Published:Updated:

`முன்பே சொன்னேன்; இப்போதும் சொல்கிறேன்!’ - ராகுல், ரோஹித் குறித்து கங்குலி ஓப்பன் டாக்

இதுமாதிரியான புதுசீஸனில் புஜாரா விஷயத்தில் நிச்சயம் ஏமாற்றமடைந்து இருக்க வேண்டும். ஆனால், அதைவிட அதிக அக்கறை கேஎல் ராகுல் விஷயத்தில் வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என மூன்று தொடர்களையும் கைப்பற்றியது. குறிப்பாக, டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றியது. இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்தத் தொடருக்கான முழுமையான 120 புள்ளிகளைப் பெற உதவியாக இருந்தது.

indian team
indian team
AP

இந்த டெஸ்ட் தொடரில், கோலி கேப்டனாக ஜொலிக்க, ஹனும விஹாரி, பும்ரா, ஷமி, ஜடேஜா, இஷாந்த், ரஹானே போன்றவர்கள் பேட்டிங், பௌலிங்கில் தங்கள் பங்களிப்பை கச்சிதமாகச் செய்துமுடிக்க வரலாற்று வெற்றி பதிவுசெய்யப்பட்டது. இந்தத் தொடரில் இந்திய அணிக்குக் கவலை அளிக்கக்கூடிய விஷயமாக இருந்தது என்னவோ ஓப்பனிங்தான். குறிப்பாக அனுபவவீரர் கேஎல் ராகுலின் ஆட்டம்.

இரண்டு போட்டிகளிலும் ஓப்பனிங் வீரராக களம்கண்ட ராகுல் எடுத்தது 13, 6, 44, 38 ரன்கள் மட்டுமே. சரியான வாய்ப்பு கிடைத்தும், ஒரு அரைசதம்கூட அடிக்க முடியாமல் தடுமாறினார் ராகுல். இவரது இந்த மோசமான ஆட்டத்தால் டெஸ்ட் அணிக்கு ரோஹித்தை ஓப்பனிங் வீரராக களமிறக்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன. இந்தநிலையில் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் குறித்து பேசியுள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ``வெஸ்ட் இண்டீஸ் டூரில் இந்திய வீரர்கள் ஆட்டத்தில் நிறைய பாசிட்டிவ் பாயின்டுகள் உள்ளன. அதேநேரத்தில் பேட்டிங்கில் சில கேள்விகளும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

KL Rahul
KL Rahul
AP

இதுமாதிரியான புதுசீஸனில் புஜாரா விஷயத்தில் நிச்சயம் ஏமாற்றமடைந்து இருக்க வேண்டும். ஆனால் அதைவிட அதிக அக்கறை கேஎல் ராகுல் விஷயத்தில் வேண்டும். அவரது திறமை ஒருபோதும் இங்கு கேள்விக்குறியாக இல்லை. அதேநேரம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இனியும் புதுமுகம் எனச் சொல்ல முடியாது. அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்துள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலும் ஏமாற்றமே.

Vikatan

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சுற்றுப்பயணத்தில் இந்திய விளையாட்டைப் பாராட்ட நிறைய விஷயங்கள் உள்ளன. பேட்டிங்கில் ஹனும விஹாரி பௌலிங்கில் பும்ரா ஆகியோர் ஆட்டத்தையே இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். விஹாரியின் கேரியரை நெருக்கமாகப் பின்தொடர்ந்துள்ளேன். இத்தனை ஆண்டு முதல்தர கிரிக்கெட் அனுபவம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ரன்கள் எடுக்கும் மனநிலையையும் மனதையும் கொடுத்துள்ளது என நம்புகிறேன். என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து பேசும்போது, 6 வது இடத்தில் பேட்டிங் செய்வது எளிதான காரியம் அல்ல என்று என்னால் கூற முடியும். ஆனால் அதைக் கச்சிதமாகச் செய்துமுடித்தார் விஹாரி" எனக் கூறியுள்ளார்.

hanuma vihari
hanuma vihari
AP

கே.எல் ராகுலின் சொதப்பலான ஆட்டம் மற்றும் ரோகித் சர்மா தொடர்பாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்குப் பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியும் கிட்டத்தட்ட இதே கருத்தை தெரிவித்துள்ளார். ``உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் அணியில் சில கிரிக்கெட்டர்களின் பங்கு என்ன என்பதை ஆராயவேண்டி இருந்தது.

Vikatan

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களுக்கான இடம் குறித்து இன்னும் ஆராயப்பட வேண்டியுள்ளது. மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடுகிறார். இன்னும் சில வாய்ப்புகள் அவருக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் அவரது பார்ட்னராக களமிறங்கிய கே.எல் ராகுலின் சொதப்பலான ஆட்டம், தொடக்கத்தில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.

ganguly
ganguly
Twitter

டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் ஷர்மாவை தொடக்க வீரராக களமிறக்குவது தொடர்பாக முன்பே சொல்லியிருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன், டெஸ்ட்டிலும் தொடக்க ஆட்டக்காரராக அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம். காரணம் அவர் சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. மிகச் சிறப்பான உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் அவர் டெஸ்டில் தொடக்க இடத்துக்கான வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்வார். ரஹானே மற்றும் விஹாரி சிறப்பாக விளையாடுவதால் நடுவரிசை குறித்து இந்தியா கவலை கொள்ள தேவையில்லை.

``தோனிக்கும் அது நிகழும்; இந்திய கிரிக்கெட் இதை உணர வேண்டும்!” - கங்குலி ஓப்பன் டாக்

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு முன்னேறி, இன்று வந்திருக்கும் இடத்தை நாம் பாராட்டி ஆக வேண்டும். குறிப்பாக பும்ரா. அவர் வேகப்பந்துவீச்சில் இன்னும் சில காலத்துக்கு ஆதிக்கம் செலுத்துவார். அவரது வேகத்துக்காக மட்டும் இதைச் சொல்லவில்லை. வேரியேஷன் மற்றும் கன்ட்ரோலும் சிறப்பாக இருக்கிறது. அனைத்துவகையான கிரிக்கெட்டிலும் அவர் எதிரணிக்கு அச்சுறுத்தலாகவே இருப்பார். அவரை காயத்திலிருந்து தள்ளியே வைக்கும் பொறுப்பு அணி நிர்வாகத்துக்கு இருக்கிறது.

vvs laxman
vvs laxman
Twitter

இஷாந்த், சமி, புவனேஷ்வர் எனப் பலரும் சிறப்பாகச் செயல்படுவதால், சுழற்சி முறையில் வாய்ப்புகள் வழங்கினால் பணிச் சுமையும் குறையும். மேலும் தற்போது இருக்கும் பந்துவீச்சைக் கொண்டு வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான எகிறும் தன்மை கொண்ட ஆடுகளத்திலும் இந்தியாவால் சாதிக்க முடியும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு