Published:Updated:

போராடினேன்... தேர்ச்சி பெற்றேன்... ஒதுக்கிட்டாங்க..!- பிசிசிஐ-க்கு எதிராகப் பாயும் யுவராஜ் சிங்

Yuvraj singh

‘நீங்கள் ஒரு வீரரிடமிருந்து சிறந்ததைப் பெற விரும்பினால், அவர் பாதுகாப்பாக உணர வேண்டும். ஒரு வீரர் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும்போது அவரால் ஒருபோதும் சிறப்பாகச் செயல்பட முடியாது.'

Published:Updated:

போராடினேன்... தேர்ச்சி பெற்றேன்... ஒதுக்கிட்டாங்க..!- பிசிசிஐ-க்கு எதிராகப் பாயும் யுவராஜ் சிங்

‘நீங்கள் ஒரு வீரரிடமிருந்து சிறந்ததைப் பெற விரும்பினால், அவர் பாதுகாப்பாக உணர வேண்டும். ஒரு வீரர் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும்போது அவரால் ஒருபோதும் சிறப்பாகச் செயல்பட முடியாது.'

Yuvraj singh

``போராடுவது, வீழ்வது அந்த வீழ்ச்சியிலிருந்து எழுந்து மீண்டும் முன்னேறி நடப்பது எப்படி என்பதை இந்த விளையாட்டு எனக்குக் கற்றுத்தந்தது. அது ஓர் அழகான கதை. அந்தக் கதை இப்போது முடிவுக்கு வந்தது''- ஓய்வு முடிவை அறிவித்தபோது, யுவராஜ்சிங் உதிர்த்த வார்த்தைகள் இவைதான். அந்தக் கதையின் முடிவு யுவராஜுக்கு மட்டுமல்ல இந்திய ரசிகர்களுக்கும் நிறைவைக் கொடுக்கவில்லை. ஓய்வு என் வாசலையும் ஒருநாள் தட்டும் என எல்லா வீரனுக்கும் தெரியும். இந்தியாவின் கனவையும் ஏக்கத்தையும் தீர்த்தவன். தனது விருப்பத்தை செவிகொடுத்துக் கேட்க ஆள் இல்லாத விரக்தியில், யுவி எனும் மகத்தான வீரன் தனது ஓய்வை அறிவித்தான்.

Yuvraj singh
Yuvraj singh

ஓய்வு முடிவு, இந்திய அணியில் சந்தித்த பிரச்னைகள் குறித்து செய்தி ஊடகமான Aaj Tak -யிடம் யுவராஜ் பேசியுள்ளார். “கேன்சரில் இருந்து நான் மீண்டு வந்த பின்னர், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். உள்ளூர் தொடர்களில் சரியாக ரன்களைக் குவிக்க முடியாமல் இரண்டு வருடங்களாகத் தடுமாறினேன். அந்தச் சூழலில் கடுமையாக உழைத்தேன். அதன் பலனாக மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பினேன். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில், எனது அதிகபட்ச ரன்களைக் குவித்தேன். அது மிகப்பெரிய சாதனை. ஆனால், அதன் மறுபக்கம் மிகவும் வேதனையானது. நிர்வாகத்திடம் இருந்தோ அல்லது அதைச் சுற்றியிருந்த மக்களிடம் இருந்தோ எந்த ஆதரவும் இல்லை. எனக்கு அந்த ஆதரவு கிடைத்திருந்தால் உலகக் கோப்பையில் ஆடியிருப்பேன்.

நான் எந்த காட் ஃபாதரையும் கொண்டிருக்கவில்லை. புற்றுநோயிலிருந்து மீண்டு வந்து கிரிக்கெட் ஆடியதே மகிழ்ச்சி. 2017 அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட சமயத்தில், நான் 8 முதல் 9 போட்டிகளில் விளையாடியிருந்தேன். அதில், 2 போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது பெற்றேன். அப்போது, என்னுடைய ஆவரேஜ் 42 ப்ளஸ் , ஸ்ட்ரைக் ரேட் 98-ஆக இருந்தது. மிடில் ஆர்டரில் சிறப்பாகத்தான் செயல்பட்டிருந்தேன். காயம் காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டியிலிருந்து விலகினேன். இலங்கை அணிக்கு எதிரான தொடருக்குத் தயாராகும் விதமாக, அந்த முடிவை எடுத்தேன். அந்தக் காலத்தில், திடீரென யோ-யோ டெஸ்ட் இந்திய அணியில் அறிமுகமானது. என்னுடைய தேர்விலும் அது ஒரு திருப்புமுனையாக மாறியது. 36 வயதில் யோ-யோ டெஸ்ட்டுக்காகக் கடுமையாக உழைத்தேன். என்னால் அதில் தேர்ச்சிபெற முடியாது என்றே நினைத்தார்கள். யோ-யோ டெஸ்ட்டில் தேர்ச்சியடைந்தேன். மீண்டும் உள்ளூர் தொடர்களில் விளையாட அறிவுறுத்தப்பட்டேன். ஏற்கெனவே, அதைத்தான் செய்துகொண்டிருந்தேன்.

