்டும் என தோனிக்குத் தெரியும் என சக வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் கோலி, “இந்திய அணிக்கு என்ன செய்ய வேண்டும் என தோனிக்குத் தெரியும். நாங்கள் தோனியை நம்புகிறோம். புவனேஷ்வர் குமார் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். ஷமியும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். உலகக் கோப்பை தொடரில் ஷமி விளையாடிய போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். புவனேஷ்வர் குமார் காயத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு யாரை தேர்வு செய்வது என்பதில் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும். இதுகுறித்து நிதானமாகத்தான் யோசிக்க வேண்டும். புதிய ஜெர்ஸி பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. இதனை நிரந்தரமாக பயன்படுத்துவோமா என்பது தெரியாது. நீலம்தான் எங்களுடைய வண்ணம்.

ஷமி
ஷமி
twitter - bcci

நாளைய போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். அவர்களுடைய ஆட்டத்தைக் காண ஆவலோடு இருக்கிறோம். இங்கிலாந்து சொந்த மண் என்பதால் அவர்களது தாக்கம் அதிகம் இருக்கும் என நினைத்தோம். ஆனால் அவர்களுக்கு அழுத்தம் அதிகமாக உள்ளது. நான் இரண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடியுள்ளேன். யார் வேண்டுமானாலும் யாரையும் தோற்கடிக்கலாம். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்தது. விஜய் சங்கர் பாகிஸ்தான் எதிராக நன்றாகத்தான் விளையாடினார். அவர் ஒரு நல்ல பந்துவீச்சாளர். அவரை கை காட்டி சில விஷயங்கள் பேசுவது தேவையில்லாதது'' என்று கூறியுள்ளார்.