Published:Updated:

விகடன் பொக்கிஷம்: மகனுக்காக... மைதானத்தில் ‘குருவி’ ஆட்டம்! - விஜய்-டோனி சரவெடி

விஜய்-டோனி
பிரீமியம் ஸ்டோரி
விஜய்-டோனி

விசில் போட்ட விஜய்-டோனி! - ஐபிஎல் முதல் கவரேஜ்!

விகடன் பொக்கிஷம்: மகனுக்காக... மைதானத்தில் ‘குருவி’ ஆட்டம்! - விஜய்-டோனி சரவெடி

விசில் போட்ட விஜய்-டோனி! - ஐபிஎல் முதல் கவரேஜ்!

Published:Updated:
விஜய்-டோனி
பிரீமியம் ஸ்டோரி
விஜய்-டோனி
07.05.2008 ஆனந்த விகடன் இதழில்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
விகடன் பொக்கிஷம்: மகனுக்காக... மைதானத்தில் ‘குருவி’ ஆட்டம்! - விஜய்-டோனி சரவெடி

சச்சினுக்கு எப்போதும் ஒரு ராசி... அவருடைய பிறந்த நாளின்போது சொந்த வீட்டில் இருக்கமாட்டார். சென்ற வருடப் பிறந்த நாளின்போது மேற்கிந்தியத் தீவுகளில் இருந்தவரின் இந்த வருட பர்த் டே ஸ்பாட், சென்னை! மெகா பிளாக் ஃபாரஸ்ட் கேக்கை வெட்டிய சச்சினுக்குப் பரிசாகக் காத்திருந்தது மவுன்ட்பிளாக் வாட்ச். சச்சினின் கையில் எப்போதும் இருப்பது, ரோலக்ஸ் வாட்ச். முதன்முறையாக ரோலக்ஸைக் கழற்றி, மவுன்ட்பிளாக்கை அணிந்துகொண்டார். காரணம், பரிசு தந்தவர் மும்பை இண்டியன்ஸ் அணியின் ஓனரான முகேஷ் அம்பானி!

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் கிரவுண்டில் சரவெடி பேட்டிங் பண்ண, இன்னொரு பக்கம் டிரம்ஸால் அதிரடி பண்ணுகிற டிரம்ஸ் சிவமணி... சென்னை ரசிகர்களின் ‘டிரம் டார்லிங்!’

‘`இந்த ஐடியாவை நான் பிரேசில்ல இருந்து கடன் வாங்கினேன். பிரேசில்ல ஃபுட்பால் மேட்ச் நடக்குறப்ப ‘பார்க்கன்’கிற வாத்தியத்தை அடிச்சு ஸ்டேடியத்தையே ஆட வைப்பாங்க. மியூஸிக், விளையாட்டு ரெண்டும் ஒண்ணாச் சேரும்போது ரசிகர்கள் பரவச நிலைக்குப் போறதைப் பார்த்தேன். இதை ஏன் கிரிக்கெட்ல கொண்டுவரக் கூடாதுன்னு யோசிச்சேன். கச்சேரி களைகட்டிருச்சு. எழுதிவெச்சுக்கோங்க... இந்த பிரேசில் கான்செப்ட் சீக்கிரமே கிரிக்கெட்ல பிரிக்க முடியாத ஒரு மேட்டர் ஆகிடும்!’’ அதிரடியாகச் சிரிக்கிறார் டிரம்ஸ் சிவமணி.

விகடன் பொக்கிஷம்: மகனுக்காக... மைதானத்தில் ‘குருவி’ ஆட்டம்! - விஜய்-டோனி சரவெடி

டோனியின் புது ஃப்ரெண்ட்... சஞ்சய். இளைய தளபதி விஜய்யின் மகன். இவ்வளவு நாள்களாக மீடியா கண்ணில் படாமல் சஞ்சயைப் பாதுகாத்து வந்தார் விஜய். கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெயித்ததும் கண்களில் சந்தோஷம் கொப்பளிக்க சஞ்சயை முதுகில் தூக்கி வந்தார் விஜய். ஹாட்ரிக் ஹிட் கொடுத்த சந்தோஷத்தில் இருந்த டோனிக்கு சஞ்சயைப் பார்த்ததும் எக்ஸ்ட்ரா சந்தோஷம்! அப்பா முதுகில் இருந்தபடியே டோனிக்குக் கை கொடுத்து அறிமுகம் ஆகிக்கொண்டான் சஞ்சய். ‘`கிரிக்கெட் ஆடத் தெரியுமா?’’ என்று டோனி கேட்க, உற்சாகமாகத் தலையாட்டினான் சஞ்சய். ஜெயித்த டீமின் பெயரை அறிவிக்கவும், வெறும் விரலை வைத்து நாக்கை மடித்து டோனி ஹை டெஸிபல் விசில் அடித்து விஜய்க்கு ஆச்சர்யம் கொடுத்தார். ‘`நீயும் விசில் அடிப்பா..!’’ என்று தன் பாக்கெட் டில் இருந்த விசிலை எடுத்து சஞ்சய் கொடுக்க, விட்டு விட்டு விசில் அடித்து குஷிப்படுத்தினார் விஜய். க்ளைமாக்ஸ் இசையாக டிரம்ஸ் சிவமணி தடதடவென துள்ளலாக டிரம்ஸ் அடிக்க ஆரம்பித்தார். ‘`அப்பா ஆடுப்பா!’’ என்று சஞ்சய் கேட்க, பல்லேலக்கா ஸ்டைலில் மகனைத் தூக்கிக்கொண்டு ஜாலியாக ஆட ஆரம்பித்தார் விஜய். பொது இடங்களில் சைலன்ட்டாகப் பம்மும் விஜய்யின் ஜாலி ஆட்டம், சேப்பாக்கத்துக்கே சர்ப்ரைஸ்!

