Published:Updated:

Dhoni: போர்கண்ட சிங்கத்தின் 5 ஆட்டங்கள்; வெற்றி இல்லைதான், ஆனால் தோனி காட்டிய பயம்...

MS Dhoni

தன் அணி இக்கட்டான சூழலில் எப்போதெல்லாம் உள்ளதோ அப்போது அதை சரிசெய்பவனே நல்ல தலைவன். அப்படி தோனி தனியாளாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்ட போட்டிகள் ஏராளம்.

Dhoni: போர்கண்ட சிங்கத்தின் 5 ஆட்டங்கள்; வெற்றி இல்லைதான், ஆனால் தோனி காட்டிய பயம்...

தன் அணி இக்கட்டான சூழலில் எப்போதெல்லாம் உள்ளதோ அப்போது அதை சரிசெய்பவனே நல்ல தலைவன். அப்படி தோனி தனியாளாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்ட போட்டிகள் ஏராளம்.

Published:Updated:
MS Dhoni
ஜூலை 7 என்றவுடன் நம் நினைவுக்கு வரும் பெயர் மகேந்திர சிங் தோனி! இந்தியாவில் தோனி ஒரு பிராண்ட். நடுத்தர இளைஞர்களுக்கு தோனி ஒரு நம்பிக்கை!

ஐசிசியின் மூன்று கோப்பைகளையும் வென்றதால் அவர் சிறந்தவரா அல்லது இந்திய அணியை அனைத்து ஃபார்மர்ட்டுகளிலும் நம்பர் ஒன் அணியாக்கியதால் சிறந்தவரா ? இல்லவே இல்லை. இந்திய அணிக்கு கோப்பைகளை மட்டும் வாங்கித்தரவில்லை தோனி. அசைக்கமுடியாத நம்பிக்கைகளை தந்துவிட்டு சென்றிருக்கிறார் அவர். அந்நம்பிக்கைகள் இன்னும் எத்தனை தசாப்தங்கள் ஆனாலும் மாறாது!

MS Dhoni
MS Dhoni

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தோனியை நேசிப்பதற்கு காரணம் அவர் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கற்றுத்தந்த பாடங்கள். அவர் எப்போதும் சொல்லும் ஒரு விஷயம் "Process is more important than results". நாம் எடுக்கும் முயற்சிகள் வெற்றிக்கோட்டை தாண்டாமல் போகலாம். ஆனால் வெற்றி, தோல்விகளைத் தாண்டி அம்முயற்சிகள் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுத்தரும். தோனி தன் திட்டங்களைத்தான் மாற்றுவாரே தவிர முயற்சிகளை அல்ல.

தன் அணி இக்கட்டான சூழலில் எப்போதெல்லாம் உள்ளதோ அப்போது அதை சரிசெய்பவனே நல்ல தலைவன். அப்படி தோனி தனியாளாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்ட போட்டிகள் ஏராளம். அப்படி முயற்சி செய்து வெற்றி என்னும் முடிவை தரமுடியாமல் போன போட்டிகளும் உண்டு. ‘செத்தாலும் சண்டை போட்டு சாவனும் சார்’ என்பது போல தோற்றாலும் தோனி ஆடிய டாப் 5 இன்னிங்ஸ் இதோ!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

5 . 113 vs PAK

MS Dhoni
MS Dhoni

2012-ம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடியது. டி20 தொடர் 1-1 என சமனில் முடிய , ஒருநாள் தொடர் சென்னையில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் செய்ய. 8,4,0,2,4 என இந்தியாவின் முதல் ஐந்து பேட்டர்கள் ஒற்றை இலக்கில் வெளியேறினர். இதில் நான்கு விக்கெட்டுகளை ஜூனைத் கான் வீழ்த்தினார். பின்னர் ரெய்னா-தோனி இணைந்து நிதானமாக ஆடித்தொடங்கினர். ஹபீஸ் ரெய்னாவை 43 ரன்களில் போல்டாக்க தொடர்ந்து ஆடிய தோனி சதம் அடித்தார். இறுதியாக 125 பந்துகளில் 113 ரன்கள் அடித்திருந்தார் தோனி. கிட்டத்தட்ட இந்திய அணியின் பாதி ரன்களை தோனி மட்டுமே அடித்திருந்தார். இந்திய அணி அப்போட்டியில் 227 ரன்களை எடுத்தது. பின்னர் பாகிஸ்தான் அணியின் ஒப்பனரான ஹபீஸை ‘Debutant’ புவனேஷ்வர் குமார் தன் முதல் பந்திலேயே வீழ்த்தினாலும் நசீர் ஜம்ஷெட் சதத்தால் வெற்றி பெற்றது பாகிஸ்தான். ஆனால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டவர் தோனியே.

