நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி, நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி வாகையை சூடியது.

இந்நிலையில் போட்டிக்குப் பிறகு பெங்களூர் அணியின் தோல்வி குறித்து விராட் கோலி கோபமாகப் பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், “உண்மையை சொல்லப்போனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வெற்றியை நாங்களே பரிசாகக் கொடுத்துவிட்டோம். இந்த தோல்விக்கு நாங்கள்தான் காரணம்.
நாங்கள் முழுமையான கிரிக்கெட் வீரர்களாக ஆடவில்லை. நிறைய தவறுகளை செய்துவிட்டோம். வாய்ப்புகளை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. நன்றாக பந்துவீசினோம். ஆனால் ஒழுங்காக ஃபீல்டிங் செய்யவில்லை. பார்ட்னர்ஷிப் எங்களக்கு சரியாக அமைந்திருந்தால் இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம்.

அடுத்தடுத்து இனி வெளியூர் மைதானங்களில் நடைபெறும் போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் தற்போது எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அது எங்களுக்கு கடைசி நேரத்தில் கை கொடுக்கும்” என்று கூறியிருக்கிறார்.