Published:Updated:

மறுக்கப்பட்ட வாய்ப்புகளுக்கான பதிலடி; ஆஷஸில் தொலைந்து ஆஷஸிலேயே மீண்ட கவாஜா!

கவாஜா
News
கவாஜா ( Fox Cricket )

வார்னர், லபுஷான், ஸ்மித் இந்த லைன் அப்பை தாண்டி அவர்களை விட மிகச்சிறப்பாக ஒரு க்ளாஸான இன்னிங்ஸை கவாஜா ஆடியிருக்கிறார்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஆஷஸ் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே 3-0 என ஆஸ்திரேலியா இந்த ஆஷஸை வென்றுவிட்ட நிலையில் நான்காவது போட்டி இப்போது சிட்னியில் நடந்துக் கொண்டிருக்கிறது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணிக்காக கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்கிய உஸ்மான் கவாஜா அசத்தலான சதத்தை அடித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா இந்த ஆஷஸ் தொடரை ரொம்பவே எளிதாக வென்றுவிட்டது. ஆனால், இந்த வெற்றியை விட இந்த ஆஷஸில் சில ஆஸ்திரேலிய வீரர்களின் எழுச்சி அதிகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 17 போட்டிகளாக பென்ச்சில் வைக்கப்பட்டிருந்த மைக்கேல் நீசருக்கு இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொப்பி அணிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் பூர்வக்குடி இனத்தை சேர்ந்த ஸ்காட் போலண்ட்டிற்கு கடந்த மூன்றாவது போட்டியில் முதல் முறையாக ப்ளேயிங் லெவனில் இடம் கிடைத்தது. இந்த இரண்டு அறிமுக வீரர்களுக்குமே ஆஸ்திரேலிய ரசிகர்கள் மட்டுமில்லாமல் அத்தனை நாட்டு ரசிகர்கள் மத்தியிலுமே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அவர்களும் நன்றாகவே பெர்ஃபார்ம் செய்திருந்தனர். இப்போது சிட்னியில் நடைபெற்று வரும் நான்காவது போட்டியில் உஸ்மான் கவாஜாவிற்கு ப்ளேயிங் லெவனில் இடம் கிடைத்திருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கிட்டத்தட்ட இரண்டரை வருடத்திற்கு பிறகு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக ஆடி 260 பந்துகளில் 137 ரன்களை அடித்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றிலேயே உஸ்மான் கவாஜா ஒரு முக்கியமான வீரராக பார்க்கப்பட்டார். ஏனெனில், ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாகி விளையாடிய முதல் இஸ்லாமிய வீரர் அவரே. டெஸ்ட் போட்டிகள் மற்றும் லிமிட்டெட் ஓவர் என அத்தனை ஃபார்மட்டிலும் நன்றாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தவர். எல்லா வீரர்களும் எதிர்கொள்ளும் ஃபார்ம் அவுட் பிரச்சனையை கவாஜாவும் எதிர்கொண்டார். 2019 ஆஷஸ் தொடரின் போது அணியிலிருந்து டிராப் செய்யப்பட்டார். அதன்பிறகு, ஆஸ்திரேலிய அணியில் ஆடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவே இல்லை. சிறப்பாக பெர்ஃபார்ம் செய்திருந்த போதும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலியிருந்தும் ஓரங்கட்டப்பட்டார். 2020 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணியின் சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டார்.

கடைசி இரண்டரை கவாஜாவிற்கு முழுக்க முழுக்க சோதனை காலமாகவே இருந்தது. அணியிலிருந்து நீக்கப்பட்ட விரக்தியில் தேர்வுக்குழு மற்றும் தேர்வுமுறை குறித்த தன்னுடைய அதிருப்திகளையும் கவாஜா வெளிப்படையாகவே பேசியிருந்தார். மேலும், ரேசிசம் குறித்தும் அவருக்கு நிகழ்ந்த பாதிப்புகள் குறித்துமே வெளிப்படையாக பேசியிருந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
இந்த நிறத்தில் இருப்பவர்களெல்லாம் ஆஸ்திரேலிய அணிக்கு ஆட தகுதியற்றவர்கள். உன்னாலெல்லாம் ஆஸ்திரேலிய அணிக்கு ஆடவே முடியாது என்கிற வகையில் தீவிரமாக கவாஜா மீது இனவெறி தாக்குதலை சில வீரர்களே செய்திருக்கின்றனர்.
Khawaja
Khawaja
AP

இதைப்பற்றியெல்லாம் மனம் திறந்து வேதனையுடன் பேசியிருந்தார்.

இதையெல்லாம் தாண்டி ஆஸ்திரேலிய அணிக்காக ஆடி தன் பெயரை அழுத்தமாக பதித்தவருக்கு ஃபார்ம் அவுட்டிலிருந்து மீண்டு மீண்டும் அணியில் இடம்பெறுவது என்ன அவ்வளவு சிரமமா? உள்ளூர் போட்டிகளுக்கு சென்றார். குயின்ஸ்லாந்து அணிக்காக வெறித்தனமாக ஸ்கோர் செய்ய தொடங்கினார். இரண்டரை ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆஷஸ் தொடரிலேயே கம்பேக் கொடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், அணியின் ப்ளேயிங் லெவனில் இடம் கிடைப்பது கொஞ்சம் சவாலான விஷயமாகவே இருந்தது. முதல் மூன்று போட்டிகளில் பென்ச்சிலேயே இருந்தார். நான்காவது போட்டிக்கு முன்பாக ட்ராவிஸ் ஹெட் கொரோனா பாதிப்புக்குள்ளாகவே அவருக்கு பதிலாக ப்ளேயிங் லெவனின் நம்பர் 5 பொசிசனில் கவாஜாவிற்கு இடம் கிடைத்தது. இந்த போட்டி நடைபெற்று வரும் சிட்னி மைதானம் அவருக்கு ரொம்பவே ஸ்பெசலானது. அவர் கிரிக்கெட் ஆடி பழகிய மைதானம் என்பதை தாண்டி 2010-11 ஆஷஸில் கவாஜாவின் டெஸ்ட் அறிமுகமும் இந்த மைதானத்திலேயே அரங்கேறியிருந்தது. அந்த போட்டியிலும் கவாஜா நேரடி சாய்ஸாக இல்லை. ரிக்கி பாண்டிங்கிற்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாகவே அந்த டெஸ்ட்டில் உஸ்மான் கவாஜா களமிறங்கியிருந்தார்.