கிரவுண்டில் டோனியைப் பார்க்க வேண்டும் என்பது சஞ்சயின் விருப்பம். மகனின் ஆசைக்காக, மைதானத்துக்குள் வந்துவிட்டார் விஜய். பாசக்கார அப்பா!

விகடன் பொக்கிஷம்: மகனுக்காக... மைதானத்தில் ‘குருவி’ ஆட்டம்! - விஜய்-டோனி சரவெடி

ஐ.பி.எல்லின் எட்டு அணிகளுக்கும் புதிய பிரச்னை ஆரம்பம். மே மாதத்தின் முதல் வாரத்தில் ஆஸ்திரேலிய அணி, மேற்கிந்தியத் தீவுகளை எதிர்த்து விளையாட இருக்கிறது. இதற்காக பான்டிங், ஹைடன், மைக்கேல் ஹஸ்ஸி, பிராக்கன், சைமண்ட்ஸ், லங்கர், டேவிட் ஹஸ்ஸி, ஹோப்ஸ் என முக்கியமான வீரர்கள் அத்தனை பேரும் ஆஸ்திரேலியா கிளம்பிச் செல்ல இருக்கிறார்கள். இதில் அதிக பாதிப்பு நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத்தான். மூன்று போட்டிகளிலும் மும்முரமாக ஆடிய ஹைடனும் அதிரடி பேட்ஸ்மேன் ஹஸ்ஸியும் கிளம்ப இருக்கிறார்கள். அதற்கடுத்த வாரத்தில் இங்கிலாந்து டூருக்காக நியூசிலாந்து அணிக்கு விளையாட, சென்னையின் மிக முக்கியமான ஆல் ரவுண்டரான ஜேக்கப் ஓரமும் கிளம்பிவிடுவார். முக்கியமான மூவர் இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படிச் சமாளிக்கப் போகிறது?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இயக்குநர் வி.பி.சந்திரசேகரிடம் கேட்டோம். ‘`இதுவரை வராமல் இருந்த தென்னாப் பிரிக்காவின் மார்கல், நிதினி இருவரும் இந்த வாரத்தில் வந்து விளையாட இருக்கிறார்கள். ஹஸ்ஸி மற்றும் ஓரம் இடத்தை இவர்கள் நிரப்பிவிடுவார்கள். ஸ்டீஃபன் ஃப்ளெமிங் இனி தொடர்ந்து எல்லாப் போட்டிகளிலும் இறங்க இருக்கிறார். கிரிக்கெட் என்பது ஒரு டீம் விளையாட்டு. வென்று காட்டுவோம்!’’ என்றார் உற்சாகமாக.

இந்த ஐ.பி.எல். போட்டியின் சர்ச்சை நாயகி, நயன்தாரா! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திரத் தூதரானவர், போட்டி நடக்கும்போது வரவில்லை என்பதால், காலியானது பதவி. ‘புதிய தூதர் த்ரிஷா!’ என்று செய்திகள் செம ஹாட்டாக வந்து விழ, கொதித்து விட்டார் நயன்தாரா. ‘`எனக்கு எதிராகச் சிலர் கூட இருந்தே சதி பண்ணிக் குழிபறிக்கிறார்கள்’’ என்று ஆவேச அறிக்கை விட்டார். நட்சத்திர உண்ணாவிரதத்தில் அவ்வளவு நெருக்கமான தோழிகளாக வலம் வந்தவர்களின் நட்பு, நாலே வாரத்தில் புட்டுக்கிச்சு!

ஐ.பி.எல். போட்டியால் உலக அணி வீரர்கள் ஒற்றுமையாக மாற, உள்ளூர் ஆட்கள் அடித் துக்கொள்ள ஆரம்பித்திருக் கிறார்கள் சாமியோவ்!

- எஸ்.கலீல்ராஜா

படங்கள்: சு.குமரேசன், ம.அமுதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism