Published:Updated:

`கோலி, ஸ்மித் யார் சிறந்தவர்கள்?!’ - சச்சின் கொடுத்த மாஸ் ரிப்ளே

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

சிட்னி மைதானத்துக்குச் சென்ற சச்சின் அங்கிருந்த வீரர்களின் தங்கும் அறைக்குச் சென்றார். அங்கு அவர் தன் பழைய நினைவுகளில் மூழ்கினார்.

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிதிரட்டும் நோக்கத்தில் 10 ஓவர்கள் கொண்ட கண்காட்சி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் ஆகியோர் ஆஸ்திரேலியா பயணமாகியுள்ளனர். ரிக் பாண்டிங் தலைமையிலான அணியின் பயிற்சியாளராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார். யுவராஜ் சிங் ஆடம் கில்கிறிஸ்ட் அணியில் விளையாடவுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

இந்தப் போட்டி நாளை நடைபெறவிருந்த நிலையில் சிட்னியில் பெய்துவரும் மழையின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்டுள்ளது. சிட்னி மைதானத்துக்குச் சென்ற சச்சின் அங்கிருந்த வீரர்கள் தங்கும் அறைக்குச் சென்றார். அங்கு அவர் தன் பழைய நினைவுகளை அசைப்போட்டார். சச்சின் பழைய நினைவுகளில் மூழ்கியதை உடன் இருந்த யுவராஜ் சிங் அதைப் படம்பிடித்துள்ளார்.

`ஃபீல்டிங் சிறப்பாகவே செய்தோம்... தவறவிட்ட ஒரு வாய்ப்புதான்!' - விராட் கோலி #NZvIND

இந்தப் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள சச்சின், ``எஸ்சிஜி டிரெஸ்ஸிங் ரூமில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த கார்னர்தான். அந்த நினைவுகளில் நான் மீண்டும் மூழ்கிவிட்டேன்” எனப் பதிவிட்டுள்ள சச்சின் போட்டோ எடுத்தது யுவி எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சிட்னியில் நடந்த பிரஸ் மீட்டில் கோலி, ஸ்டீவ் ஸ்மித் குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த இருவரில் யார் சிறந்தவர் என்ற கேள்வியை முன்வைத்து பல்வேறு விவாதங்கள் கிளம்பி வருகின்றன. இதனால் சச்சினின் பதிலை எல்லோரும் ஆவலாக எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.

நிறைய வீரர்களுடன் என்னை ஒப்பிட்டுப் பேசினார்கள். என்னை தனியாக விட்டுவிடுங்கள் என்றேன்.
சச்சின்

``விராட் என்னுடைய நண்பர். பொதுவாக ஒருவருடன் ஒப்பிட்டுப் பேசுவது எனக்குப் பிடிக்காது. நிறைய வீரர்களுடன் என்னை ஒப்பிட்டுப் பேசினார்கள். என்னைத் தனியாக விட்டுவிடுங்கள் என்றேன். இருவரும் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் பார்த்து ரசிக்க வேண்டும். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தை அவர்கள் உற்சாகப்படுத்துகிறார்கள். அதை நான் உற்சாகமாகக் கண்டுகளிக்க வேண்டும். இந்த இருவரில் ஒருவரை எடுக்க வேண்டும் என்று கூறினால் ஒரு இந்தியன் ஒரு இந்தியரைத் தேர்வு செய்தார் என எடுத்துக்கொள்ளுங்கள்” என மாஸாக ரிப்ளே கொடுத்தார்.

அடுத்த கட்டுரைக்கு