கிரிக்கெட்
ஆசிரியர் பக்கம்
Published:Updated:

டைம் அவுட்

டைம் அவுட்
பிரீமியம் ஸ்டோரி
News
டைம் அவுட்

ஹீமா தாஸின் பதக்கவேட்டை பரபரக்கிறது.கடந்த மாதம் வெவ்வேறு நாடுகளில் நடந்த சர்வதேச தடகளப் போட்டிகளில் பங்கேற்ற ஹீமா, 19 நாள்களில் 5 தங்கப்பதக்கங்கள் வென்று அசத்தியிருக்கிறார்.

டைம் அவுட்

அஸாமைச் சேர்ந்த 19 வயதேயான இந்த வேகப்புயல், பதக்க வேட்டை நடத்திக்கொண்டே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அஸாம் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். தனது ஒரு மாத சம்பளத்தில் பாதியை வெள்ள நிவாரணத்துக்கு வழங்கிய ஹீமாவுக்கு பராட்டுக்கள் குவிகின்றன. வாழ்த்துகள் தங்கப்பெண்ணே!

டைம் அவுட்
டைம் அவுட்

2019 விம்பிள்டனின் ஆச்சர்யம், 15 வயது சிறுமி காரி கோகோ காஃப். விம்பிள்டன் விம்பிள்டன் போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற மிக இள வயது வீராங்கனையான கோகோ, முன்னணி வீராங்கனைகளுக்கு தோல்வியைப் பரிசளித்து அதிரவைத்தார். முதல் சுற்றிலேயே ஐந்து முறை விம்பிள்டன் சாம்பியன் வென்ற வீனஸ் வில்லியம்ஸை வெளியேற்றி டென்னிஸ் உலகின் கவனத்தை ஈர்த்தார். நான்காவது சுற்றில் கோகோவைத் தோற்கடித்து ஆச்சர்யங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்தார் ஹேலப். ஆரம்பமே அதரடிக்குது!

டைம் அவுட்

ந்திய அணிக்குள் பிளவு என கிசுகிசு செய்திகள் அலறடிக்கின்றன. இந்தியாவின் கேப்டன் கோலிக்கும், துணை கேப்டன் ரோஹித்துக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாக கவர்ஸ்டோரிகள் தினம் ஒன்றாக எழுதப்பட்டுவரும் நிலையில், ஓய்வு எடுப்பதாக இருந்த கோலி வெஸ்ட் இண்டீஸ் டூருக்குப் புறப்பட்டிருக்கிறார். உலகக்கோப்பை போட்டித் தொடர் முழுவதும் மனைவியுடன் தங்கினார் ரோஹித், இதற்கு கோலியிடம் அனுமதி பெறவில்லை என கோலி தரப்பும், பும்ரா, பாண்டியா உள்ளிட்ட மும்பை வேகப்பந்து வீச்சாளர்களை மரியாதையுடன் கோலி நடத்தவில்லை என ரோஹித் தரப்பும் குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றன. வெஸ்ட் இண்டீஸ் டூரில் பிளவு சரிசெய்யப்படலாம் அல்லது விவகாரம் வெடிக்கலாம். #சண்டைப்போடாதீங்க ப்ரோஸ்!

டைம் அவுட்

ங்கிலாந்தில் நடைபெற்று வரும் பெண்களுக்கான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம்தான். இன்னும் டி-20 தொடர் ஆரம்பிக்காத நிலையில், டெஸ்ட் போட்டியை டிரா செய்து, ஒரு நாள் தொடரை வென்று ஆஷஸ் தொடரில் முன்னிலை வகிக்கிறது ஆஸ்திரேலிய அணி. குறிப்பாக, மூன்றாவது ஒரு நாள் போட்டியின்போது, 7 விக்கெட்டுகள் வீழ்த்திய எல்லீஸ் பெர்ரி, இங்கிலாந்து பேட்ஸ்வுமன்களை சொந்த மண்ணிலேயே திக்குமுக்காட வைத்துவிட்டார். #ப்ரவுட் ஆஃப் யூ பெர்ரி!

டைம் அவுட்
டைம் அவுட்

கால்பந்தின் வேர்களைத் தேடிச்சென்றால் கோபா அமெரிக்காவைத் தொடாமல் இருக்கமுடியாது. தற்போது இருக்கும் விளம்பரங்களின் யுகத்தில், பளபளப்பான UEFA கோப்பைகளுக்கு நடுவே மறைந்துகொண்டிருக்கும் ஒரு பிரமாண்டம் கோபா அமெரிக்கா. தென் அமெரிக்க கண்டத்துக்குள் நடக்கும் இந்த போட்டி உலகக்கோப்பையை விட பழைமையானது. தென் அமெரிக்க கால்பந்து அசோசியேஷனான CONMEBOL-ஐ விட பழைமையானது. நட்சத்திர வீரர் நெய்மர் இல்லாமலேயே இந்த தொடரில் கலக்கிய பிரேசில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோப்பையை கையில் ஏந்தியுள்ளது. #பிராவோ பிரேசில்!

டைம் அவுட்

ரு காலத்தில், சாம்பியன் அணிகளையும் அசைத்துப் பார்த்த ஜிம்பாப்வே அணிக்கு ஐசிசி இடைக்காலத் தடைவிதித்திருக்கிறது. ஜிம்பாப்வே கிரிக்கெட் அமைப்பின் செயல்பாட்டில் அரசின் தலையீடு அதிகமாக இருப்பதாலும், விதிமீறில்களை மீறி நடந்து கொள்வதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. ஐசிசி-யின் இந்த முடிவுக்கு ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி கேப்டன் சிக்கந்தர் ராசா, ``நீங்கள் ஜிம்பாப்வேயில் கிரிக்கெட்டை தடை செய்துவிட்டீர்கள். சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் எங்கு செல்வது எனத் தெரியாமல் உள்ளனர். நாங்கள் எங்கள் கிரிக்கெட் உபகரணங்களை எரித்துவிட்டு வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டியதுதான்" என வேதனை தெரிவித்திருக்கிறார். #கண்ணீரில் கிரிக்கெட்டர்ஸ்!