Published:Updated:

விஜய் ஹசாரே கோப்பை: ஒரே ஓவரில் ஏழு சிக்ஸ் அடித்து அசத்திய ருத்துராஜ்!

ருத்துராஜ் கெய்க்வாட்

'6, 6, 6, 6, NB6, 6, 6' என்ற கணக்கில் ஓவரில் ஏழு சிக்ஸர் அடித்து அசத்திய ருதுராஜ் ...!

விஜய் ஹசாரே கோப்பை: ஒரே ஓவரில் ஏழு சிக்ஸ் அடித்து அசத்திய ருத்துராஜ்!

'6, 6, 6, 6, NB6, 6, 6' என்ற கணக்கில் ஓவரில் ஏழு சிக்ஸர் அடித்து அசத்திய ருதுராஜ் ...!

Published:Updated:
ருத்துராஜ் கெய்க்வாட்
இந்தியாவில் தற்போது 'விஜய் ஹசாரே கோப்பை' ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 38 அணிகள் என இந்தியாவின் பல்வேறு மாநில அணிகள் பங்குபெற்றுள்ளன. இத்தொடர் இந்த மாதம் நவம்பர் 12ம் தேதி தொடங்கி டிசம்பர் 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கான இரண்டாவது காலிறுதிப் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும்நிலையில் மகாராஷ்டிரா- உத்தரப்பிரதேசம், சௌராஷ்டிரா- தமிழ்நாடு, பஞ்சாப்-கர்நாடகா, ஜம்மு காஷ்மீர்-அசாம் அணிகளுக்கிடையானப் போட்டிகள் இன்று நடைபெறுகின்றன.

இதில் தற்போது அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் `மகாராஷ்டிரா- உத்தரப்பிரதேச' அணிகளுக்கிடையானப் போட்டியில் டாஸ் வென்ற உத்தரப்பிரதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்த ஆட்டத்தில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனான ருத்துராஜ் கெய்க்வாட், நிதானமாக தனது ஆட்டத்தைத் தொடங்கி, பின்னர் அதிரடியாகக் கடைசி 48வது ஓவரில் சிவா சிங் பந்துவீச்சில் முதல் நான்கு பந்துகளிலும் சிக்ஸ் சிக்ஸர் அடித்தார். பின்னர், தடுமாறிய பந்துவீச்சாளர் சிவா சிங், நோ-பாலை வீச அதையும் சிக்ஸராக மாற்றி ஸ்கோர் செய்து, ஓவரில் மீதிருந்த இரண்டு பந்துகளையும் அடுத்தது சிக்ஸர் ஆக்கினார். இவ்வாறு '6, 6, 6, 6, N6, 6, 6' என்ற கணக்கில் ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர் எடுத்து அசத்தி, மொத்தம் 159 பந்துகளில் 220 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

மகாராஷ்டிரா அணி ஐம்பது ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்துள்ள நிலையில் தற்போது, உத்தரப்பிரதேச அணி 330 ரன்களை இலக்காகக் கொண்டு பேட்டிங்கில் களமிறங்கியுள்ளது.