ரிக்கி பாண்டிங்
ரிக்கி பாண்டிங்
கவாஜா சிறந்த வீரர். அவரின் கன்ஸிஸ்டன்சி மட்டுமே அவருக்கு பிரச்சனையாக இருக்கிறது. கவாஜா அணியிலிருந்து நீக்கப்பட்டது வருத்தமே. அவர் மீண்டும் அணிக்கு திரும்புவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும். அங்கே மலையென ரன் குவிக்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் அதை கவாஜா தவறவேவிடமாட்டார்
ரிக்கி பாண்டிங்

கவாஜா ஆஸ்திரேலிய அணியின் ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்ட போது ரிக்கி பாண்டிங் இவ்வாறு பேசியிருந்தார்.

கமெண்ட்ரி பாக்ஸில் உட்காந்துக் கொண்டு நடக்கப்போவதை முன்கூட்டியே பல முறை கணித்திருக்கும் ரிக்கிபாண்டிங்கிற்கு, காலம் கடந்து எதிர்காலத்தை கணிக்கும் சக்தியும் இருக்கிறது போல! அவர் சொன்னதை போலவே கவாஜா உள்ளூர் போட்டிகளுக்கு ஆட சென்றார். மலையென ரன்களை குவித்தார். அணிக்குள் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதை தவறவிடாமல் அட்டகாசமான சதமாக மாற்றியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கவாஜா
கவாஜா
Cricket Australia

வார்னர், லபுஷான், ஸ்மித் இந்த லைன் அப்பை தாண்டி அவர்களை விட மிகச்சிறப்பாக ஒரு க்ளாஸான இன்னிங்ஸை கவாஜா ஆடியிருக்கிறார். இந்த தொடரில் முதல் முறையாக ஸ்டுவர்ட் ப்ராட், ஆண்டர்சன் இவர்களோடு மார்க் வுட் என மூன்று பேரும் இணைந்து பந்துவீசிய போட்டி இது. ப்ராட் + ஆண்டர்சனின் அனுபவம் மற்றும் மார்க் வுட்டின் வேகம் இரண்டும் இணைந்து இங்கிலாந்தின் பந்துவீச்சிற்கு புதிய நிறத்தை கொடுத்திருந்தது. இந்த மூவர் கூட்டணியோடு ஐடியாக்காரரான பென் ஸ்டோக்ஸும் இணைந்து கொள்ள இங்கிலாந்தின் பந்துவீச்சு அபாயகரமானதாக இருந்தது. ஆனால், கவாஜா இந்த நால்வரையுமே மிகச்சிறப்பாக சமாளித்திருந்தார். கடந்த போட்டிகளில் ஷார்ட் பிட்ச்சாக வீசி அடி வாங்கியிருந்ததால் இந்த முறை கொஞ்சம் ஃபுல் லெந்தில் வீசி இங்கிலாந்து பௌலர்கள் ரிஸ்க் எடுத்திருந்தனர். ஸ்லாட்டில் விழுந்த பந்துகளையும் முழுமையாக அட்டாக் செய்யாமல் நின்று நிதானமாகவே கவாஜா ஆடியிருந்தார். கொஞ்ச நேரத்திற்கு மீண்டும் பழைய திட்டமாக ஷார்ட் பாலை வீசும் திட்டத்திற்கு இங்கிலாந்து பௌலர்கள் திரும்பியிருந்தனர். லெக் சைடில் டீப்பில் 3 ஃபீல்டர்கள், ஷார்ட் லெக், டீப் தேர்டுமேன் என வைத்து முழுமையாக ஷார்ட் பால்களாக வீசி கவாஜாவை பெரிய ஷாட் ஆட வைத்து விக்கெட்டை வீழ்த்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், இந்த ஷார்ட் பால்களையும் கவாஜா லாவகமாக எதிர்கொண்டிருந்தார். இடதுகை ஸ்பின்னரான ஜேக் லீச்சை கொஞ்சம் அட்டாக் செய்தே ஸ்கோரையும் உயர்த்தியிருந்தார். மொத்தமாக 260 பந்துகளில் 137 ரன்களை அடித்து ஆண்டர்சனின் பந்தில் எட்ஜ் ஆகி போல்டை பறிகொடுத்திருந்தார். வார்னர், லபுஷான், ஸ்மித் மூவரையும் இங்கிலாந்து கட்டுப்படுத்திய பிறகும் ஆஸ்திரேலியா 416 ரன்களை எடுத்து வலுவான நிலைக்கு சென்றதற்கு கவாஜாவின் சதமே மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

Khawaja
Khawaja
ICC
சதமடித்துவிட்டு பிரபல கூடைப்பந்தாட்ட வீரரான LeBron James ன் LeBron Silencer கொண்டாட்டத்தை கவாஜா களத்தில் செய்திருந்தார்.

இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் அவர் மீது எழுந்த விமர்சனங்களுக்கும் மறுக்கப்பட்ட வாய்ப்புகளுக்குமான பதிலடியாகவே இந்த கொண்டாட்டம் அமைந்திருந்தது.