Yuvraj singh
Yuvraj singh

உண்மையில் நான், யோ-யோ டெஸ்ட்டில் தேர்வாக மாட்டேன் என்றுதான் அவர்கள் நினைத்திருந்தார்கள். ஏனெனில், அது சற்று கடினமானதாக இருந்தது. அதுமட்டுமல்லாமல், நான் அதில் தேர்ச்சிபெறவில்லை என்றால், என்னிடம் எளிதாகத் தெரிவித்துவிடலாம் என நினைத்திருக்கலாம். சர்வதேச கிரிக்கெட்டில் 15 முதல் 17 வருடங்கள் விளையாடிய ஒரு வீரரை எதற்காக ஒதுக்குகிறீர்கள் எனக் கூற வேண்டும். நீங்கள் அவருடன் அமர்ந்து காரணத்தை விளக்க வேண்டும். யாரும் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.

எனக்கு மட்டும் இந்தப் பிரச்னையில்லை. விரேந்திர சேவாக், ஜாகீர் கான் ஆகியோரிடம் தெரிவிக்கவில்லை. அவர்களை ஒப்பிடும்போது, நான் அந்த அளவிற்கு கிரிக்கெட் ஆடவில்லை. ஆனால், ஒரு வீரரை ஒதுக்கும்போது அவரிடம் சரியான காரணத்தைக் கூற வேண்டும். அந்தப் பொறுப்பில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து, இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும்பொருட்டு இந்த முடிவை எடுத்துள்ளோம் எனக் கூறலாம். முதலில் வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால், முகத்திற்கு நேராக உண்மையைக் கூறினார்கள் என்று பெருமை கொள்ளலாம்.

Yuvraj singh
Yuvraj singh

உலகக்கோப்பை தொடரில் அரையிறுதியுடன் இந்தியா வெளியேறியதற்கு, தெளிவு இல்லாத முடிவே காரணம். நான் ஓரங்கட்டப்பட்ட பின் மனிஷ் பாண்டே, கே.எல்.ராகுல் இன்னும் 2 வீரர்கள் அணியில் இடம்பிடித்தனர். கே.எல்.ராகுலைக் கொண்டு வந்தனர். அதன்பின் ரெய்னா ஆடினார். ராயுடுவுக்கு சிறிது மாதங்கள் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவரும் 8 மாதங்கள் தொடர்ந்து ஆடினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 90 ரன்கள் எடுத்தார். அந்தப் போட்டியில், அவருக்கும் ஆட்டநாயகன் விருது கிடைத்தது. அணியும் அப்போது ஒரு நல்ல கலவையுடன் சிறப்பாக இருந்தது. உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 3-2 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது. அது, ராயுடுவுக்கு மோசமான தொடராகவும் அமைந்தது.

ராயுடுவை விலகிவிட்டு, விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கினார்கள். உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியில் 4-வது இடத்தில் ஆடிய வீரர், அதிகபட்சமாக 48 ரன்களைத்தான் எடுத்திருந்தார். இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இங்கிலாந்து கண்டிஷனில் நம்பர் 4 என்ற இடம் எவ்வளவு முக்கியமானது என்பது கேப்டன், பயிற்சியாளர், பேட்டிங் கோச் என யாருக்கும் தெரியவில்லையா? அந்த இடத்தில் ஆடும் வீரர் டெக்னிக்கலாக வலுவாக இருக்க வேண்டும். அதேபோல், அவருக்கு நிறைய வாய்ப்புகள் வழங்க வேண்டும்.

போராடினேன்... தேர்ச்சி பெற்றேன்... ஒதுக்கிட்டாங்க..!- பிசிசிஐ-க்கு எதிராகப் பாயும் யுவராஜ் சிங்

விஜய் சங்கருக்குப் போதிய அனுபவம் இல்லை. ரிஷப் பன்ட் -க்கும் அதே பிரச்னைதான். தினேஷ் கார்த்திக் அனுபவம் மிக்க வீரர். ஆனால், அவரை வெளியில் அமரவைத்துவிட்டு திடீரென அரையிறுதியில் ஆடவைக்கிறீர்கள். என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நீங்கள், ஒரு வீரரிடமி ருந்து சிறந்ததைப் பெற விரும்பினால், அவர் பாதுகாப்பாக உணர வேண்டும். ஒரு வீரர் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும்போது, அவரால் ஒருபோதும் சிறப்பாக செயல்பட முடியாது. இதுதான், இந்தியா உலகக்கோப்பையை வெல்ல முடியாததற்கான காரணம். உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் வலுவானதாக இருந்தது. இந்தியா, இறுதிப் போட்டியில் விளையாடியிருக்கக்கூடாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.

எந்தச் சூழலில் இருக்கிறோம் என்பதை ரிஷப் பன்ட் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் பற்றி நிறைய விமர்சனங்கள் வருகின்றன. அது, வரவேண்டிய அவசியம் இல்லை. அவரது சூழலில் இருந்து புரிந்துகொள்ள வேண்டும். ரஞ்சி டிராபி போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக இரண்டு சதங்களைப் பதிவுசெய்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிவருகிறார். அவர், 10 ஒருநாள் போட்டியில்தான் விளையாடியுள்ளார். அவரிடம் நீங்கள் இன்னும் என்ன எதிர்பார்ப்பு வைத்துள்ளீர்கள்? அணியின் பயிற்சியாளர், தேர்வுக்குழுவினர் அவரிடம் அமர்ந்து பேச வேண்டும். அணி மோசமாக இல்லை. தொடர்ந்து வெற்றிபெற வேண்டும். வீரர்களின் திறன்களை வளர்க்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.