Published:Updated:

`டி20 போன்றதொரு புரட்சி நடக்கும்!’ - யுவராஜ் நம்பும்`The Hundred' கிரிக்கெட் தெரியுமா?

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்து நாட்டில் `The Hundred' என்னும் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.

`The Hundred'
`The Hundred' ( Twitter/ESPNcricinfo )

கிரிக்கெட் விளையாட்டு பல்வேறு கட்டங்களைத் தாண்டி வந்துள்ளது. ஆரம்பத்தில் டெஸ்ட் போட்டிகள் மீது இருந்த மோகம் ஒருநாள் போட்டிகள் மீது சென்றது. அதன் பின்னர் டி20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகமாகின. கிரிக்கெட்டில் பெரும் புரட்சியை இந்த வகை போட்டிகள் கொண்டு வந்தன.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்,
டெஸ்ட் சாம்பியன்ஷிப்,

எனினும் இதுபோன்ற அதிரடியான போட்டிகள் டெஸ்ட் போட்டிகளின் தரத்தையும் மதிப்பையும் குறைத்து விடுவதாகக் குற்றசாட்டு வந்தது. சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளைக் காண ரசிகர்கள் மைதானம் வருவது குறைந்துவிட்டது. கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்ட இந்தியாவிலே ராணுவ வீரர்களுக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கும் இலவசமாக டிக்கெட் கொடுத்து டெஸ்ட் போட்டி மைதானத்துக்கு அழைத்து வரும் நிலை உள்ளது. இதனால் டெஸ்ட் போட்டிகளுக்கான மதிப்பை உயர்த்தும் வகையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அறிமுகம் செய்யப்பட்டது.

நிலைமை இப்படி இருக்க, டி20 போட்டிகளுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 10 ஓவர்கள் கொண்ட டி10 தொடர்கள் தொடங்கப்பட்டது. அதிரடியான காட்சிகள் காணக் கிடைப்பதால் இங்கும் கூட்டம் கூடியது. தவிர சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத பல நாடுகளிலும் இந்த வகை கிரிக்கெட் போட்டிகள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின.

`டி20 போன்றதொரு புரட்சி நடக்கும்!’ - யுவராஜ் நம்பும்`The Hundred' கிரிக்கெட் தெரியுமா?

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்து நாட்டில் `The Hundred' என்னும் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. 8 அணிகள் மோதும் இந்தத் தொடரில் ஒரு இன்னிங்ஸுக்கு 100 பந்துகள் வீசப்படும். ஒரு போட்டியில், அதாவது இரு இன்னிங்ஸையும் சேர்த்து மொத்தம் 200 பந்துகள் வீசப்படும்.

இந்தத் தொடர் தொடர்பாகப் பேசிய இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ``100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடர் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன். டி20 போன்றதொரு புரட்சி இந்த வகை கிரிக்கெட்டுக்கும் கிடைக்கும் என நான் நினைக்கிறேன்” என்றார்.

முதல் உலகக் கோப்பை டி20
முதல் உலகக் கோப்பை டி20

சரி, `The Hundred' கிரிக்கெட் போட்டியின் விதிமுறைகளைப் பார்க்கலாம்... `ஒரு ஓவருக்கு ஒரு பந்துவீச்சாளர் 10 பந்துகள் வீசலாம். இதை 5 பந்துடன் முடித்துக்கொள்ளவும் முடியும். பின்னர் வந்து கூட மீதம் உள்ள 5 பந்துகளை வீசலாம். ஒரு பந்து வீச்சாளர் அதிகபட்சமாக 20 பந்துகள் வீசலாம். இதை இரண்டு முறை 10 பந்துகள் வீதமாகவோ அல்லது நான்கு முறை 5 பந்துகள் வீதமாகவோ வீசிக்கொள்ளலாம். இதை பந்துவீசும் அணியின் கேப்டன் முடிவு செய்வார்.

ஒரு இன்னிங்ஸின் முதல் 25 பந்துகள் பவர்ப்ளே ஆக இருக்கும். அப்போது 2 வீரர்கள் மட்டுமே எல்லைக்கோடு அருகே அனுமதிக்கப்படுவர். பந்துவீசும் அணி டைம்-அவுட்டைப் பயன்படுத்தி இரண்டரை நிமிட பிரேக் எடுத்துக்கொள்ளலாம்’!

ஒலிம்பிக்
ஒலிம்பிக்

நீண்டகாலமாகவே ஒலிம்பிக்தொடரில் கிரிக்கெட்டைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வரும் நிலையில், இந்த வகை போட்டிகள் ஒலிம்பிக் தொடர்களில் கிரிக்கெட்டை கொண்டு சேர்க்க வசதியாக இருக்கும் என்று யுவராஜ் கூறியுள்ளார்.

``ஒலிம்பிக் தொடரில் இரண்டு வாரம் அவகாசம் அளித்தால் 100 பந்துகள் கிரிக்கெட் தொடரை நடத்தலாம். அதுவே 10 நாள்களில் தொடரை நடத்தி முடிக்க வேண்டும் என்றால் டி10 போட்டிகளை அனுமதிக்கலாம்” என்று தெரிவித்தார் யுவராஜ் சிங்.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

மேலும், ஆண்டுக்கு இரண்டு மூன்று தொடர்களில் ஆடி வருவதாகவும் இதனால் தேவையான ஓய்வும் பிடித்தமான கிரிக்கெட்டும் தனக்குக் கிடைப்பதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.