Published:Updated:

Virat Kohli: `நான் வீழ்வேனென்று நினைத்தாயோ...'- தோல்விக்கு முன் நம்பிக்கையுடன் பேசிய விராட் கோலி!

விராட் கோலி

"190 ரன்களை எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் 200- க்கு நெருக்கமாக எடுத்துவிட்டோம். இது நிச்சயமாக சவால் அளிக்கக்கூடிய ஸ்கோர்தான். ஆனால்..."- விராட் கோலி

Published:Updated:

Virat Kohli: `நான் வீழ்வேனென்று நினைத்தாயோ...'- தோல்விக்கு முன் நம்பிக்கையுடன் பேசிய விராட் கோலி!

"190 ரன்களை எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் 200- க்கு நெருக்கமாக எடுத்துவிட்டோம். இது நிச்சயமாக சவால் அளிக்கக்கூடிய ஸ்கோர்தான். ஆனால்..."- விராட் கோலி

விராட் கோலி
நேற்றைய ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி தோல்வியுற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிப் பெறாமல் வெளியேறியிருந்தாலும் விராட் கோலி 61 பந்தில் சதம் அடித்து சிறப்பாக விளையாடி இருந்தார்.

இந்நிலையில் சதம் அடித்துவிட்டு பேசிய விராட் கோலி, “டி20 யில் என்னுடைய ஆட்டம் சரிவை சந்தித்திருப்பதாக பலரும் எண்ணினார்கள். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. மீண்டும் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை அனுபவித்து ஆடியிருக்கிறேன். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.மழையை பற்றியோ மற்ற போட்டிகளின் முடிவை பற்றியோ நான் யோசிக்கவில்லை. அணிக்காக என்னால் என்ன செய்ய முடியும் என்பதை பற்றி மட்டும்தான் சிந்தித்தேன்.

Virat Kohli
Virat Kohli

190 ரன்களை எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் 200- க்கு நெருக்கமாக எடுத்துவிட்டோம். இது நிச்சயமாக சவால் அளிக்கக்கூடிய ஸ்கோர்தான். எங்களால் வெற்றி பெற முடியும். இப்போது திட்டங்களை செயல்படுத்துவது எல்லாம் பவுலர்களின் கையில்தான் இருக்கிறது. அவர்களது திட்டங்களைச்  சரியாக செயல்படுத்தி குஜராத்தை கட்டுப்படுத்த வேண்டும்.' என்று விராட் கோலி பவுலர்கள் மீது நம்பிக்கையோடு பேசியிருந்தார். ஆனால் ஆர்சிபி பவுலர்கள் கோலியின் நம்பிக்கையைக் காப்பாற்றவில்லை. இதனால் ஆர்சிபி தோல்வியை தழுவித்  தொடரை விட்டு வெளியேறிவிட்டது.