Published:Updated:

`தல'ங்கிறது வெறும் வார்த்தை இல்ல.. பாசம், மரியாதை!' -சிஎஸ்கே ரசிகர்கள் குறித்து நெகிழ்ந்த தோனி

தோனி
தோனி

சிஎஸ்கே ரசிகர்கள் குறித்து ஆங்கில ஊடகத்தில் தோனி பேசியதுதான் இப்போது ஹைலைட்.

அதே க்ளாஸ்... அதே மாஸுடன் சென்னையில் காலடி எடுத்து வைத்துவிட்டார் ‘தல’ தோனி. ஐபிஎல் திருவிழா ஆரம்பமாகும் முன்பே சேப்பாக்கம் களைகட்டத்தொடங்கிவிட்டது. தோனி வருகையை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். வாஸ்ட் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் எனத் திரும்பிய பக்கமெல்லாம் தோனிஸம்தான். தோனி சென்னைக்கு வந்திறங்கியது, ரெய்னா ஆரத்தழுவி வரவேற்றது, சேப்பாக்கம் மைதானத்தில் தோனி பயிற்சி செய்யும் புகைப்படம் எனத் திரும்பிய பக்கமெல்லாம் சிஎஸ்கே ரசிகர்கள் மாஸ் காட்டுகிறார்கள்.

தோனி
தோனி

தோனி குறித்து ரசிகர்கள் கேட்டால் பக்கம் பக்கமாகப் பேசுவார்கள். சிஎஸ்கே ரசிகர்கள் குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்குத் தோனி பேசியதுதான் இப்போது ஹைலைட்.

``சிஎஸ்கேவுக்கு எனக்குமான இந்தப் பயணம் 2008-ல் தொடங்கியது. சென்னை ரசிகர்கள் யாரும் என்னைப் பெயர் சொல்லி அழைக்கமாட்டார்கள். அவர்கள் எப்போது என்னை ‘தல’ என்றுதான் அழைப்பாளர்கள். சகோதரன் என்ற பாசத்தில் `தல’ என்று அழைக்கிறார்கள். அது அவர்கள் எனக்குக் கொடுக்கும் மரியாதையையும் அன்பையும் காட்டுகிறது. தென்னிந்தியா பக்கம் வந்தாலே இங்கே யாரும் என்னைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை. 'தல' என்றுதான் அழைப்பார்கள். தல-ங்கிற வார்த்தை அவங்க என் மேல வச்சிருக்க அன்பைக் காட்டும். மேலும் அவர்கள் அனைவரும் சிஎஸ்கே ரசிகர்களாக இருப்பார்கள்.

பயிற்சியில் சென்னை அணி
பயிற்சியில் சென்னை அணி

சிஎஸ்கே பல வழிகளில் என்னுடைய முன்னேற்றத்திற்குக் காரணியாக இருந்துள்ளது. களத்தில் மற்றும் வெளியே ஒரு மனிதனாக, கிரிக்கெட் வீரராகக் கடினமான சூழ்நிலைகளைக் கையாள்வது மற்றும் சிறப்பாகச் செயல்பட்டவுடன் எவ்வாறு தாழ்மையுடன் இருப்பது போன்ற கலையைக் கற்றுக்கொள்ள உதவியது” என சென்னைக்கும் தனக்குமான பிணைப்பைக் கூறியுள்ளார் தோனி.

அடுத்த கட்டுரைக்கு