4. 139 vs AUS

MS Dhoni
MS Dhoni

2013-ம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 ஒருநாள் போட்டிகளை விளையாடியது ஆஸ்திரேலியா. இந்தத் தொடர் இந்திய ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒன்று. ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கும் வகையில் இருந்தது. இந்தியாவின் டாப் ஆர்டரின் ஃபார்ம், கேப்டனாக பெய்லியின் பங்களிப்புகள், ஃபால்கனர் காட்டிய அதிரடி என நினைவுகளை அள்ளி தந்த தொடர் இது. மொஹாலியில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் முதல் பேட் செய்த இந்திய அணி 76-4 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. சிறிது நேரம் தாக்குபிடித்த கோலி 68 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்வினுடன் இணைந்தார் கேப்டன் தோனி. வாட்சன் மற்றும் ஃபால்கனர் ஓவர்களை நாலாப்பக்கமும் பறக்கவிட்ட தோனி தன் 9-வது சதத்தை நிறைவு செய்தார். கடைசி ஓவரில் தனக்கே உரிய ‘ஹெலிகாப்டர் ஷாட்’ சிக்ஸர் ஒன்றையும் அடிப்பார். அப்போட்டியில் 121 பந்துகள் சந்தித்து 139 ரன்கள் அடித்திருப்பார் தோனி.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 213-6 என இருந்த நிலையில் தவிக்க இந்திய அணி நிச்சயம் வெற்றி பெரும் என்பதே அனைவரின் கணிப்பாகவும் இருந்தது. ஆனால் ஃபால்க்னர் 29 பந்துகளில் 64 ரன்கள் என கடைசி நேரத்தில் அதிரடி காட்ட போட்டியை வென்றது ஆஸ்திரேலியா.

3. 65 vs SL

தர்மசாலா என்று சொன்னால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது 2010-ல் பஞ்சாப் அணிக்கு எதிராக தோனி ஆடிய ருத்ரதாண்டவம்தான். எப்போதும் கூலாக பார்க்கப்பட்ட தோனி அன்று வெற்றி ரன்னை அடித்துவிட்டு ஹெல்மட்டை தட்டி கத்தினார். அதே தர்மசாலாவில் இம்முறை இந்திய அணிக்கு ரட்சகனாக மாறி ஓர் இன்னிங்ஸை ஆடினார் தோனி.

2017-ம் ஆண்டு இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தது. டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படவே ரோஹித் ஷர்மா தலைமையில் ஒருநாள் தொடருக்கு தயாரானது. முதல் ஒருநாள் போட்டி நடந்தது தர்மசாலாவில். டாஸ் வென்ற இலங்கை பவுலிங் செய்தது. இரு கேப்டன்களும் பேட்டிங் செய்ய ஏற்ற பிட்ச் என்று கருதினர். ஆனால், நடந்ததோ வேறு. இந்திய பேட்டர்கள் வருவதும் போவதுமாக இருக்க 29 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது இந்தியா. தோனி - குல்தீப் இணை சிறுது நேரம் தாக்குப்பிடிக்க, குல்தீப் 4 பவுண்டரிகள் அடித்து ஆட்டமிழந்தார். பின்னர், பும்ராவை வைத்துக் கொண்டு ரன்களை சேர்த்தார் தோனி. கடைசி விக்கெட்டாக 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் தோனி. இதில் பத்து பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். தோனியின் இந்த இன்னிங்ஸால் இந்தியா 112 என்னும் கவுரவமான ஸ்கோரை எட்டியது..

