Published:Updated:

Ind vs Sl : ஒரே இன்னிங்ஸ், ஜடேஜாவின் மூன்று வெர்ஷன்கள் !

Ind vs Sl

முதலிரண்டில் இல்லாதவாறு தற்போது தன் பேட்டிங்கை டாப் கியருக்கு மாற்றி இலங்கை பௌலர்களை விளாசித் தள்ளினார் ஜடேஜா

Ind vs Sl : ஒரே இன்னிங்ஸ், ஜடேஜாவின் மூன்று வெர்ஷன்கள் !

முதலிரண்டில் இல்லாதவாறு தற்போது தன் பேட்டிங்கை டாப் கியருக்கு மாற்றி இலங்கை பௌலர்களை விளாசித் தள்ளினார் ஜடேஜா

Published:Updated:
Ind vs Sl

இந்திய அளவில் ஏன் உலக அளவிலான கிரிக்கெட் அரங்கில் தன் பேட்டிங் திறனை அசாத்திய அளவில் முன்னேற்றி இருக்கும் வீரராக ரவீந்திர ஜடேஜாவை நிச்சயம் கைகாட்டலாம். 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்று பயணத்தில் மிகசிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியது, கடந்த ஐ.பி.எல் தொடரில் ஃபினிஷராக தன்னை நிலைநிறுத்தியது என தன் பேட்டிங்கை திறனை தொடர்ந்து நிரூபித்து வந்த ஜடேஜா தன் டெஸ்ட் கரியரின் மிக சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை நேற்று அரங்கேற்றினார்.

 ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா

நேற்றைய இன்னிங்ஸை ஜடேஜா கட்டமைத்த விதம் அபாரமானது. 6-வது விக்கெட்டிற்காக களமிறங்க அவர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 175 ரன்களை குவித்திருந்தார். அதில் 3 நூறு ரன் பார்ட்னர்ஷிப்பும் அடங்கும். அந்த மூன்றிலும் வெவ்வேறு பரிமாணங்களில் ஆடியிருப்பார் ஜடேஜா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதல் நாளின் ஆட்டத்தில் ஷ்ரேயாஸின் விக்கெட்டிற்குப் பிறகு ஜடேஜா களமிறங்கியபோது அணியின் ஸ்கோர் 228/5. மறுமுனையில் ஆடிவந்த பன்ட்டிற்கு தன் இயல்பான ஆட்டம் தான் பலம் என்பதை நன்கு உணர்ந்து சப்போர்ட்டிங் இன்னிங்ஸை ஆடத் தொடங்கினார் ஜடேஜா. அணியின் ரன்-ரேட் தொடக்கத்தில் இருந்தே நான்கிற்கு மேல் இருந்தால் ஜடேஜாவின் பேட்டில் இருந்தும் ரன்கள் வந்துகொண்டு தான் இருந்தன.

 ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா

சிக்ஸர்களும், ஃபோர்களுமாக ஒருபுறம் பன்ட் விளாசிக் கொண்டிருக்க இருவரும் இடையிலான பார்ட்னர்ஷிப் நூறை கடந்து அணியின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. 96 ரன்களுக்கு லக்மல் பந்தில் பன்ட் போல்டான போது இந்திய அணியின் ஸ்கோர் 332. அவர்கள் அமைத்த 102 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் வெறும் 35 ரன்களை மட்டுமே அடித்திருந்தார் ஜடேஜா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்ததாகக் களமிறங்கியவர் ரவிச்சந்திரன் அஷ்வின். தற்போது தன் கியரை லேசாக முன்நகர்த்தினார் ஜடேஜா. அரைசதம் கடந்து ஆடிக்கொண்டிருந்த அவருக்கு இணையாக அஷ்வினும் இலங்கை பௌலர்களை தொடக்கத்தில் இருந்தே எளிதாக எதிர்கொள்ள இரண்டு முனைகளில் இருந்தும் ரன்கள் பரவலாக வந்துக்கொண்டிருந்தன. ஜடேஜா சதம் அடிக்க ஒரு ரன் மட்டுமே இருக்க 61 ரன்களில் தன் விக்கெட்டை இழந்தார் அஷ்வின். அந்த இருவர் கூட்டணி இணைந்து சேர்த்த மொத்த ரன்கள் 130. அதில் சரிசமமாக 64 ரன்களை அடித்திருந்தார் ஜடேஜா.

 ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா

ஜடேஜாவின் மூன்றாவது 100 ரன் பார்ட்னர்ஷிப் முகமது ஷமி உடனான கூட்டணியில் வந்தது. முதலிரண்டில் இல்லாதவாறு தற்போது தன் பேட்டிங்கை டாப் கியருக்கு மாற்றி இலங்கை பௌலர்களை விளாசித் தள்ளினார் ஜடேஜா. பெரும்பாலான ஓவர்களில் பவுண்டரிக்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்க அணியின் ஸ்கோர் 500-ஐ எட்டியது . இருவரின் பாட்னர்ஷிப் 50-ஐ கடந்த போது தன் ரன் கணக்கையே தொடங்கி இருக்கவில்லை ஷமி.

இறுதியாக 574 ரன்களுக்கு டிக்ளேர் செய்வதாக இந்திய கேப்டன் அழைத்தபோது இருவரின் பார்ட்னெர்ஷிப்பும் 103 ரன்களாக இருந்தது. அதில் 71 ரன்கள் ஜடேஜாவின் பேட்டில் இருந்து வந்தன. பன்ட்டுடன் அவர் அடித்த 35 ரன்கள் 67 பந்துகளில் வந்தன. அதற்கடுத்து வந்த அஷ்வின் உடனான 64 ரன்களுக்கு 91 பந்துகளும், கடைசி 71 ரன்களுக்கு வெறும் 60 பந்துகளே எடுத்துக்கொண்டார் ரவி ஜடேஜா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism