Published:Updated:

பிக் பேஷ் தொடரில் அறிமுகமான முதல் இந்திய வீரர் உன்முக்த் சந்த்... ஆனால், அங்கும் சுமாரான தொடக்கமே!

Unmukt Chand

ஐ.பி.எல் கரியரின் முதல் பந்தில் பிரெட் லீ வேகத்துக்கு ஸ்டம்புகளைப் பறிகொடுத்த உன்முக்த் சந்த், பிக் பேஷ் தொடரின் முதல் போட்டியில் ஆறு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

பிக் பேஷ் தொடரில் அறிமுகமான முதல் இந்திய வீரர் உன்முக்த் சந்த்... ஆனால், அங்கும் சுமாரான தொடக்கமே!

ஐ.பி.எல் கரியரின் முதல் பந்தில் பிரெட் லீ வேகத்துக்கு ஸ்டம்புகளைப் பறிகொடுத்த உன்முக்த் சந்த், பிக் பேஷ் தொடரின் முதல் போட்டியில் ஆறு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

Published:Updated:
Unmukt Chand

வெளிநாட்டு கிரிக்கெட் லீகில் இந்திய வீரர்கள் விளையாட முடியாது என்ற நிலை இருக்கும்போது, ஆடவர் பிக் பேஷ் லீக்கில் முதல்முறையாக ஒரு இந்திய வீரர் ஒருவர் நேற்று ஆடியிருக்கிறார். இனி இந்திய அணிக்காக ஆடவில்லை என்று கூறிய முன்னாள் அண்டர் 19 அணியின் கேப்டன் உன்முக்த் சந்த் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணிக்காக அறிமுகமாகியிருக்கிறார்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களுக்கு உன்முக்த் சந்த் பற்றிஒ பேசினால் இரண்டு விஷயங்கள் ஞாபகம் வரும். ஒன்று, 2012-ம் ஆண்டு அண்டர் 19 உலகக்கோப்பையில் சதமடித்து கோப்பை ஜெயித்துக்கொடுத்த கேப்டன். மற்றொன்று, 2013 ஐ.பி.எல் தொடக்க போட்டியில் பிரெட் லீ பந்தில் போல்டானது. இது மக்களால் மறக்க முடியாமல் போனது அவரின் துரதிர்ஷ்டம்.

உன்முக்த் சந்த்
உன்முக்த் சந்த்
File Photo

முகமது கைஃப், விராட் கோலி, உன்முக்த் சந்த், பிரித்வி ஷா ஆகியோர் இந்தியாவுக்காக அண்டர் 19 உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டன்கள். இதில் சந்த் தவிர அனைவரும் இந்திய அணியில் விளையாடிவிட்டனர். சந்துடன் விளையாடிய சந்தீப் சர்மா, ஹனுமா விஹாரி போன்றோர் இந்திய அணிக்கு விளையாடியுள்ளனர். ஆனால், இவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஐ.பி.எல் தொடரில் (2011 - 2016) இதுவரை 21 போட்டிகளில் விளையாடியுள்ளார் உன்முக்த் சந்த். முதல்தர கிரிக்கெட்டில் 67 போட்டிகளில் 31 சராசரி வைத்துள்ளார். உத்தரகாண்ட் மற்றும் டெல்லி அணிகளுக்கு உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐ.பி.எல் தொடரில் மிகவும் சுமாராக செயல்பட்டதால் அதிகமாக வாய்ப்பு கிடைக்கவில்லை. வேறொரு தொடரில் விளையாடலாம் என்று பார்த்தால், அதற்கும் வாய்ப்பில்லாமல் போனது.

Unmukt Chand
Unmukt Chand

இந்திய வீரர்கள் யாரும் வெளிநாட்டுத் தொடர்களில் விளையாடக்கூடாது என்பது பி.சி.சி.ஐ-யின் கட்டுப்பாடு. அப்படி விளையாட வேண்டுமானால் அவர்கள் இந்திய கிரிக்கெட் மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற வேண்டும். இதனை மறுபரிசீலனை செய்ய பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வருடம், இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக உன்முக்த் சந்த். பின்னர், அமெரிக்காவில் குடியேறி அங்குள்ள ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி, MILC-USA தொடரில் பட்டம் வென்றார். சர்வதேச அமெரிக்கா அணிக்காகவும் விரைவில் விளையாட இருக்கிறார். அவரை பிக் பாஷ் லீக்கில் மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது.

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் விளையாட வாய்ப்பு பெற்றார் சந்த். முதலில் ஆடிய ஹரிகேன்ஸ் 182 ரன்கள் எடுத்தது. பின்னர் சேஸ் செய்த ரெனகேட்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ரெனகேட்ஸ் அணிக்காக 4 வது வீரராக களமிறங்கிய சந்த் 8 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து லாமிசான் பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்லாக் ஸிவிப் ஆட முயன்று ஆட்டமிழந்தார். ஐ.பி.எல் போல், பிக் பேஷிலும் அவருக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை.

இதனிடையே இன்று சிட்னி தண்டர் அணிக்கு எதிரான போட்டியில், மீண்டும் மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணிக்காகக் களமிறங்கிய உன்முக்த் சந்த் 22 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸர்களும் அடங்கும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மெல்பர்ன் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. இந்த பிக் பேஷ் சீசனின் அனைத்து லீக் போட்டிகளும் முடிவடைந்திருக்கும் நிலையில், உன்முக்த் சந்த் இடம்பெற்றுள்ள மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.