Published:Updated:

`ஐபிஎல், டெஸ்ட் போட்டிகளுக்கான தகுதி கிடையாது!’ - சச்சின் டெண்டுல்கர் காட்டம்

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல வேகப்பந்துவீச்சாளர்களும், தரமான ஆடுகளங்களும் இல்லாதது, அதன் தரத்தை குறைத்துக் காட்டுவதாக சச்சின் டெண்டுல்கர் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி நாளையுடன் 30 ஆண்டுகள் ஆகின்றன. 1989 நவம்பர் 15-ம் தேதி, சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெடுத்துவைத்தார். இப்போது, ரசிகர்கள் மத்தியில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வரவேற்பு குறைந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டை ரசிகர்களிடம் கொண்டுசேர்க்கும் முயற்சியாகத்தான் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டிகள் ஐசிசி ஆல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டின் நிலை வேதனை அளிப்பதாக சச்சின் கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர்!
சச்சின் டெண்டுல்கர்!

``டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் குறைந்துவிட்டது என்பது நல்ல செய்தியல்ல. கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும். இது, விளையாடக்கூடிய இடத்தைப் பொறுத்தது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் ஒத்துழைப்பு அளிக்கும் ஆடுகளங்கள் இருந்தால், பந்துவீச்சாளர்களுக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் இடையே நல்ல போட்டியாக அமையும். இதில் ஏதாவது ஒருபக்கம் குறை இருந்தால், பலவீனம் வெளிப்படும். இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டி சிறப்பாக இருந்தது. அந்த பிட்ச் சிறப்பாக இருந்தது.

`டீ கொடுத்தனர்; அவர்களுக்கு எங்களை யாரென்றே தெரியவில்லை..!’ - கோலி பிறந்தநாளில் நெகிழ்ந்த அனுஷ்கா

உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் தற்போது குறைவாகவே உள்ளனர். இன்றைய காலகட்டத்தில், நான் அதைக் கண்டிப்பாக மிஸ் செய்கிறேன். ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்கள், இந்திய டி-20 அணிக்குத் தேர்வுசெய்யப்படுகிறார்கள். இது நல்ல விஷயம்தான். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படும் வீரரை ஒரு நாள் போட்டிக்கும், டெஸ்ட் போட்டிக்கும் தேர்வுசெய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது எந்த விதத்தில் சாத்தியமாகும்? ஒரு சில வீரர்கள் மட்டும்தான் இதில் விதிவிலக்கு. பும்ரா அதற்கு ஓர் உதாரணம். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால், அதை டி-20 போட்டிக்கான அளவுகோலாக மட்டும் எடுக்க வேண்டும்.

`ஐபிஎல், டெஸ்ட் போட்டிகளுக்கான தகுதி கிடையாது!’ - சச்சின் டெண்டுல்கர் காட்டம்

1998-ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலியா தொடர் வார்னேவுக்கும் எனக்கும் இடையிலான போட்டியாக பார்க்கப்பட்டது. வார்னே, என்னை ரவுண்ட் தி விக்கெட்டில் டார்கெட் செய்வார் என எதிர்பார்த்தேன். அதனால், மும்பை பந்துவீச்சாளர்களுடன் ஹோம்வோர்க்-கில் ஈடுபட்டேன். மும்பை லெக் ஸ்பின்னர் சாய்ராஜ் பகதுலே, இடதுகைப் பந்துவீச்சாளர் நிலேஷ் குல்கர்னி ஆகியோரின் பந்துவீச்சில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டேன்.

`அமைதியா இருக்கேன் பலவீனமா இல்ல’ - ட்விட்டரில் லெப்ட் ரைட் வாங்கிய அனுஷ்கா ஷர்மா!

1991-ம் ஆண்டு, பெர்த்தில் நான் அடித்த சதத்தை எதனுடனும் ஒப்பிட முடியாது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் என்னுடைய வருகையை சத்தம் போட்டு அறிவிக்க விரும்பினேன். எனக்கு அந்த சதம் உதவியது. சென்னையில், முதுகு வலியுடன் 1999-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த சதம், சிட்னியில் அடித்த இரட்டை சதம். அதேபோல், 2011-ம் ஆண்டு டேல் ஸ்டெயின் பந்துவீச்சை கேப்டவுனில் எதிர்கொண்டு விளையாடியது, அழகு மற்றும் சவால் நிறைந்த நினைவுகள்.

`ஐபிஎல், டெஸ்ட் போட்டிகளுக்கான தகுதி கிடையாது!’ - சச்சின் டெண்டுல்கர் காட்டம்

நான் 5 தலைமுறை வீரர்களுடன் விளையாடியிருக்கிறேன். எனக்கு முந்தைய தலைமுறையில் கபில் தேவ், ரவி சாஸ்திரி, ஸ்ரீகாந்த், திலிப் வெங்சர்க்கார், முகமது அசாருதீன் ஆகியோருடன் விளையாடியிருக்கிறேன். என்னுடைய தலைமுறையில் கங்குலி, டிராவிட் ஆகியோருடன் விளையாடினேன். அதன்பின் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், சேவாக், நெஹ்ரா ஆகியோருடன் விளையாடினேன். அதையடுத்து, சுரேஷ் ரெய்னா தலைமுறையினர். அவர்களைத் தொடர்ந்து விராட்கோலி, ரோஹித் சர்மா, ரஹானே ஆகியோருடன் நான் விளையாடியிருக்கிறேன். இவர்களின் கிண்டல், விளையாட்டு, புன்னகை என அனைத்தையும் மிஸ் செய்கிறேன். ஓய்வு அறை என்பது ஒரு கோயில் போன்றது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு