Published:Updated:

`லிண்டேவை காலிசெய்து ஹிஸ்டரியில் இடம்பிடித்த உமேஷ் யாதவ்'- என்ஜாய் பண்ணிய விராட் கோலி! #viralvideo

தென்னாபிரிக்கா பௌலர் லிண்டே அடுத்த ஓவர் வீசியபோதும் அவரை நோகடித்தார் உமேஷ்.

உமேஷ் யாதவ்
உமேஷ் யாதவ்

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 58 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. இதற்கிடையே இரண்டாம் நாள் ஆட்டத்திலும் ரோஹித்தும், ரஹானேவும் தங்கள் ஃபார்மை தொடர்ந்தனர். சிறப்பாக விளையாடிய ரோஹித், டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்து அட்டமிழந்தார். மறுபுறம் ரஹானே சதம் அடித்து ஆட்டமிழக்க அடுத்துவந்த வீரர்களில் ஜடேஜா சிறப்பாக விளையாடினார்.

உமேஷ் யாதவ்
உமேஷ் யாதவ்

அசத்தலாக அரைசதம் அடித்த ஜடேஜா 51 ரன்களில் வெளியேறினார். இதன்பிறகு தான் அந்த சம்பவம் நிகழ்ந்து. ஜடேஜா அட்டமிழந்த பிறகு களத்திற்கு வந்தார் உமேஷ் யாதவ். விரைவில் அவுட் ஆகி விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் வந்து நின்ற செகண்ட் முதல் வாணவேடிக்கை காட்டத் தொடங்கினார். களத்திற்கு வந்த முதல் பந்தையே சிக்ஸருக்கு பறக்கவிட்ட உமேஷ், அடுத்த பந்திலும் சிக்ஸர் விளாசினார். இந்த ஓவரை வீசியது தென்னாபிரிக்கா பௌலர் லிண்டே. இவர் அடுத்த ஓவர் வீசியபோதும் அவரை நோகடித்தார் உமேஷ். அந்த ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

50-வது டெஸ்ட்... நம்பர் 1 டீம்... கேப்டன் கோலி செய்த அந்த முக்கிய மாற்றம் என்ன?! #Kohli50

சந்தித்த 10 பந்துகளில் மொத்தமாக 5 சிக்ஸர்களுடன் 31 ரன்கள் அடித்த உமேஷ் யாதவ் லிண்டேவின் பந்திலேயே அவுட் ஆகினார். உமேஷின் இந்த அதிரடியை மிகுந்த உற்சாகத்துடன் கேப்டன் விராட் கோலி பார்த்துக்கொண்டே இருந்தார். இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. கோலிக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு நல்ல என்டர்டெயின்மெண்ட் காண்பித்த உமேஷ் யாதவ் தனது ஆட்டத்தின்மூலம் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனைகள் சிலவற்றை நிகழ்த்தியுள்ளார். டெஸ்ட்டின் ஒரு இன்னிங்ஸில் தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளுமே சிக்ஸர் அடித்த 3வது வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார் உமேஷ்.

`லிண்டேவை காலிசெய்து ஹிஸ்டரியில் இடம்பிடித்த உமேஷ் யாதவ்'- என்ஜாய் பண்ணிய விராட் கோலி! #viralvideo

இதற்கு முன் foffie williams, சச்சின் டெண்டுல்கர் என ஜாம்பவான்கள் மட்டுமே இதனை செய்திருந்தனர். இதேபோல் ஒரு இன்னிங்ஸில் பவுண்டரி அடிக்காமல் சிக்ஸ் மட்டுமே முதல் வீரரும் இவரே. 10 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஸ்ட்ரைக் ரேட் 310 வைத்திருந்தார். ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் இது என்பதால் இதிலும் ரெக்கார்டை பிரேக் செய்தார் உமேஷ்.

கேப்டன் கோலி, `ரிவர்ஸ் ஸ்விங்' ஷமி, `டைமிங்' ரோஹித்! - பிளஸ், மைனஸை ஷேர் செய்த ஷோயப் அக்தர்