2003-ம் ஆண்டு. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இருண்ட காலம். சூதாட்ட புகாரில் சிக்கி அணியின் கேப்டனே விசாரணை வளையத்திற்குள் தவித்துக்கொண்டிருக்க, அதற்கடுத்து கேப்டனாகிறார் இன்னொருவர். ஆனால், உலகக்கோப்பையில் அடைந்திருந்த மிக மோசமான தோல்வி அவரின் பதவியையும் விரைவிலேயே பறித்தது. தோல்விகள், சூதாட்ட புகார்கள், பிரிவினைவாதம் என ஒட்டுமொத்த அணியும் மிக மோசமான சூழலில் தவித்துக்கொண்டிருந்த நேரம் அது. அப்போது அணியின் புதிய கேப்டனாக 23 வயதே நிரம்பிய கிரேம் ஸ்மித்தைக் கைகாட்டுகிறது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.

கேப்டனாக போதிய அனுபவமின்மை, சீனியர்களின் ஆதிக்கம், தொடர் தோல்விகள் என அந்த இளைஞனுக்கு முன்னால் எக்கச்சக்க சவால்கள் காத்திருந்தன. ஆனால் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியை என்றேனும் ஒரு நாள் தலைமை தாங்கி நடத்தவேண்டும் என்பதை கனவாய் கொண்டிருந்த ஸ்மித் இவை அனைத்திற்கும் தயாராகவே இருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கேப்டனாக முதல் சுற்றுப்பயணம் இங்கிலாந்திற்கு. 'ஸ்மித்தா யார் அது?' என்று பத்திரிக்கையாளர்களிடம் நக்கலாக கேட்டிருந்தார் இங்கிலாந்து கேப்டன் நசீர் ஹுசைன். அந்த தொடரோடு கேப்டன் பதவியிலிருந்து விலகிவிடலாம் என்று நினைத்திருந்த அதே நசீர் ஹுசைன் திடீரென்று தன் விலகலை முதல் போட்டியோடே அறிவித்தார். அதற்கான முக்கிய காரணம் பேட்டால் ஸ்மித் அளித்திருந்த அந்தப் பதிலடி.
அப்படி என்ன பதிலடி கொடுத்தார் ஸ்மித்? சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த கேப்டனாக உயர்ந்த அவரின் முழு பயணத்தை கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.