Published:Updated:

`தோனி, ஒருபோதும் எங்களிடம் ஆலோசித்ததில்லை!'- 2012 ஃபிளாஷ்பேக் சம்பவம் குறித்து சேவாக்

சேவாக்
சேவாக்

`தோனி ஒருபோதும் எங்களை கலந்தாலோசிக்கவில்லை. ட்ரெஸ்ஸிங் ரூமில் நடைபெறும் அணியின் மீட்டிங்கில்கூட தோனி இதைப் பற்றிப் பேசவில்லை.'

தற்போது இருக்கும் பிசிசிஐ நிர்வாகம்மீது இருக்கும் பெரிய குற்றச்சாட்டு, இந்திய அணியிலிருந்து வீரர்களை நீக்கும்போது அதுகுறித்து அவர்களுக்குச் சரியான தகவல்களைச் சொல்லாமல் இருப்பதுதான். சமீபத்தில் அணியிலிருந்து நீக்கப்பட்ட ரிஷப் பன்ட் விவகாரத்திலும் இந்தச் சர்ச்சை நடந்ததாகக் கூறப்படுகிறது.

இதேபோல், `வீரர்களிடம் ட்ரெஸ்ஸிங் ரூமில் கேப்டன் சரியாகப் பேசுவதில்லை' என்ற குற்றச்சாட்டும் பரவலாகப் பேசப்படுகிறது. தோனியும் சில நேரங்களில் வீரர்களிடம் சரியாகப் பேசியது இல்லை என்ற திடீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக்.

தோனி - சேவாக்
தோனி - சேவாக்

இந்தியா - நியூஸிலாந்து இடையேயான நேற்றைய டி20 குறித்து cricbuzz தளத்தில் பேசும்போது இந்த பிளாஷ்பேக் சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார். 2012 காமென்வெல்த் முத்தரப்பு தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்தத் தொடரின்போது சேவாக், சச்சின், காம்பீர் குறித்து ஒருபோட்டியின் செய்தியாளர் சந்திப்பின்போது , ``டாப் ஆர்டரில் விளையாடும் இந்த மூவரும் ஸ்லோ பீல்டர்கள். அதனால் அடுத்தடுத்த போட்டிகளில் அணியில் டாப் ஆர்டரில் வீரர்கள் சுழற்சி முறையில் இறக்கப்படுவார்கள்" எனக் கூறியிருப்பார் தோனி.

`பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து நின்றவன்!' - குழந்தைகள் தினத்தில் சிறுவன் பாஜியை நினைவுகூர்ந்த சேவாக்

அவரின் இந்தக் கருத்து அப்போது சர்ச்சையாக மாறியது. இந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து, அப்போது என்ன நடந்தது என்பது குறித்து cricbuzz தளத்துக்கு சேவாக் பேசியுள்ளார். ``தோனியும் சில சமயங்களில் ட்ரெஸ்ஸிங் ரூமில் சரியாகப் பேசியதில்லை. அவர் வீரர்களிடம் சரியாக கம்யூனிகேட் பண்ணத் தவறிவிட்டார். 2012 ஆஸ்திரேலிய முத்தரப்பு தொடரின்போது செய்தியாளர்கள் மத்தியில் தோனி, `நாங்கள் மூவரும் ஸ்லோ ஃபீல்டர்கள்' என்று கூறினார். எங்களுக்கு இதுபற்றி எதுவும் தெரியவில்லை. மீடியாவில் செய்திகள் வந்தபின்பே எங்களுக்கு இது தெரியும். அவரிடம் இதுகுறித்து நாங்கள் எதுவும் கேட்கவில்லை. அதேநேரம் தோனி ஒருபோதும் எங்களைக் கலந்தாலோசிக்கவில்லை.

சேவாக்
சேவாக்

ட்ரெஸ்ஸிங் ரூமில் நடைபெறும் அணியின் மீட்டிங்கில்கூட தோனி இதைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் ரோஹித் ஷர்மாவுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் டாப் ஆர்டர் சுழற்சி முறை கொண்டுவரப்பட்டது என்பது பின்னால் தெரிந்தது. எங்கள் காலத்தில், கேப்டன் வீரருடன் சென்று பேசுவார் என்பது கேள்விக்குரியது. விராட் கோலியும் அவ்வாறே செய்கிறாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஏனெனில் நான் தற்போது அணியில் இல்லை.

ஆனால், ஆசியக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தபோது, ​​அவர் அனைத்து வீரர்களிடமும் பேசுவார் என்று கேள்விப்பட்டேன்" என்றவர், ரிஷப் பன்ட்டைத் தொடர்ந்து அணியில் எடுக்காமல் இருப்பது குறித்து வருத்தம் தெரிவித்தார். ``தொடர்ந்து அவரை அணியில் எடுக்காமல் இருந்தால், எப்படி ரன்களை எடுப்பார். நீங்கள் சச்சின் டெண்டுல்கரைகூட அணியில் எடுக்காமல் இருந்தால் அவரால் எப்படி ரன்கள் எடுக்க முடியும்?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பின் செல்ல