2. 79 vs KXIP

MS Dhoni
MS Dhoni

" திரும்பி வந்துட்டோம்ன்னு சொல்லு " என 2018-ம் ஆண்டு சிஎஸ்கே கம்பேக் கொடுத்த வருடம். முதல் போட்டி மும்பையுடன் பிராவோ அடுத்த ஆட்டத்தில் பில்லிங்கிஸ் என வெற்றிக்கான இன்னிங்ஸை ஒவ்வொருவரும் ஆடித்தர தோனியிடம் இருந்து அப்படி ஒரு இன்னிங்ஸ் வரவில்லை என்று ஏங்கினர் ரசிகர்கள். இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாபுடனான மூன்றாம் போட்டி மொஹாலியில் நடைப்பெற்றது. முதலில் பேட் செய்த பஞ்சாப் கெயிலின் அதிரடியால் 197 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய சென்னை அணியின் விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்தாலும் தோனி-ராயுடு இணை அணியை சரிவிலிருந்து மீட்டனர். "ஊருக்காக ஆடும் கலைஞன், தன்னை மறப்பான்; தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்" என்பது போல இந்த போட்டியில் முதுகு வலியால் அவதிப்பட்டார் தோனி. அதையும் மீறி அவரின் டிரேட்மார்க் மந்திரமான ‘Take game into deep’-ஐ பின்பற்றி ஆட்டத்தை இறுதி ஓவர் வரை அழைத்துச் சென்றார். பரீந்தர் ஓவரைத்தான் தோனி டார்கெட் செய்வார் என அனைவரும் எதிர்பார்க்க ஆண்ட்ரூ டை ஓவரை அட்டாக் செய்தார் அவர். கடைசி பந்தில் சிக்சர் அடித்தாலும் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதில் மோஹித் ஷர்மா வீசிய வைட் யார்க்கரை மிஸ் செய்வார், இதையே கோரே ஆண்டர்சன் செய்ய முற்படும்போது நகர்ந்து நின்று டீப் மிட்விக்கெட்டில் சிக்சர் அடித்து பெங்களூருக்கு எதிராக ஆட்டத்தை முடிப்பார் தோனி.

1. 84 vs RCB

ஐபிஎல் தொடரில் CSK vs MI ஆட்டங்களைப் போல் தான் CSK vs RCB ஆட்டங்களும். ஆல்பி மோர்க்கல் கேமியோ, ஆர்பி சிங் நோபால், தோனியின் ஃபினிஷிங் என இந்த அணிகளுக்கு இடையிலான எத்தனையோ ஃபிளாஷ்பேக்கள் நினைவுக்கு வரும். அப்படி ஒரு போட்டிதான் 2019 பெங்களூருவில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 161 ரன்களை எடுத்தது. பின்னர் சேஸிங் செய்த சென்னை அணியை ஸ்டெயின் பதம் பார்த்தார். அதுவும் ரெய்னாவை போல்டாக்கிய பந்தைப் பற்றி தனிக் கட்டுரையே எழுதலாம்.

MS Dhoni
MS Dhoni

பின்னர் ராயுடுவுடன் சேர்ந்து ஆடினார் தோனி. கடைசி ஓவரில் சென்னை அணிக்கு 26 ரன்கள் தேவை. பெங்களூரு அணிக்கே வெற்றி பெற அதிகம். ஆனால், "எதிர்த்து ஆடுறவன் பேரு தோனிமா!" என முதல் பந்து பவுண்டரி, அடுத்த பந்து 111 மீட்டருக்கு பிரம்மாண்ட சிக்ஸர், அடுத்தது சிக்ஸர், அடுத்த 2 பந்துகளும் பவுண்டரி, என கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையை எட்டியது பொட்டி. ஆனால் அப்பந்தில் ரன் அவுட்டானார் தாக்கூர். தோனி தன் அதிகபட்ச டி20 ஸ்கோரான 84 ரன்களை இப்போட்டியில் எடுத்தார். போட்டிக்கு பின்னர் கோலி சொன்ன வார்த்தைகள் இவை, "He gave us all an massive scare!" வெற்றி பெற்றிருந்தால் ஐபிஎல்லில் ஆகச்சிறந்த சேஸாக இந்த ஆட்டம் அமைந்திருக்கும்.

தன் கடைசி ஆட்டம் சென்னையில்தான் இருக்கும் என கூறியிருக்கும் தோனி, அடுத்த ஐபிஎல்லில் கோப்பையுடன் விடைபெறுவார் என எதிர்பார்ப்போம்!