Published:Updated:

Virat Kohli: “என்று என் உத்வேகம் போகிறதோ, அன்று இவ்விளையாட்டை நான் விளையாடமாட்டேன்" - கோலி

Virat Kohli

அந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒரே குறிப்பிட்ட பேட்டடர்னில் தான் தொடர்ந்து ஆட்டமிழந்து வந்தேன். நான் சரியாக விளையாடவில்லை என்று அப்போது எனக்கே தெரிந்தது.

Virat Kohli: “என்று என் உத்வேகம் போகிறதோ, அன்று இவ்விளையாட்டை நான் விளையாடமாட்டேன்" - கோலி

அந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒரே குறிப்பிட்ட பேட்டடர்னில் தான் தொடர்ந்து ஆட்டமிழந்து வந்தேன். நான் சரியாக விளையாடவில்லை என்று அப்போது எனக்கே தெரிந்தது.

Published:Updated:
Virat Kohli

எப்பேற்பட்ட வீரனுக்கும் தன் வாழ்வில் சறுக்கல் ஏற்படும். தன் கட்டுப்பாட்டை மீறி அவன் வீழ்ந்துகொண்டிருப்பான். ‘உன் காலம் முடிந்துவிட்டது’ என உலகம் அவனை அதிகம் விமர்சிக்கும். ஆனால் அக்குறிப்பிட்ட அத்தியாயத்தைக் கடக்கும்போது அவ்வீரனின் நெஞ்சுரம் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும். அதுதான் அவனை மாவீரனாகவும் மாற்றுகிறது. விராட் கோலியும் அப்படியான ஒரு காலகட்டத்தில் இருக்கிறார்.

 Virat Kohli - விராட் கோலி
Virat Kohli - விராட் கோலி

அரைசதங்கள் தொடர்ந்து அடித்துவந்தாலும் மிக நீண்ட காலமாக காத்திருப்பில் இருந்து வருகிறது அந்த 71-வது சதம். இது ஒருபுறம் இருக்க டி20 உலகக்கோப்பை தோல்வி, வைட்-பால் ஃபார்மெட் தொடங்கி டெஸ்ட் வரை கேப்டன்சியில் இருந்து விலகியது என கடந்த ஓராண்டு காலமாகவே மனதளவிலும் பல சவால்களையும் அவர் சந்திக்க வேண்டி இருந்தது. போதாகுறைக்கு 2008-ம் ஆண்டிக்கு பிறகு தற்போது தான் மிக மோசமான ஒரு ஐ.பி.எல் ஃபெர்பார்மன்ஸை வெளிப்படுத்தியிருக்கிறார் கோலி. ஆனால் நேற்றைய தினத்தில் கோலி ஆடிய அந்த ஒற்றை இன்னிங்ஸ் மேற்சொன்ன அனைத்தையும் மறக்கடித்துவிட்டன. நீண்ட நாட்களுக்கு அப்படியான ஒரு பாசிட்டிவ் இன்டென்ட் அவரிடம் வெளிப்பட்டது. கோலி போன்ற வீரர்களுக்கெல்லாம் ஃபார்ம் அவுட், சிறந்த ஃபார்ம் ஆகிய இரண்டிற்குமான இடைப்பட்ட தூரம் ஒரே ஒரு இன்னிங்ஸ் தான். எனவே இது தொடரும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால் இந்த எண்கள், விமர்சனங்கள் என எதுவும் தன்னை ஒரு போதும் பாதிக்காது என நேற்றை ஆட்டத்திற்கு முன்பாகவே கூறிவிட்டார் கோலி. தன் தற்போதைய ஃபார்ம், கிரிக்கெட்டில் இருந்து சின்ன இடைவெளி குறித்த தன் பார்வை என பலவற்றை குறித்தும் அவர் பேசியும் நிலையில் அதில் இருந்து சிறிய பகுதி இதோ,

விராட் கோலி
விராட் கோலி
“ 2014-ம் ஆண்டோடு ஒப்பிடுவதை நான் ஏற்கமாட்டேன் ”

இதற்குமுன் இப்படியான ஒரு சரிவை கோலி கடைசியாக சந்தித்தது 2014-ம் ஆண்டில் தான். ஆனால் அதோடு தன் தற்போதைய ஃபார்மை ஒப்பிடுவது தன்னால் ஏற்கமுடியாது என கூறுகிறார் கோலி. “ அந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒரே குறிப்பிட்ட பேட்டடர்னில் தான் தொடர்ந்து ஆட்டமிழந்து வந்தேன். நான் சரியாக விளையாடவில்லை என்று அப்போது எனக்கே தெரிந்தது. அதனால் கடுமையாக உழைத்து அதில் இருந்து மீண்டு வர என்னால் முடிந்தது. ஆனால் அது மாதிரியான எந்த ஒரு பேட்டர்னும் தற்போது இல்லை. மேலும் குறிப்பிட்ட ஒன்றில் தான் நான் பலவீனமாக உள்ளேன் என்றும் கைகாட்ட முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே இதில் இருந்து நான் விரைவில் மீண்டு வந்துவிட முடியும். ஆனால் இதை நான் அவ்வளவு எளிதில் கடந்துவிட மாட்டேன். விளையாட்டு வீரனுக்குத் தேவையான முக்கிய பண்புகளை இதுபோன்ற காலத்தில்தான் என்னால் கற்றுக்கொள்ள முடியும். என் ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பரிணாம காலம் இது. இவ்விளையாட்டை விளையாட வேண்டும் என்று எனக்குள் இருக்கும் உத்வேகம் அப்படியேதான் உள்ளது. அது என்றைக்கும் என்னை விட்டுப் போகாது. எப்போது போகிறதோ, அன்று இவ்விளையாட்டை நான் விளையாட மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

விராட் கோலி
விராட் கோலி
“ களத்திற்கு சின்ன இடைவெளி ”

இடைவெளி இல்லாமல் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவதே கோலியின் இந்த ஃபார்ம் அவுட்டிற்கு பலராலும் சொல்லப்படும் காரணம். எனவே போட்டிகள் விளையாடுவதில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுத்துவிட்டு வருமாறு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. அதில் மிக முக்கியமானவர் முன்னர் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி. “ கடந்த ஆறேழு வருடங்களாக என் கிரிக்கெட் வாழ்க்கையில் மிக நெருக்கமாக பயணித்தவர் ரவி சாஸ்திரி. கிரிக்கெட்டில் இருந்து சிறிய இடைவெளியும் யோசிக்க வேண்டிய விஷயம்தான். ஒரு விஷயத்தில் 100 சதவிகிதம் பங்களிப்பைத் தர இயலாதபோது அதைச் செய்யாமல் இருப்பதே நல்லது. எனவே சிறிய ஓய்வெடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. இதுகுறித்து ராகுல் டிராவிட் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தினரிடம் ஆலோசித்து எனக்கும் அணிக்கும் சிறந்த ஒரு முடிவை விரைவில் எடுப்பேன்.” என்றார்.

“ அடுத்த இலக்கு ”

எதிர்வரும் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பையை வெல்வதே தன்னுடைய தற்போதைய இலக்காக கூறும் கோலி இப்படி கூறி முடித்தார் “அணிக்காக எதையும் செய்ய நான் தயாராக உள்ளேன் ”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism